வெளி சத்தங்களை செயலிழக்க செய்யும் ‘சோனிக் கிளவுட்’

கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் கூட செல்போனில் பேசும் போது, தெளிவாக கேட்காமல் போதல், இரைச்சல் அதிகமாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் போதும் இது போன்ற சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன. இதற்கு தீர்வாக சோனிக் கிளவுட் என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது ஒரு தனி நபரின் கேட்கும் திறன், எவ்வளவு சத்தத்தில் பேச வேண்டும், கேட்க வேண்டும் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப அதிர்வெண்ணை தேர்வு செய்கிறது. இதனால் முதியவர்கள் தங்களுக்கு அதிக சப்தம் வேண்டுமெனில் அதற்கேற்றவாறு செட் செய்து கொள்ளலாம். சில நுண்ணிய ஒலிகளை கூட தெளிவாக கேட்கும் படி செய்கிறது இந்த ஆப். வெளி சத்தங்களை செயலிழக்க செய்து நமது அழைப்புகளை நிம்மதியாக பேச வைக்கிறது இந்த சோனிக் கிளவுட் செயலி.

Comments