மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா ?

சென்னை மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா உங்களுக்கு? சென்னை மெட்ரோ ரயில் சேவையில் Daily Pass என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘Daily Pass’ குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்... சென்னை மெட்ரோ சேவையில் வெறும் 100 ரூபாய் கட்டணத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்... இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் 150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். ஒரு நாள் முழுவதும் இந்த ‘Daily Pass’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்... மேலும் இந்த ‘Daily Pass’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை... உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்...!!! இதுவே பேருந்து ‘Daily Pass’-ஐ- வாங்கியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றவர்களும் அறிய பகிரலாமே...!

Comments