காற்றை சுத்திகரிக்கும் சாதனம்

குழந்தைகளுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுப்படி ஒரு வருடத்திற்கு ஆறு லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் சுற்றுப்புற மாசுகளில் சிக்காமல் பிள்ளைகளை வெளியே அழைத்து செல்வது பெற்றோருக்கு பயத்தை அளிப்பதாக உள்ளது. இதன் பொருட்டு பிரிசி பேபி ( BRISI BABY ) எனப்படும் ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையணை போன்றிருக்கும் இந்த சாதனத்தை குழந்தைகள் அமரும் ஸ்ட்ரோலர் (குழந்தைகளை வைத்து தள்ளி செல்லும் வண்டி ) மீது பொருத்திக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் சென்சார்கள் கேடு விளைவிக்கும் நச்சு வாயுக்களை கண்டுபிடிக்கிறது. உடனே இதனுள் இருக்கும் மின் விசிறி சுற்ற ஆரம்பிக்கிறது. மாசுபட்ட காற்றை தன்னுள் இழுத்து அதை பில்டர் மூலம் தூய்மையாக்குகிறது. அதன் பின்னர், சுத்திகரிக்கப்பட்ட காற்றை வெளியே அனுப்புகிறது. இதனால் குழந்தையை சுற்றிலும் எப்போதும் சுத்தமான காற்றோட்டம் இருக்கும்படி செய்கிறது. பத்து நொடிகளுக்குள் ஒன்றரை லிட்டர் காற்றை சுத்திகரிக்கிறது இந்த சாதனம். இதன் செயலி அதிக மாசுபட்ட இடத்தை கடக்கும் போது, பெற்றோருக்கு ஸ்மார்ட் போன் மூலம் எச்சரிக்கை செய்கிறது.

Comments