Skip to main content

Posts

Showing posts from July, 2019

புது வடிவம் பெறும் எஸ்.எம்.எஸ்.

கடந்த 1992-ம் ஆண்டில்தான் முதன்முதலில் வணிக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை தொடங்கியது. ஆனால், அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான் தற்போதும் உள்ளன. அதே எழுத்து வடிவம்தான். அதற்குப்பிறகு வந்த எம்.எம்.எஸ். சேவையும் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. மாறாக வாட்ஸ்-அப், மெசெஞ்சர் போன்ற ‘இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்’கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன. இன்றைக்கு வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளில்தான் அதிக அளவில் எஸ்.எம்.எஸ். பயன்பட்டு வருகிறது. மற்றபடி பெரும்பாலான தகவலுக்கு வாட்ஸ்-அப்தான். எனவே வாட்ஸ்-அப் வருகையால், எஸ்.எம்.எஸ். மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக ஆர்.சி.எஸ். எனப்படும் ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. ‘ஆர்.சி.எஸ்.’ என்பது வெறும் எஸ்.எம்.எஸ். மட்டும் அல்ல. வாட்ஸ்-அப் போலவே இதிலும் படங்கள் அனுப்பலாம், வீடியோக்கள் ஷேர் செய்யலாம். குரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், கியூ.ஆர். கோடு போன்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும். கூடவே உதவுவதற்காக கூகுள் அசிஸ்டன்ட், இன்ஸ்டன்ட் ர

தொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...

டிவி வாங்க நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான

உலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்

மின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது. உலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோலார் பிளாஷ் லைட்

பலவிதமான பணிகளுக்கு பயன்படும் வகையிலான டார்ச் லைட் இப்போது ஹாலோ எக்ஸ்.டி. என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான பேட்டரி டார்ச் லைட் போல அல்லாமல் இது சூரிய மின்னாற்றலில் செயல்படும். இதன் மேல் பகுதி சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 வாட் லூமென் எல்.இ.டி. விளக்கு உள்ளது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க ஒரு பவர் பேங்க் இதில் உள்ளது. நீர் புகா தன்மை (வாட்டர் புரூப்) கொண்டதால் இதை எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியும். ஹாலோ எக்ஸ்.டி. ரீசார்ஜ் செய்யக் கூடியது. இதற்கான மின்னாற்றல் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. இதனால் இதற்கு பேட்டரியோ அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது. பேட்டரியின் மேல் பகுதியில் கிளாஸ் பிரேக்கர் உள்ளது. அவசர காலத்தில் காரில் சிக்கிக் கொண்டால் கண்ணாடியை உடைக்க இதைப்பயன்படுத்த முடியும். அதேபோல இதன் பக்கவாட்டில் உள்ள கட்டர், டிரைவர் சீட் பெல்ட்டை அறுத்து வெளியேறுவதற்கு உதவி புரியும். அதேபோல இதில் யு.எஸ்.பி. கேபிள் உள்ளது. இதனால் வேறு சில கருவிகளையும் அவசரத்துக்கு இதன் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ள மு

சாம்சங் கேலக்ஸி டேப்லெட்

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் மூன்று மாடல் டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி டேப் எஸ்5. இ, டேப் ஏ 10.1, டேப் ஏ 8 என்ற இம்மூன்று மாடல்களும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், ஏற்ற விலையில் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதில் பிரீமியம் மாடலான டேப் எஸ்5.இ. மாடல் விலை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையாகும். அடுத்த மாடலான ஏ 10.1 மாடல் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையாகும். பிரவுசிங் பணிக்கு அதிக அளவில் டேப்லெட்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. பெரிய அளவிலான தொடு திரையைக் கொண்டதாக இவை மூன்றும் வந்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் எனும் மின்னணு தொழில்நுட்ப மாநாட்டில் கேலக்ஸி டேப் எஸ்5.இ. அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள தொழில்நுட்பம் சாதாரண கம்ப்யூட்டரை விட இரு மடங்கு அதிகமாகும். சமீபகாலமாக 4- ஜி டேப்லெட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் டேப்லெட் விற்பனை 62 சதவீதமாக உள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் இவற்றுக்கு

கூல்பேட் கூல் 3 பிளஸ்

இந்திய இளைஞர்கள் ஸ்மார்ட்போனில் எதிர்பார்ப்பது அதன் வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றைத்தான். இவை இரண்டையும் பூர்த்தி செய்யும் வகையில் கூல்பேட் நிறுவனம் கூல் 3 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் 2.0 கிகாஹெர்ட்ஸ் பிராசஸரை உடையது. 3 ஜி.பி. ரேம் வசதியோடு 5.7 அங்குல டியூடிராப் தொடு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு கண்கவர் வண்ணங்களில் அதாவது ஓஷன் புளூ, செர்ரி பிளாக் ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவக வசதியோடும் மற்றொன்று 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதியோடும் வந்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.6,000 மற்றும் ரூ.6,500 ஆகும். அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திஉள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூல்பேட் நிறுவனம் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூல்பேட் கூல், கூல்பேட் மெகா, கூல்பேட் நோட் சீரிஸ் ஆகியன இந்நிறுவனத் தயாரிப்புகளாகும். தற்போது அறிமுகமாகிஉள்ள கூல்பே

லெனோவா இஸட்6 புரோ

லெனோவாநிறுவனம் புதிதாக 5- ஜியில் செயல்படும் ஸ்மார்ட்போனையும் இஸட்6 புரோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்5 மோடம் வசதி உள்ளது. இதன் தொடுதிரை அமோலெட் (6.39 அங்குலம்) நுட்பம் கொண்டது. இதன் பிராசஸர் 855 எஸ்.ஓ.சி. கொண்டது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் பின்பகுதியில் நான்கு கேமராக்கள் உள்ளன. இவை முறையே 48 மெகா பிக்ஸெல், 16 மெகா பிக்ஸெல், 8 மெகா பிக்ஸெல் மற்றும் 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. மொத்தம் 74 மெகா பிக்ஸெல் இருப்பதால் கேமராவுக்கு நிகரான துல்லியமான படங்கள் இதில் பதிவாகும். முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ள இதில் இரட்டை சிம் வசதி உள்ளது. வை-பை 802.11, புளூடூத் 5.00, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 4 ஜி சப்போர்ட் வசதி ஆகியன இதில் உள்ளன. ஆக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், கம்பாஸ், மாக்னெடோமீட்டர், கைராஸ்கோப், பிராக்ஸிமிடி சென்சார், விரல் ரேகை பதிவு சென்சார் ஆகியன உள்ளன. பேஸ் அன்லாக் வசதியும் இதில் உள்ளது.

எல்.ஜி. ஸ்மார்ட்போன் - எல்.ஜி. டபிள்யூ10, டபிள்யூ 30 மற்றும் எல்.ஜி. டபிள்யூ30 புரோ

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் டபிள்யூ. சீரிஸில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. டபிள்யூ10, டபிள்யூ 30 மற்றும் எல்.ஜி. டபிள்யூ30 புரோ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.) கொண்ட மாடலாக இவை வந்துள்ளன. இதனால் நைட் மோட், போர்ட்ரைட், பொகே, வைட் ஆங்கிள் ஆகிய மோட் வசதிகள் உள்ளன. ஹெச்.டி. புல் விஷன் டிஸ்பிளே (தொடுதிரை) வசதி கொண்டது. நீண்ட நேரம் செயலாற்ற இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதில் டபிள்யூ 10 மற்றும் டபிள்யூ 30 மாடல் உடனடியாக விற்பனைக்கு வந்துள்ளன. டபிள்யூ 30 புரோ மாடல் பின்னர் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எல்.ஜி. டபிள்யூ மாடல் விலை ரூ.9 ஆயிரமாகும். டபிள்யூ 30 மாடல் விலை ரூ.10 ஆயிரமாகும். எல்.ஜி. டபிள்யூ 30 மாடலில் 6.26 அங்குல திரை உள்ளது. டபிள்யூ 10 மாடல் 6.19 அங்குல திரையைக் கொண்டது. இவை இரண்டுமே மீடியா டெக்ஹீலியோ பி22 பிராசஸரைக் கொண்டது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. டபிள்யூ 30 மாடலில் 3 கேமராக்கள் உள்ளன. முதல

லாஜிடெக்கின் ‘ஜி’-புதிய ரக மவுஸ்

கம்ப்யூட்டர் உபயோகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் தேவைகளுக்கேற்ற மவுஸ்கள் இப்போது தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் மவுஸ் தயாரிப்பில் முன்னணியில் உள்ள லாஜிடெக் நிறுவனம் ‘ஜி’ என்ற பெயரிலான புதிய ரக மவுஸை அறிமுகம் செய்துள்ளது. இது கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவோருக்கு மிகவும் ஏற்றது. வீடியோ கேமிங்கின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இதில் 16-கே சென்சார் உள்ளது. இதனால் விளையாட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் உருவாகியுள்ளது. விளையாடுவோருக்கு தேவையான 11 வழக்கமான பொத்தான் இயக்கங்களைக் கொண்டது. இது விண்டோஸ் 7 இயங்குதளத்தைக் கொண்ட கம்ப்யூட்டரிலும் இது செயல்படக் கூடியது. மேலும் 5 கேம்களை இதன் மூலம் பதிவு செய்து தேவையானபோது மவுஸில் பதிவு செய்துகொள்ளும். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுபவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

Tracksafe - குழந்தைகளை கண்காணிக்க உதவும் ‘டிராக்சேப்’

அந்தக் காலங்களில் கோவில் திருவிழா சமயங்களில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் தொலைந்துவிடாமல் இருக்க குடும்பத் தலைவன் தோள் மீது குழந்தையை தூக்கி உட்கார வைத்தபடி செல்வார்கள். இப்போது குழந்தைகளே தனியாக நடந்து வர விரும்பும் கால மாகும். இதனால் தூரத்திலிருந்தாவது பெற்றோர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பது நல்லது. தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 18 குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்ற செய்தி, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு மிகுந்த கவலையளிக்கும். இதைப் போக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.பி.எஸ். வசதி கொண்ட டிராக்சேப் ( Tracksafe ) எனும் சிறிய கைக்கடிகார வடிவிலான சாதனம் வந்துள்ளது. இதனை கையில் கட்டி விட்டாலே போதுமானது. இதில் ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி இருப்பதால் இருக்குமிடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். குழந்தைகள் ஆபத்தை உணர்ந்தால் இதில் உள்ள பொத்தானை அழுத்தினாலே (எஸ்.ஓ.எஸ்.) அவசர உதவிக்கு இருக்குமிடத்துக்கு சென்றுவிட முடியும். குழந்தையின் இருப்பிடத்தை அறிவதோடு, அவர்களிடம் பேசவும் முடியும். இதில் உள்ள பேட்டரி நீண்ட நேரம் உழைக்கும். உபயோகத்தில் இல்லாத நிலையில் 50 மணி

சிறிய ரக ஸ்மார்ட் மின்விசிறி ‘பாப்பு’

மிகச் சிறிய ரக ஸ்மார்ட் சீலிங் பேன் ‘பாப்பு’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இதில் உள்ள சிறிய பிளேடு 340 ஆர்.பி.எம். வேகத்தில் சுழலக்கூடியது. இதனால் மிகச் சிறப்பான காற்று வீசும். காற்று மட்டுமின்றி மிக ரம்மியமான ஒளியை வீசும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 26 அங்குல பிளேடு அளவுகளில் கிடைக்கும். மிகச் சிறிய இடங்களில் அழகிய தோற்றம் மற்றும் குளிர்ந்த காற்று வீச இந்த பேன் மிகவும் சிறந்தது. இதில் உள்ள 12 வாட் எல்.இ.டி. விளக்கு மூன்று வண்ணங்களில் ஒளியை வீசும். பான்ஸார்ட் எனும் பிரீமியம் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் இந்த பேனை உருவாக்கியுள்ளது. இதன் விலை ரூ.19,500. இந்த மின்விசிறி அங்கீகாரம் பெற்ற 45 விற்பனையகங்கள் மற்றும் பான்ஸார்ட் மற்றும் அமேசான் இணையதளத்திலும் கிடைக்கும்.

பிலிப்ஸின் நவீன பல்பு

வீ டுகள், அலுவலகங்களுக்கு ஒளியூட்டியதில் பிலிப்ஸ் நிறுவனத்தின் பங்கு மகத்தானது. மருத்துவம் சார்ந்த கருவிகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது ‘சோம்நியோ’ என்ற பெயரில் புதிய ரக பல்பை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரவில் தூங்குவதற்கும், பகலில் கண் விழிப்பதற்கும் உரிய வெளிச்சத்தை இது வீசக் கூடியது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இதில் வெளிப்படும் வெளிச்சம், தூக்கத்தை மேலும் தூண்டுவதாக அமைந்து உள்ளது. அதேபோல விடியற்காலையில் தூங்கி கண்விழிக்கும்போது ரம்மியமான வெளிச்சத்தையும் இது ஒளிரக் கூடியது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது வீசும் ஒளிக்கற்றைகளை இது வீசும். அதேபோல மிகவும் இனிமையான இசையும் இதிலிருந்து வெளிப்படும். ஸ்மார்ட்போனை யு.எஸ்.பி. மூலம் இதிலிருந்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோமியின் டிரிம்மர்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜியோமி நிறுவனம் எம்.ஐ. பியர்டு டிரிம்மரை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிரிம்மரில் உள்ள பிளேடு தானாகவே முனைகளை கூர் செய்து கொள்ளும் வசதி உடையது. ஐ.பி.எக்ஸ்7 என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடலின் விலை ரூ.1,200. எம்.ஐ. இணையதளத்தில் இதற்கு ஆர்டர் செய்யலாம். பார்ப்பதற்கே மிகவும் அழகிய தோற்றத்துடன் மெல்லியதான வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவில் சுழலும் வகையில் இதன் பிளேடுகள் உள்ளன. இதனால் மிருதுவான ஷேவிங்கை இது உறுதி செய்கிறது. அத்துடன் இந்த பிளேடுகள் தானாகவே முனைகளை கூர் செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது என்று இந் நிறுவனம் தெரிவித்துள்ளது. உங்களின் தேவைக்கேற்ப டிரிம் செய்துகொள்ளும் வசதி இதில் உள்ளது. 0.5 மி.மீ. முதல் 10 மி.மீ. வரையில் தாடியை டிரிம் செய்யலாம். மற்றொரு செட்டிங்கில் 10.5 மி.மீ முதல் 20 மி.மீ. வரையான தாடியை டிரிம் செய்யலாம். டிரிம்மர் பிளேடின் சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. இந்த பிளேடு ஒரு நிமிடத்துக்கு 6 ஆயிரம் முறை சுழலக்கூடியது. 5 வோல்ட் அடாப்டருடன் பேட்டரி தீருவதை உணர்த்தும் எல்.இ.டி. இண்டிகேட்டர