இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தாடேபல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. படம்: பிடிஐ ஆந்திர அமைச்சரவை இன்று விரிவாக் கம் செய்யப்படுகிறது. புதிதாக 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். நாட்டில் முதல்முறையாக மாநிலத்தில் 5 பேர் துணை முதல்வர்களாகப் பதவி யேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆளு நர் நரசிம்மனிடம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வழங்கினார். அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதி களில் அந்த கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசத்துக்கு 23, ஜனசேனா கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தன. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 22 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த 30-ம் தேதி ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அன்றைய தினம் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதைத் தொடர்ந்து புதிய அமைச் சர்களை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தாடேபல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் 151 எம்.எல்.ஏக் களும் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியபோது, " எனது அரசில் ஊழலுக்கு இடமில்லை. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று தெரிவித்தார். கூட்டத்தில் யார் யாருக்கு அமைச் சர் பதவி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதி யில் 25 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 5 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்களின் பட்டியலை விஜயவாடாவுக்கு வந்த ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். ஒரு முஸ்லிம், ஒரு சத்திரியர், ஒரு வைசியர், 4 காப்பு சமுதாயத்தினருக்கு அமைச்சரவை யில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7 பிற்படுத்தப்பட்டோர், 4 ரெட்டி சமுதாயத்தினர், 5 தலித்துகளும் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்ப தாகத் தெரிகிறது. சட்டப்பேரவைத் தலைவராக தம்மி னேனி சீதாராம், துணைத் தலைவராக கே. ரகுபதி ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற நடிகையும் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு உள் துறை, மின்வாரியம் போன்ற துறைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் புதிய அமைச்சரவை பட்டி யலில் இடம் பெறாதது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமராவதியில் இன்று காலை நடைபெறும் விழாவில் 25 அமைச் சர்களுடன் கூடிய புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. பேரவை வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11.49 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்க உள்ளது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். ஒரு மாநிலத்தில் 5 துணை முதல்வர்கள் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள் இருந்தனர். இதேபோல பல்வேறு மாநிலங்களில் இரு துணை முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் தற்போது 2 துணை முதல்வர்கள் உள்ளனர். புதிதாக பதவியேற்கும் 5 துணை முதல்வர்களில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர். காப்பு சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் அறிவித்தார். வரும் 12-ம் தேதி ஆந்திர சட்டப் பேர வைக் கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் சம்பங்கி அப்பளநாயுடு புதிய எம்எல்ஏக் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 13-ம் தேதி சபாநாயகர் தேர்தலும், துணை சபாநாயகர் தேர்தலும் நடைபெற உள்ளது. புதிய சட்டப்பேரவையில் வரும் 14-ம் தேதி ஆளுநர் நரசிம்மன் உரையாற்றுகிறார். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டப்பேரவையை எவ்வளவு நாட்கள் நடத்துவது என்பது குறித்து தீர்மானம் செய்கிறது. ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசத்துக்கு 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய அனைவரும் காத் திருக்கின்றனர் என்று அரசியல் நோக் கர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments