த்ரீ இன் ஒன் சாதனம்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நேரத்தை மிச்சம் செய்வதற்காகவே அறிமுகமாகி இருக்கிறது ஹாமில்டன் பீச் நிறுவனத்தின் த்ரீ இன் ஒன் கிரில் மற்றும் கிரேடில். 180 சதுர அங்குலம் கொண்ட நான்ஸ்டிக் கல்லில் இரண்டு விதமான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யலாம். இதனை சுலபமாக கழற்றி, மாட்டி நமது வசதிக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். இரு வெப்பநிலைகளில் வெவ்வேறு உணவுகளை ஒரே நேரத்தில் சமைக்கலாம். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் இதன் நடுப்பகுதியில் இருக்கும் தட்டில் உணவில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு வடிந்து விடுகிறது. பி.எப்.ஓ.ஏ ( PFOA ) எனப்படும் கெடுதலான ஆசிட் கலப்பின்றி இந்த நான்ஸ்டிக் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் கிரில் பகுதியில் சிக்கன், ஆட்டுக்கறி போன்ற மாமிச வகைகள், மசாலா தடவிய மீன் அல்லது காய்கறிகள் போன்றவற்றை எண்ணெய் குறைவாக சேர்த்து சமைக்கலாம். இன்னொரு புறமிருக்கும் கிரேடில் பகுதியில் பான்கேக் தோசை வகைகள், முட்டை ஆம்லெட் மற்றும் பிரட் போன்றவற்றை சமைக்கலாம். ஒரே நேரத்தில் இரு வகையான உணவுகளை சமைத்தாலும், இடையில் தடுப்பு இருப்பதால் ஒரு உணவின் வாடை மற்றொன்றை பாதிக்காது. எனவே கிரில், கிரேடில் மற்றும் இவைகளை ஒரே நேரத்தில் உபயோகிப்பது என்று மூன்று விதமாக இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.4,260.

Comments