பயோ சென்சார் பேண்ட்

மருத்துவ துறையில், மனிதர்களுக்கு உதவும் பல நவீன முன்னேற்றங்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், இன்னொரு கருவியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. ரூட்கேர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் குழு கையில் வாட்ச் போன்று அணிந்து கொள்ளக்கூடிய பேண்ட் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த பேண்ட் ரத்தத்தில் இருக்கும் அணுக்களை அளவிடுகிறது. இதனுள்ளே இருக்கும் மிகச்சிறிய பயோ சென்சார் ஒரு சிறு துளி ரத்தத்தை ஆய்வு செய்து எவ்வளவு சிகப்பு அணுக்கள் இருக்கின்றன, எவ்வளவு வெள்ளை அணுக்கள் உள்ளன, ரத்த சோகை இருக்கிறதா என்பன போன்ற தகவல்களை அளிக்கிறது. உடனடியாக ரத்த பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் இந்த கருவியை உபயோகித்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, லுகேமியா என்று சொல்லக்கூடிய ரத்த புற்றுநோயையும் இந்த பேண்ட் கண்டறிகிறது. இதனால் நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்து குணமாக்கலாம்.சர்க்கரை நோய் மட்டுமின்றி ரத்த சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களையும் இந்த சென்சார் கருவி கண்டறிகிறது. காற்றில் இருக்கும் நச்சு பொருட்களின் அளவையும் கூட சொல்லி விடுகிறது இந்த பேண்ட்.

Comments