இண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps.
ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே இணைப்பில்...
இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன.
டெபாசிட் கட்ட வேண்டும்
இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக
குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்!
வருடாந்திர ஜியோ மாநாட்டில் ..
புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ரூட்டர், சிங்கிள் பேண்டில் மிக அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும். அதாவது 50 Mbps வேகத்தில் இருந்து 100 Mbps வேகம் வரை இண்டர்நெட் வேகம் பெறக்கூடியது இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ஆகும். 50Mbps வேகத்தில் செயல்படும் இணைய சேவையை பெற ரூ. 600 கட்டணமாகும் என்றும் 100Mbps வேகத்தில் இயங்கும் இணைய சேவையைப் பெற ரூ. 1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் வருடாந்திர
ஜியோ மாநாட்டில் அதிகாரப்பூர்வ கட்டண அறிவிப்புகள் வெளியாகும். இந்த ஜியோ ஜிகாஃபைபர் டிவைஸ் 2.4GHz சப்போர்ட் செய்யும் என்றும் வைஃபை மற்றும் 5GHz பிராண்ட் வைஃபை பயன்படுத்தலாம் என்றும், 10/100 ஈதர்நெட் போர்ட் கொண்ட இந்த டிவைஸ் 9 x 5 இன்ச் அளவினை கொண்டது என்றும் இது கருப்பு நிறத்தில் இருக்கும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டிவைஸில் மூன்று RJ45 போர்ட்டுக்க்ள், ஒரு மைக்ரோ யூஎஸ்பி 2.0 மற்றும் ஒரு RJ11 போர்ட் ஆகியவைகளும் உள்ளன.
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Wednesday, June 26, 2019
Monday, June 24, 2019
வாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம்.
ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும். இதன்படி, வாடகை, பில் தொகை இருவருக்கும் பிரித்து கணக்கிடப்படும். செலுத்தப்படும் வாடகைக்கு கண்டிப்பாக ரசீது வாங்க வேண்டும். அதிலும் 3,000 க்கு மேல் வாடகை இருந்தால் ரசீது முக்கியம். செலுத்தப்படும் வாடகை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் (மாதம் 8,333க்கு மேல்) இருந்தால் வீட்டு உரிமையாளரின் பான் எண் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வீட்டு உரிமையாளரின் பான் எண் இல்லாவிட்டால் படிவம் 60 சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாமல் சமர்ப்பித்தால் வருமான வரி நோட்டீஸ் வரும.
வீட்டு உரிமையாளர் பான் எண் வழங்க மறுத்தால், அவருடன் ஒப்பந்தம் செய்த வாடகை ஒப்பந்த பத்திரத்தை தாக்கல் செய்யலாம். அதில், நீங்கள் கொடுக்கும் வாடகை தொகை சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதோடு, ரசீதும் சமர்ப்பிக்கலாம். வாடகை தொகையை ரொக்கமாக கொடுக்காதீர்கள். ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அல்லது ரசீதில் இடம்பெற்ற தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுத்திருந்தால் வரிச்சலுகை பெற முடியாது. வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அல்லது காசோலை மூலம் வழங்கியிருந்தால் அதை ஆதாரமாக காட்டலாம். இவற்றை வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள்.
Monday, June 17, 2019
பரிணாம வளர்ச்சியில் பறவைகள் தோன்றியது எப்படி?

உதாரணமாக, முதலில் ஒரு செல் உயிரியான பாக்டீரியாவில் இருந்து அமீபா, பின்னர் அமீபாவில் இருந்து பல செல் உயிரிகள், பின்னர் தாவரங்கள், பின்னர் அவற்றைத் தொடர்ந்து விலங்குகள் என்று ஒரே நேர்கோடாக உயிர்கள் தோன்றியதாகவே தொடக்கத்தில் கருதப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு பரிணாம மரம் உருவாக்கப்பட்டது.
ஆனால், தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்படும் புதைபடிமங்கள் மற்றும் அவற்றின் மீதான நவீன பரிணாம ஆய்வு களின் காரணமாக, அந்த பரிணாம மரம் கிளைக்கும் விதம் தொடர்ந்து மாற்றத்துக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் பரிணாம வளர்ச்சி என்பது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு கிளைத்த ஒரு மரம் என்பது நவீன கால ஆய்வுகள் மூலம் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பறவைகள் மற்றும் ஆர்கியாப்டேரிக்ஸ் (Archaeopteryx) எனும் ஒரு டைனோசர்-பறவை இரண்டுக்கும் இடையிலான விலங்குகளில் மட்டுமே இருந்ததாக கருதப்பட்டு வந்த சிறகுகள், பறவைகள் தோன்றுவதற்கு சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன என்றும், டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே கூட தோன்றியிருக்கலாம் என்றும் ஒரு சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மைக் பென்ட்டன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட புதைபடிம ஆய்வில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டீரோசார்ஸ் (Pterosaurs) எனும் ஒரு வகை ஊர்வன விலங்குகளின் புதைபடிம ஆய்வில், அவற்றின் உடலில் சிறகுகள் இருந்தது கண்டறியப்பட்டது. டைனோசர் களின் நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் டீரோசர்களின் சிறகுகள் அச்சு அசலாக டைனோசர்களின் சிறகுகள் போலவே இருந்ததும், அதன் காரணமாக சிறகுகள் தோன்றிய காலம் தற்போது குறைந்தது சுமார் 25 கோடி ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.
தொடக்ககால ட்ரையாசிக் உலகமானது (Triassic world) மிக மிக மோசமான ஒரு பேரழிவில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்த காலத்தில் சிறகுகள் தோன்றியிருக்க வேண்டும் என இந்த ஆய்வுத்தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் விஞ்ஞானி பென்ட்டன். முக்கியமாக, இந்த ஆய்வு மூலமாக, உலகின் முதல் பறவையாக கருதப்படும் ஆர்கியாப்டேரிக்ஸ் (Archaeopteryx) தோன்றுவதற்கு முன்பே சிறகுகள் தோன்றியிருக்க வேண்டும் என்றும், டைனோசர்களின் மூதாதையர்களான ஆர்கொசார்களுக்கும் (archosaurs) பாலூட்டிகளின் மூதாதையர்களுக்கு மிகப்பெரும் போர் நடந்த காலத்தில்தான் சிறகுகள் தோன்றியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இவ்விரு விலங்கினங்களுக்கும் இடையிலான போட்டியில் ஆர்கொசார்களுக்கு உடல் வெப்பத்தை அதிகப்படுத்தி உதவவே சிறகுகள் தோன்றி யிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன்பிறகு சிறகுகள் பறக்க பயன்படத் தொடங்கியிருக்கக் கூடும் என் கிறார் விஞ்ஞானி பென்ட்டன்.
முக்கியமாக, கடந்த 1994-ம் ஆண்டு சீனாவில் சிறகுகள் உடைய ஆயிரக்கணக்கான டைனோசர் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் புதைபடிம ஆய்வாளர்கள் சிறகுகள் தோன்றிய காலம் டைனோசர்களுக்கு முந்தைய காலமாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவில் கண்டறியப்பட்ட குளிண்டாட்ரோமியஸ் (Kulindadromeus) டைனோசர் புதைபடிமத்தின் உடல் முழுக்க இருந்த சிறகுகள், டைனோசர்கள் தோன்றும் முன்னரே சிறகுகள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை அழுத்தமாக முன்வைத்தது. ஏனெனில், குளிண்டாட்ரோமியஸ் இன டைனோசர்கள், பரிணாமத்தில் பறவைகள் தோன்றுவதற்கு மிக மிக நீண்ட காலத்துக்கு முன்பு தோன்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், கடந்த 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மரபியல் ஆய்வில், ஊர்வன விலங்குகளின் செதில்கள், பறவைகளின் சிறகுகள் மற்றும் பாலூட்டிகளின் ரோமங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியானது அனைத்தும் ஒரு மரபியல் கட்டுப்பாட்டு அமைப்பினால் தூண்டப்பட்டது என்று கண்டறியப்பட்டது.
அதாவது, செதில்கள், சிறகுகள் மற்றும் பாலூட்டி ரோமங்கள் ஆகிய அனைத்து பாகங்களின் வேரானது சுமார் 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதையர் உயிரினத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சிறகுகள் டைனோசர்களின் அடிப்படை பண்புகளில் ஒன்றாகவே இருந்திருக்கும் என்றும், பின்னர் டைனோசர்கள் அளவில் பெரிதாக சிறகுகளின் வளர்ச்சி தடைபட்டு இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது எல்லாம் ஒருபுறமிருக்க, பறவைகள் வெற்றிகரமாக வாழ சிறகுகள் அவற்றுக்கு மிக மிக முக்கியமான ஒரு பாகமாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார் ஆய்வாளர் பென்ட்டன். மேலும், இந்த ஆய்வு மூலமாக, பறவைகள் ஊர்வன விலங்குகளில் இருந்து உடனே தோன்றவில்லை என்றும், மாறாக சுமார் 10 கோடி ஆண்டு காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட குணாதிசயங்களை உருவாக்கிக்கொண்ட பின்னரே பறவைகள் தோன்றின என்றும் கூறு கிறார் விஞ்ஞானி பென்ட்டன்.
இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள்
2019
சந்திரனை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான்-2’ செயற்கைக்கோள் ஜூலை 15-ந் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இது செப்டம்பர் மாதம், நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறங்கி, நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.
2020
சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து, சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும், காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் மனித குடியிருப்புகளை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளையும், 2020-ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
2021 (ஜூலை)
ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகள்
2021 (டிசம்பர்)
ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகளுக்கு அடுத்ததாக, மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்’ என்ற விண்வெளி விமான சோதனையில் ஈடுபட உள்ளனர். இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் முதல் விண்வெளி விமானம் என்ற பெருமை, ககன்யானுக்கு கிடைக்கும். 3 விண்வெளி வீரர்கள் பயணிக்கும்படி ககன்யானை வடிவமைக்க உள்ளனர்.
2023
வீனஸ் கிரக ஆராய்ச்சி
2030
ககன்யான் விண்வெளி விமானத்தில், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஏதுவாக, விண் வெளியில் மிதக்கும் பிரத்யேக விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் இஸ்ரோ இறங்க உள்ளது. ‘‘இதன்படி 2030-ம் ஆண்டில், இந்தியாவிற்கு என பிரத்யேக விண்வெளி நிலையம் விண்ணில் மிதக்கும்’’, என இஸ்ரோ நிறுவன தலைவர் கே.சிவன் கூறியிருக்கிறார்.இந்த விண்வெளி நிலையம் 20 டன் எடையில் உருவாக உள்ளது.இதில் விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.இந்த விண்வெளி நிலையத்தை, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்க உள்ளனர்.

2020
சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து, சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும், காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் மனித குடியிருப்புகளை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளையும், 2020-ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
2021 (ஜூலை)
ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகள்
2021 (டிசம்பர்)
ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகளுக்கு அடுத்ததாக, மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்’ என்ற விண்வெளி விமான சோதனையில் ஈடுபட உள்ளனர். இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் முதல் விண்வெளி விமானம் என்ற பெருமை, ககன்யானுக்கு கிடைக்கும். 3 விண்வெளி வீரர்கள் பயணிக்கும்படி ககன்யானை வடிவமைக்க உள்ளனர்.
2023
வீனஸ் கிரக ஆராய்ச்சி
2030
ககன்யான் விண்வெளி விமானத்தில், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஏதுவாக, விண் வெளியில் மிதக்கும் பிரத்யேக விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் இஸ்ரோ இறங்க உள்ளது. ‘‘இதன்படி 2030-ம் ஆண்டில், இந்தியாவிற்கு என பிரத்யேக விண்வெளி நிலையம் விண்ணில் மிதக்கும்’’, என இஸ்ரோ நிறுவன தலைவர் கே.சிவன் கூறியிருக்கிறார்.இந்த விண்வெளி நிலையம் 20 டன் எடையில் உருவாக உள்ளது.இதில் விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.இந்த விண்வெளி நிலையத்தை, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்க உள்ளனர்.
‘ட்ரூ காலர்’ அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் பேசும் வசதி
ஸ்மார்ட்போன் உலகில் ட்ரூ காலர் அப்ளிகேஷனிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் நமக்கு அறிமுகம் இல்லாத புது எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் தகவல்களை ட்ரூ காலர் அப்ளிகேஷன் திரட்டி கொடுக்கும். அதாவது புது நம்பர் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது, அழைப்பவரின் தகவல், எங்கிருக்கிறார், எப்படிப்பட்டவர், எந்த துறையை சார்ந்தவர், ஏன்..? சிலரது விலாசங்களை கூட, ட்ரூ காலர் அப்ளிகேஷன் காண்பித்துவிடும். இதனால் தேவையில்லாத அழைப்புகளை எளிதாக தவிர்த்துவிட முடியும். இத்தகைய சேவையை வழங்கிவந்த ட்ரூ காலர் அப்ளிகேஷன் தற்போது, இணையதளத்தை பயன்படுத்தி வாய்ஸ் கால் பேசும் வசதியையும் வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு வாட்ஸ் ஆப் கால் வசதியை போல சிம் கார்டு எண் இல்லாமல், கணக்கு ஐ.டி.-யை கொண்டே போன் கால் பேசமுடியும்.
மடங்கக்கூடிய தனிநபர் கணினி
வளைந்த திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள், மடக்க முடிந்த ஸ்மார்ட்போன்கள் தயாராகிவிட்டாலும் இன்னும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. மடிக்கணினிகள் மற்றும் டேப்லட்களே கைகளில் எடுத்துச் செல்லும் வகையிலும், மடக்கும் வகையிலும் உள்ளன. லெனோவா நிறுவனம் உலகில் முதல் முறையாக தனிநபர் கணினியின் ஓ.எல்.இ.டி. திரையை மடக்கி எடுத்துச் செல்லும் வகையில் தயாரித்து பரிசோதனை செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருப்பது நினைவூட்டத்தக்கது.
Thursday, June 13, 2019
அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும்.
தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது.
மேலும் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்? என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
Wednesday, June 12, 2019
வெளி சத்தங்களை செயலிழக்க செய்யும் ‘சோனிக் கிளவுட்’

காற்றை சுத்திகரிக்கும் சாதனம்

த்ரீ இன் ஒன் சாதனம்

விலை குறைந்த எல்.இ.டி. டி.வி.

சிக்கலான பாதைகளில் உதவும் ஜி.பி.எஸ். கருவி

ஸ்மார்ட் சுவிட்ச்

இசை கற்றுத் தரும் ‘சவுண்ட் பாப்ஸ்’

பாடும் அலைகளின் நகரம் தரங்கம்பாடி

மனதைக் கொள்ளை கொள்ளும் முதுமலை

இந்தியாவின் வெனிஸ் ‘மன்றோ தீவு’

ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற மாமல்லபுரம்

பொதுவாக கோடைகாலங்களில் இங்கும் வெயில் தகிக்கும். காரணம் சுற்றியும் பாறைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். இதனால் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையான காலங்களில் இங்கு செல்வதே சிறந்தது. எனவே காலாண்டு விடுமுறைக்கு திட்டமிடுங்கள். சென்னை வாசிகள் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்பிவிடலாம். குழந்தைகளுடன் சென்றால் பல்வேறு வரலாற்று விஷயங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் இது வாய்ப்பாக இருக்கும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. 7-ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். மகாபலிபுரம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
சென்னைக்கு தெற்கே 62 கி.மீ. தொலைவிலும் காஞ்சிபுரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ளது. பல்லவர் கால வரலாற்றைப் போற்றும் வகையில் சிற்பக் கலை மிகுந்த பகுதிகள் இங்குள்ளன. குடைவரைக் கோவில்கள், மண்டபங்கள், ஒற்றைக்கல் கோவில்கள், ரதங்கள், கட்டுமானக் கோவில்கள் இங்குள்ளன.
இவை தவிர புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும், கோவில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன. சிற்பக் கலைக்காகவே யுனெஸ்கோ அமைப்பு இதை உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இங்குள்ள கடற்கரை கோவில் 7-ம் நூற்றாண்டிலேயே கிரானைட்டால் கட்டப்பட்டது. பல்லவ மன்னர்களின் சிற்பக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
யுனெஸ்கோ அமைப்பால் உலகின் பாரம்பரியம் மிக்க இடங்களுள் ஒன்றாக இது போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இங்கு நடன விழா நடைபெறும்.
அர்ஜுனன் தபஸ் கோலத்தில் உள்ள சிற்பம் பல்லவர் கால சிற்பக் கலையின் நயத்தை வெளிப்படுத்தும். இங்குள்ள பஞ்ச ரதங்கள் ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டவை. இங்குள்ள மலைப் பகுதியில் கண்ணனின் வெண்ணெய் எனக் கூறப்படும் ‘பட்டர் பால்’ மலைப்பகுதியில் வெகு நேர்த்தியாக இருக்கும். இதை நகர்த்த 7 யானைகளைக் கொண்டு பல்லவ மன்னன் முயன்றும் அது முடியாமல் போனது. செல்பி பிரியர்கள் இந்த பட்டர் பால் அருகே புகைப்படம் எடுத்தும் மகிழலாம்.
வந்துவிட்டது போர்டு தண்டர்

Monday, June 10, 2019
நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்
நாடு கடுமையான நிதி நெருக் கடியில் சிக்கியிருக்கும்போது அதில் இருந்து மீள்வதற்கு கடன் வாங்குவது என்பது சாதாரண காரியமல்ல. பாகிஸ்தான் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தான் கேட்டதும் அள்ளிக் கொடுக்கத் தயாராக இல்லை. தருவதாக ஒப்புக் கொண்ட 600 கோடி டாலரைக் கூட இப்போது தருவதற்கு தயங்கி வருகிறது. பொதுவாக கடன் கொடுக்கும்போது, வாங்கும் நாடுகளுக்கு பலவிதமான நிபந்தனைகளை சர்வதேச நிதியம் விதிக்கும்.
குறிப்பாக வளரும் நாடுகளில் மானியங்களைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தும். இது அங்கிருக்கும் ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும். பாகிஸ்தான் ராணுவம் தானாகவே தனது பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டதற்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். உண்மையான நிலவரம் எல்லோ ருக்குமே தெரியும்.
ராணுவத்தின் பட்ஜெட் தொகை எவ்வளவு என இன்னமும் முடிவாக வில்லை. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் செலவிடப்பட வேண்டும். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, கடந்த 2018-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளின் பட்டியலில், பாகிஸ்தான் 20-வது இடத்தில் இருக்கிறது. 1140 கோடி டாலரை செலவிட்டுள்ளது.
2004-ம் ஆண்டில் இருந்து இதுவரை மிகவும் அதிகம் செலவிடப்பட்டது இந்த ஆண்டில்தான். பாகிஸ்தானின் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கை களை கவனிக்க நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு செய்துள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் தனது செலவுகளைக் குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்த பணிக்குழுவின் ஆய்வு ஜூலை மாதம் வருவதால், என்னாகுமோ என்ற பயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.
ஏகப்பட்ட பாதுகாப்பு சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் ராணு வத்தின் செலவைக் குறைத்துக் கொள்ளும் முடிவை பிரதமர் இம்ரான் கான் பாராட்டியிருப்பது, உண்மையான சூழலை மூடி மறைக்கும் விளம்பர நோக்கம்தான். ராணுவமும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் விரும்பினால்தான் எந்தத் தலைவரும் ஆட்சியே நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கும் நாட்டில், அந்த நாட்டின் ராணுவம் தானாகவே பெருந்தன்மையாக செலவைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியிருப்பது நம்பும்படியாகவா இருக்கிறது?
இதில் அடுத்த கட்ட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எந்த செலவை ராணுவம் குறைக்கப் போகிறது என்பதுதான். தீவிரவாதத் துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லி, உலக நாடு களிடம் இருந்து வாங்கும் நிதியை, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை வளர்க்கவே பாகிஸ்தான் பயன் படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒடுக்க அளித்த நிதியை, பாகிஸ்தான் எப்படியெல்லாம் பயன்படுத்தியது என்பதை அமெரிக்காவை கேட்டால் விலாவாரியாக எடுத்துச் சொல்லும்.
இம்ரான் கானுக்கு சர்வதேச நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகள் எல்லாம் பிரச்சினையே இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகி, கடன் வாங்கினால்தான் ஆட்சியே நடத்த முடியும் என்ற சூழலில் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறதே என்பதுதான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்தே, இம்ரானுக்கு ஒன்று மாற்றி ஒன்று கெட்ட செய்தியாகவே வந்து கொண்டிருக்கிறது. கடைசியாக வந்த கெட்ட செய்தி... கராச்சி அருகே அரபிக் கடலில், பெரிதும் பேசப்பட்ட கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு முயற்சி, கடைசியில் தோல்வியில் முடிந்துவிட்டது. எண்ணெய் கிணறுகள் துளையிடும் பணிக்காக, ஏறக்குறைய 10 கோடி டாலர்கள் செலவிட்ட பிறகு எண்ணெய் கிடைக்காததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ள நிலையில், நாட்டின் பெட்ரோலியத் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் போது, பொருளாதாரம் இன்னும் மோசமாகத்தான் செய்யும். இதுபோக, ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கை இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு ஆய்வு நிபுணர்களை கவரவில்லை. இந்த நடவடிக்கையால், இந்தியாவுட னான தனது நிலையில் பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள். அதேபோல், ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதையும் இந்தியா வுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டி விடுவதையும் பாகிஸ்தான் நிறுத்தாது என்கிறார்கள். பாகிஸ்தான் நிர்வாகத் தில் இருக்கும் சில புத்திசாலிகள், தீவிரவாதத்துக்கு ஆகும் செலவுகளை நினைத்துப் பார்த்தாலே பாகிஸ்தானில் மட்டுமல்லாது தெற்கு ஆசியாவிலும் ஏன், உலகம் முழுவதிலுமே நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதைப் போல், தீவிரவாத பிரச்சினை குறித்துப் பேசாமல், இரு நாடுகளுக்கு இடையிலும் எந்த உறவுக்கும் சாத்தியமில்லை.
குறிப்பாக வளரும் நாடுகளில் மானியங்களைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தும். இது அங்கிருக்கும் ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும். பாகிஸ்தான் ராணுவம் தானாகவே தனது பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டதற்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். உண்மையான நிலவரம் எல்லோ ருக்குமே தெரியும்.
ராணுவத்தின் பட்ஜெட் தொகை எவ்வளவு என இன்னமும் முடிவாக வில்லை. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் செலவிடப்பட வேண்டும். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, கடந்த 2018-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளின் பட்டியலில், பாகிஸ்தான் 20-வது இடத்தில் இருக்கிறது. 1140 கோடி டாலரை செலவிட்டுள்ளது.
2004-ம் ஆண்டில் இருந்து இதுவரை மிகவும் அதிகம் செலவிடப்பட்டது இந்த ஆண்டில்தான். பாகிஸ்தானின் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கை களை கவனிக்க நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு செய்துள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் தனது செலவுகளைக் குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்த பணிக்குழுவின் ஆய்வு ஜூலை மாதம் வருவதால், என்னாகுமோ என்ற பயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.
ஏகப்பட்ட பாதுகாப்பு சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் ராணு வத்தின் செலவைக் குறைத்துக் கொள்ளும் முடிவை பிரதமர் இம்ரான் கான் பாராட்டியிருப்பது, உண்மையான சூழலை மூடி மறைக்கும் விளம்பர நோக்கம்தான். ராணுவமும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் விரும்பினால்தான் எந்தத் தலைவரும் ஆட்சியே நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கும் நாட்டில், அந்த நாட்டின் ராணுவம் தானாகவே பெருந்தன்மையாக செலவைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியிருப்பது நம்பும்படியாகவா இருக்கிறது?
இதில் அடுத்த கட்ட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எந்த செலவை ராணுவம் குறைக்கப் போகிறது என்பதுதான். தீவிரவாதத் துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லி, உலக நாடு களிடம் இருந்து வாங்கும் நிதியை, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை வளர்க்கவே பாகிஸ்தான் பயன் படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒடுக்க அளித்த நிதியை, பாகிஸ்தான் எப்படியெல்லாம் பயன்படுத்தியது என்பதை அமெரிக்காவை கேட்டால் விலாவாரியாக எடுத்துச் சொல்லும்.
இம்ரான் கானுக்கு சர்வதேச நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகள் எல்லாம் பிரச்சினையே இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகி, கடன் வாங்கினால்தான் ஆட்சியே நடத்த முடியும் என்ற சூழலில் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறதே என்பதுதான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்தே, இம்ரானுக்கு ஒன்று மாற்றி ஒன்று கெட்ட செய்தியாகவே வந்து கொண்டிருக்கிறது. கடைசியாக வந்த கெட்ட செய்தி... கராச்சி அருகே அரபிக் கடலில், பெரிதும் பேசப்பட்ட கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு முயற்சி, கடைசியில் தோல்வியில் முடிந்துவிட்டது. எண்ணெய் கிணறுகள் துளையிடும் பணிக்காக, ஏறக்குறைய 10 கோடி டாலர்கள் செலவிட்ட பிறகு எண்ணெய் கிடைக்காததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ள நிலையில், நாட்டின் பெட்ரோலியத் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் போது, பொருளாதாரம் இன்னும் மோசமாகத்தான் செய்யும். இதுபோக, ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கை இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு ஆய்வு நிபுணர்களை கவரவில்லை. இந்த நடவடிக்கையால், இந்தியாவுட னான தனது நிலையில் பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள். அதேபோல், ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதையும் இந்தியா வுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டி விடுவதையும் பாகிஸ்தான் நிறுத்தாது என்கிறார்கள். பாகிஸ்தான் நிர்வாகத் தில் இருக்கும் சில புத்திசாலிகள், தீவிரவாதத்துக்கு ஆகும் செலவுகளை நினைத்துப் பார்த்தாலே பாகிஸ்தானில் மட்டுமல்லாது தெற்கு ஆசியாவிலும் ஏன், உலகம் முழுவதிலுமே நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதைப் போல், தீவிரவாத பிரச்சினை குறித்துப் பேசாமல், இரு நாடுகளுக்கு இடையிலும் எந்த உறவுக்கும் சாத்தியமில்லை.
Saturday, June 8, 2019
மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா ?
சென்னை மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா உங்களுக்கு?
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் Daily Pass என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘Daily Pass’ குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்...
சென்னை மெட்ரோ சேவையில் வெறும் 100 ரூபாய் கட்டணத்தில்
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்...
இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் 150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். ஒரு நாள் முழுவதும் இந்த ‘Daily Pass’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்...
மேலும் இந்த ‘Daily Pass’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை... உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்...!!!
இதுவே பேருந்து ‘Daily Pass’-ஐ- வாங்கியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
மற்றவர்களும் அறிய பகிரலாமே...!
இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தாடேபல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. படம்: பிடிஐ
ஆந்திர அமைச்சரவை இன்று விரிவாக் கம் செய்யப்படுகிறது. புதிதாக 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். நாட்டில் முதல்முறையாக மாநிலத்தில் 5 பேர் துணை முதல்வர்களாகப் பதவி யேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆளு நர் நரசிம்மனிடம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வழங்கினார்.
அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதி களில் அந்த கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசத்துக்கு 23, ஜனசேனா கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தன. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 22 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
கடந்த 30-ம் தேதி ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அன்றைய தினம் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து புதிய அமைச் சர்களை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தாடேபல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் 151 எம்.எல்.ஏக் களும் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியபோது, " எனது அரசில் ஊழலுக்கு இடமில்லை. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் யார் யாருக்கு அமைச் சர் பதவி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதி யில் 25 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 5 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர்.
புதிய அமைச்சர்களின் பட்டியலை விஜயவாடாவுக்கு வந்த ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். ஒரு முஸ்லிம், ஒரு சத்திரியர், ஒரு வைசியர், 4 காப்பு சமுதாயத்தினருக்கு அமைச்சரவை யில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7 பிற்படுத்தப்பட்டோர், 4 ரெட்டி சமுதாயத்தினர், 5 தலித்துகளும் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்ப தாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தலைவராக தம்மி னேனி சீதாராம், துணைத் தலைவராக கே. ரகுபதி ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற நடிகையும் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அவருக்கு உள் துறை, மின்வாரியம் போன்ற துறைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் புதிய அமைச்சரவை பட்டி யலில் இடம் பெறாதது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அமராவதியில் இன்று காலை நடைபெறும் விழாவில் 25 அமைச் சர்களுடன் கூடிய புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. பேரவை வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11.49 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்க உள்ளது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒரு மாநிலத்தில் 5 துணை முதல்வர்கள் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள் இருந்தனர். இதேபோல பல்வேறு மாநிலங்களில் இரு துணை முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் தற்போது 2 துணை முதல்வர்கள் உள்ளனர்.
புதிதாக பதவியேற்கும் 5 துணை முதல்வர்களில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர். காப்பு சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் அறிவித்தார்.
வரும் 12-ம் தேதி ஆந்திர சட்டப் பேர வைக் கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் சம்பங்கி அப்பளநாயுடு புதிய எம்எல்ஏக் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 13-ம் தேதி சபாநாயகர் தேர்தலும், துணை சபாநாயகர் தேர்தலும் நடைபெற உள்ளது.
புதிய சட்டப்பேரவையில் வரும் 14-ம் தேதி ஆளுநர் நரசிம்மன் உரையாற்றுகிறார். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டப்பேரவையை எவ்வளவு நாட்கள் நடத்துவது என்பது குறித்து தீர்மானம் செய்கிறது.
ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசத்துக்கு 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய அனைவரும் காத் திருக்கின்றனர் என்று அரசியல் நோக் கர்கள் தெரிவித்துள்ளனர்.
Friday, June 7, 2019
வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்தது
பாரத ரிசர்வ் வங்கி நேற்று தனது நிதிக்கொள்கை முடிவுகளை அறிவித்தது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. எனவே ரெப்போ ரேட் 5.75 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதற்கேற்ப ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் 5.50 சதவீதமாக குறைந்துள்ளது.
பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இரண்டாவது முறையாக தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சக்தி கந்ததாஸ் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அவரது தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது.
நிதிக்கொள்கை கமிட்டியின் 6 உறுப்பினர்களும் (சக்தி கந்ததாஸ் உள்பட) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாக்களித்தனர். இந்த நிலையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு முறையே 5.75 சதவீதம் மற்றும் 5.50 சதவீதமாக இருக்கின்றன.
கடந்த 2018-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி அன்று வங்கி வட்டி விகிதங்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 1-ந் தேதி மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. எனவே ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் முறையே 6.50 சதவீதம் மற்றும் 6.25 சதவீதமாக உயர்ந்தன. அக்டோபர் 5-ந் தேதி அன்று இந்த வட்டி விகிதங்கள் கூட்டப்படவோ, குறைக்கப்படவோ இல்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அன்றும் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் பிப்ரவரி 7-ந் தேதி அன்று 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. ஏப்ரல் 5-ந் தேதி மீண்டும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இப்போது மேலும் 0.25 சதவீதம் குறைக்ப்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. எனவே வழக்கம்போல் அது பற்றிய மதிப்பீடுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணவீக்கம், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 3-3.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர்-2020 மார்ச்) 3.4-3.7 சதவீதமாக குறையும் என்றும் இவ்வங்கி தெரிவித்து இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் (2019-20) பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மறுமதிப்பீடு செய்துள்ளது. முந்தைய ஆய்வறிக்கையில் அது 7.2 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. இவ்வங்கியின் அடுத்த ஆய்வுக் கூட்டம் ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும். வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 7-ந் தேதி (புதன்கிழமை) வெளிவரும்.
இந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தகவல்
இந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது.
5ஜி என்பது செல்போன்களுக்கு மட்டுமே உரிய அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். நம் நாட்டில் இது விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகில் தற்போது 4ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியில் 5ஜி சேவை தொடங்கி விடும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுவாக்கில்) தொடர் பயன்பாட்டில் 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் ஜி.எஸ்.எம்.ஏ. முன்னறிவிப்பு செய்து இருக்கிறது. இதே காலத்தில் சுமார் 100 கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி 4ஜி செல்போன் சேவையை தொடங்கியது. இந்நிறுவனத்தின் வரவு இந்திய செல்போன் துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. செல்போன் சேவையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் இந்நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை அறி முகம் செய்ய தயாராகி வருவதாக கூறப் படுகிறது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்வு: ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது
தொடர் விலை உயர்வு காரணமாக தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் (மே) தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த மாதம் 22-ந்தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த 4-ந்தேதி ஒரு பவுனுக்கு ரூ.168-ம், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.152-ம் என தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்றும் அதன் விலை அதிகரித்து தான் காணப்பட்டது. கடந்த 10 நாட்களில் ஒரு பவுன் ரூ.680 வரை உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 116-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 928-க்கும் தங்கம் விலை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 6-ம், பவுனுக்கு ரூ.48-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 122-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 976-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்றும் (வெள்ளிக்கிழமை) உயரும் பட்சத்தில், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொட்டுவிடும். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 129-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 32-க்கும் விற்பனை ஆனது.
அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே சென்றது. அதிகபட்சமாக பிப்ரவரி மாதம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 230-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 840-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு விலை சற்று குறைந்தது.
இந்த நிலையில் தற்போது விலை உயர்வு காரணமாக, ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை மீண்டும் தொடுகிறது. அதன்பின்னரும், விலை உயரும் என்றே தங்கம் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி நிருபர்களிடம் கூறுகையில், ‘அமெரிக்கா, சீன பொருட்கள் மீது மறைமுகமாக பொருளாதார தடைவிதித்து கூடுதலாக சுங்கவரி விதித்து வருகிறது. அதேபோல், சீனாவும் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகமான வரி விதிக்கிறது. இப்படியாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார போர் நிலவுகிறது. அதன் தாக்கம் காரணமாகவே தங்கம் விலை உயருகிறது. இந்த தாக்கம் நீடிக்கும் வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கும்’ என்றார்.
தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு சட்ட மசோதா ஒன்றை உருவாக்கி மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது.
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாள் முழுவதும் திறந்து வைக்க இந்த மசோதா அனுமதி வழங்குகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப இந்த சட்ட அனுமதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, இதுபற்றி தீவிரமாக ஆலோசித்து வந்த தமிழக அரசு, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலாளர், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் சேவைகளில் கட்டுப்பாடுகள்) என்ற 2016-ம் ஆண்டுக்கான மாதிரி மசோதா ஒன்றை அனுப்பி இருந்தார்.
இந்த மசோதா மீது தொழிலாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள், சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன என்றும், அந்தந்த மாநிலங்கள் அங்குள்ள உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப அதை திருத்தி சட்டமாக்கிக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பணி நிலைகளில் சமமான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தொழிலை ஊக்குவிப்பதோடு அதனுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
மேலும், ஆண்டு முழுவதும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்கும் நேரம், மூடும் நேரம் ஆகியவற்றுக்கு இந்த மசோதா முழு சுதந்திரம் வழங்குகிறது. அதோடு, பாதுகாப்பு, கழிவறை, பெண்களின் கண்ணியத்துக்கு பாதுகாப்பு, அவர்களின் போக்குவரத்து வசதி போன்றவை அளிக்கப்படும் நிலையில் பெண்களுக்கு இரவு நேரப் பணிகள் வழங்கலாம்.
பெண்களை வேலையில் சேர்ப்பது, பயிற்சி வழங்குவது, பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்வதில் பாலின பாகுபாடு காட்டக்கூடாது என்றும், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசுக்கு தமிழக தொழிலாளர்கள் ஆணையர் கடிதம் எழுதி உள்ளார். அதில், ஆரம்பமாக 3 ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்த முன்மொழிவை தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ல் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களை, 3 ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் திறந்து வைக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி, பணியாளருக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் அனைவருக்கும் தெரியும் இடத்தில் பணியாளர்களின் விவரங்கள் வைக்கப்பட வேண்டும். அவர்களின் விடுமுறை பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
சம்பளம், கூடுதல் நேர பணிக்கான சம்பளம் போன்றவை வேலையாளின் வங்கி வைப்பு கணக்குக்கு அனுப்பப்பட வேண்டும். நாளொன்றுக்கு 8 மணிநேரத்துக்கு மேல் மற்றும் வாரம் ஒன்றுக்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணி அளிக்கக்கூடாது.
கூடுதல் பணி அளித்தால் அது நாளொன்றுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல், வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் நீடிக்கக்கூடாது. கூடுதல் பணி நேரம் அளிக்காத நிலையில் பணியாளர் யாராவது வேலை செய்வது கண்டறியப்பட்டால் வேலை அளித்தவர் அல்லது மேலாளருக்கு தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவான காலகட்டங்களில் பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற தேவை இல்லை. பெண் பணியாளரிடம் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்ற பிறகே, அவருக்கு போதிய பாதுகாப்பு அளித்து இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை பணியாற்ற அனுமதிக்கலாம்.
‘ஷிப்டு’ முறையில் பணியாற்றும் பெண்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதரப்பட வேண்டும். இந்த வசதி குறித்து நிறுவனத்தின் பிரதான வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான குழுவை, நிறுவன உரிமையாளர் அமைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று மீறப்பட்டாலும், அது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Wednesday, June 5, 2019
பயோ சென்சார் பேண்ட்
மருத்துவ துறையில், மனிதர்களுக்கு உதவும் பல நவீன முன்னேற்றங்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், இன்னொரு கருவியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. ரூட்கேர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் குழு கையில் வாட்ச் போன்று அணிந்து கொள்ளக்கூடிய பேண்ட் ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த பேண்ட் ரத்தத்தில் இருக்கும் அணுக்களை அளவிடுகிறது. இதனுள்ளே இருக்கும் மிகச்சிறிய பயோ சென்சார் ஒரு சிறு துளி ரத்தத்தை ஆய்வு செய்து எவ்வளவு சிகப்பு அணுக்கள் இருக்கின்றன, எவ்வளவு வெள்ளை அணுக்கள் உள்ளன, ரத்த சோகை இருக்கிறதா என்பன போன்ற தகவல்களை அளிக்கிறது. உடனடியாக ரத்த பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் இந்த கருவியை உபயோகித்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, லுகேமியா என்று சொல்லக்கூடிய ரத்த புற்றுநோயையும் இந்த பேண்ட் கண்டறிகிறது.
இதனால் நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்து குணமாக்கலாம்.சர்க்கரை நோய் மட்டுமின்றி ரத்த சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களையும் இந்த சென்சார் கருவி கண்டறிகிறது. காற்றில் இருக்கும் நச்சு பொருட்களின் அளவையும் கூட சொல்லி விடுகிறது இந்த பேண்ட்.
ஆன்லைன் வாசிப்பிற்கு துணை நிற்கும் விளக்கு

பயணத்துக்கு உதவும் ‘ஆஸ்ட்ரிச் பில்லோ’
இந்த தலையணை வெளியூர் பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. பொதுவாக பாலைவனத்தில் எதிரிகளைப் பார்த்தால் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டது நெருப்புக் கோழி (ஆஸ்ட்ரிச்). உங்கள் முகத்தை முழுவதுமாக மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தலையணைக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் மிருதுவான, நெளியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண், காது ஆகியவை நன்கு மூடியுள்ளதால் இதைப் போட்டுக் கொண்டால் நிம்மதியான உறக்கம் நிச்சயம். இதைப் போட்டு தூங்கினால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எந்த இடத்திலும், எத்தகைய சூழலிலும் இதை அணிந்து கொண்டு தூங்க முடியும். குட்டித் தூக்கம் போட நினைப்பவர்கள் கூட இதை அணிந்து கொண்டு தூங்கி புத்துணர்ச்சி பெறலாம். இதன் விலை ரூ.2,400.
பல்லில் ஒட்டிக் கொள்ளும் குட்டி சென்சார்

சோலார் போர்டபிள் விளக்கு
வெளியூருக்கு செல்லும் போதெல்லாம் அவசர தேவைக்கு டார்ச் லைட் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியமாகும். ஆனால் இவற்றுடன் பேட்டரி உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் சூரிய ஆற்றலில் இயங்கும் விளக்குகள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பயோலைட் நிறுவனம் சுற்றுப் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்லும் வகையில் போர்டபிள் விளக்கை அறிமுகம் செய்துள்ளது. ஒருங்கிணைந்த சோலார் பேனலைக் கொண்டதாக இது வந்துள்ளது. அதாவது விளக்கு ஒருபுறமும், மறுபக்கத்தில் சோலார் பேனலும் உள்ளன.
இதனால் இந்த விளக்கின் மீது சூரிய ஒளி படும்படி இருந்தாலே போதும். சூரிய ஒளியில் 7 மணி நேரத்தில் இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த விளக்கில் வெளிச்சம், கொண்டாட்டங்களுக்கான பலவித ஒளி என தனித்தனியாக வெளிச்சத்தைப் பெற முடியும். சூரிய ஒளி இல்லாத பகுதியில் யு.எஸ்.பி. சாக்கெட் மூலம் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்தில் இது முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.
இது தொடர்ந்து 50 மணி நேரம் எரியும். இதன் விலை சுமார் ரூ.1,600.
செவிலியர்களுக்கு உதவும் தானியங்கி சக்கர நாற்காலி

லீவ் டிராவல் அலவன்ஸ் பெறுவது எப்படி?
பெரும்பாலும் அரசு நிறுவனங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதற்கான தொகையை அளிக்கின்றனர். எல்.டி.ஏ. (Leave Travel Allowance) எனப்படும் இந்த சலுகையை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சில தனியார் நிறுவனங்களும் இத்தகைய வசதியை பணியாளர்களுக்கு வழங்குகின்றன. இதன் மூலம் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், உடனிருக்கும் பெற்றோர், உடன் பிறந்தோரையும் அழைத்துச் செல்லலாம். இந்த சலுகை இதற்கு கிடைக்கும் வருமான வரிசலுகை பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
சுற்றுலா என்கிற போது இதற்கேற்ப எல்.டி.ஏ. விடுப்பாக இருக்க வேண்டும். மருத்துவ விடுப்பை பயன்படுத்தி சுற்றுலாவுக்கு சென்று வந்து சுற்றுலா செலவு கோர முடியாது.பொதுவாக சுற்றுலாவுக்கு ஆகும் மொத்த செலவயையும் திரும்பப் பெறலாம் (கிளெய்ம்) என்று நினைக்கின்றனர். ஆனால் சுற்றுலா செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை மட்டுமே திரும்பப் பெற முடியும். ரெயிலில் (முதல் ஏ.சி. வகுப்பு), விமானத்தில் (எகானமி வகுப்பு), கார், பஸ் உள்ளிட்டவற்றில் பயணித்தால் அதற்குரிய ரசீதை சமர்ப்பிப்பதன் மூலம் திரும்பப் பெறலாம்.
பொதுவாக இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மட்டுமே எல்.டி.ஏ. அனுமதி உண்டு. வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அனுமதி கிடையாது. எல்.டி.ஏ. அளிக்கப்படும் தொகைக்கு வரிச் சலுகையை வருமான வரிச் சட்டம் பிரிவு 10 (5)ன் கீழ் பெற முடியும். கணவன், மனைவி இருவரும் பணி புரிபவராக இருந்தாலும், தனித்தனியே எல்.டி.ஏ. திரும்பப் பெறலாம். இருவரின் எல்.டி.ஏ. தொகைக்கும் வரிச்சலுகை உண்டு. இதனால் இருவர் பணிபுரிந்தால் இரண்டு இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
மேகங்கள் வரவேற்கும் மேகமலை
தமிழகத்தில் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல பல பகுதிகள் இருந்தாலும், கோடைக் காலத்திலும் சுற்றுலாப் பயணிகள் நெரிசல் குறைவாக இருக்கும் பகுதிகளுள் ஒன்றாக திகழ்கிறது மேக மலை. மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைப் பகுதியாக இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடர், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வருஷநாடு மலைத் தொடரால் இணைந்துள்ளது. இதனால் திடீரென பெய்யும் மழை, மேகங்கள் தவழ்ந்து செல்லும் பசுமை போர்த்திய பகுதியைப் பார்க்கும்போதே பரவசம் பீறிடும். இது மதுரையிலிருந்து சுமார் 145 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சின்னமனூர் சென்று அங்கிருந்து மேகமலைக்கு செல்வது எளிது. இந்த மலை உச்சிக்கு செல்ல 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தாக வேண்டும். ஒற்றை சாலை என்பதால் கார் பயணம் மட்டுமே சிறப்பானது. அதிலும் எஸ்.யு.வி. ரக கார்களை மட்டுமே பயன்படுத்தவும். சாலைகள் சற்று மோசமாக இருப்பதால் சிறிய ரக கார்களைத் தவிர்ப்பது நல்லது. மலை உச்சிக்கு செல்வதற்கு பக்கவாட்டில் தடுப்புச் சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. எனவே ஜாக்கிரதையாக செல்வது நல்லது. இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையே ஆங்காங்கே பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர் தேக்கங்கள் இருக்கின்றன. மலையின் மேல் பகுதியில் மகாராஜா மெட்டு என்ற இடத்திலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் ரசிக்கலாம். இப்பகுதியிலிருந்துதான் வைகை ஆறு உருவாவதாகக் கூறப்படுகிறது.
மேக மலைக்கு ஹைவேஸ் மவுன்டெய்ன் என்ற பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கு தேயிலை மற்றும் ஏலக்காய், காபி எஸ்டேட்கள் அதிகம். இது கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை சிகரங்களுக்கு நடுவை அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு இது.
இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள அணையை இங்கே பார்க்க முடியும். நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர்தான் சுருளி அருவிக்குச் செல்கிறது. அருவியிலிருந்து வெளியேறும் நீர் தூவானமாக காற்றில் சிதறி தூவானம் என்ற பகுதியில் சிலீரென்று வீசுகிறது. இதனாலேயே இப்பகுதி தூவானம் என்றழைக்கப்படுகிறது. மலைப் பகுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலே 13 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு தங்குவதாயிருந்தால் முன்பதிவு செய்யவேண்டும். யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மலை உச்சிக்கு செல்பவர்கள் மாலையே திரும்ப வேண்டும் என வனத்துறை வலியுறுத்துகிறது. இங்கிருந்து தேக்கடிக்கும் செல்லலாம். அமைதியை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலா இடமாக மேகமலை திகழ்கிறது.
கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி

பிரெஞ்சு கட்டிடக் கலையைப் பறைசாற்றும் புராதன கட்டிடங்கள், விளையாட்டுப் பூங்காக்கள், குதூகலிக்க கடற்கரை நீர் விளையாட்டு, கடல் பயணம், அருங்காட்சியகம் என அனைத்தும் உள்ள ஒரே ஊர் புதுச்சேரி. இந்த நகரின் சாலைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பு. எந்தச் சாலையில் சென்றாலும் அது கடற்கரையில்தான் போய் முடியும்.
புதுச்சேரியில் பொழுது போக்கிற்கான முக்கிய இடங்களுள் கடற்கரை முக்கியமானது. தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள கடற்கரை 1.5 கிலோமீட்டர் நீளமுடையது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சாலையில் ரசித்தபடி நடந்து செல்வது அழகான சுகம்தரும். மாலை நேரங்களில் காந்தி சிலை அருகே கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் காணலாம்.
கடற்கரைக்கு அருகே உள்ளது பாரதிபூங்கா. அங்கே குழந்தைகள் விளையாட வசதி உண்டு. குடும்பத்துடன் உட்கார்ந்து அமைதியாக பொழுதைக் கழிக்கலாம். மிகவும் ரம்மியமான பகுதி இது. இந்தப் பூங்காவை ஒட்டியே புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, மணக்குள விநாயகர் ஆலயம், அரவிந்தர் ஆசிரமம் ஆகியன உள்ளன. இவற்றை சற்று காலாற நடந்தே சென்று பார்க்க முடியும். அந்த அளவுக்கு இவை இப்பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. இங்குள்ள அருங்காட்சியகத்தில் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் உள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை அருங்காட்சியகம், பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளையும் பார்க்கலாம். பேருந்து நிலையம் அருகே உள்ளது தாவரவியல் பூங்கா. இது 1826-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா, தென்னிந்தியாவின் சிறந்த பூங்காக்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1,500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்குள்ள இசை நீரூற்று அனைவரையும் கவரும்.
ரோமானியர்களின் வர்த்தக மையமாகத் திகழ்ந்த இடம் அரிக்க மேடு பகுதியாகும். புதுச்சேரியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள் சார்ந்த குறிப்புகள் இங்குள்ளன.இங்குள்ள கடற்கரை பகுதிகளில் 6 கடற்கரை பகுதிகள் மிகவும் பிரசித்தமானது. ஆரோவில் கடற்கரை, புரோமினேட் கடற்கரை, பாரடைஸ் பீச், செரினிடி பீச், மாஹே பீச், காரைக்கால் பீச்.
புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சுண்ணாம்பாறு படகுத்துறை உள்ளது. வங்கக் கடலை ஒட்டி சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் பகுதியில் இப்படகுத்துறை உள்ளது. சுண்ணாம்பாற்றில் பயணம் செய்வது கடலில் செல்வது போன்ற உணர்வைத் தரும். பயணம் முடிவில் பாரடைஸ் பீச்சை அடையலாம். அழகான தீவு போல இது காட்சி தருகிறது. சுண்ணாம்பாற்று தண்ணீரும், கடலில் இருந்து வரும் பேக் வாட்டரும், எதிரே கடலும் தீவு போன்ற கடற்கரைப்பகுதி மணல் வெளியும் ரம்மியமான சூழலை அளிக்கும். இந்த பகுதியைப் பார்க்கும்போதே வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வு மேலிடும். இங்கு நீர் விளையாட்டுகள் பல உள்ளன. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடம்.
ஆரோவில் பீச்
இது 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 121 நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மண் எடுத்துவரப்பட்டு தாமரை மொட்டு வடிவமைப்பு உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மாத்ரி மந்திர் என்ற தியான மண்டபமும் உள்ளது. இதைச் சுற்றி 12 பூங்காக்கள் உள்ளன. ஆரோவில் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையமும் உள்ளது. ஆரோவில் பற்றிய கண்காட்சி, படக்காட்சி ஆகியவற்றை காணலாம். உணவு விடுதியும் உள்ளது. ஆரோவில்லில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் இங்கு உள்ளன. காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளும் இதன் கட்டுப்பாட்டில் வருவதால் இங்குள்ள கடற்கரைப் பகுதிகளும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இப்பகுதியில் 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய சர்வதேச நகராக இது திகழ்கிறது.
புதுச்சேரியில் தங்குமிடங்கள் அதிகம் உள்ளன. அவரவர் வசதிக்கேற்ப அறைகளில் தங்கலாம். குடும்பத்தினருடன் தங்குவதற்கேற்ற விடுதிகளும் உள்ளன. அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும். புதுச்சேரியை நடந்தே ரசிக்கலாம். மாலையில் சைக்கிள் ரிக்ஷாக்களில் பயணிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். சைக்கிளில் நகரைச் சுற்றி வர வாடகை சைக்கிளும் கிடைக்கிறது. குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்புவோர் அவசியம் செல்ல வேண்டிய நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று.
டொயோட்டா ‘கிளன்ஸா’

மீண்டும் வருகிறது ஸ்கோடா ஆக்டாவியா ஆர்.எஸ்.

இந்திய சந்தைக்கு வரும் ஸ்மார்ட் கார்

ஸ்மார்ட்போன் ஆப் (செயலி) மூலம் காரின் ஹாரன், விளக்குகளை தொலை தூரத்திலிருந்தே செயல்படுத்த முடியும். அவசரகால தகவலையும் அனுப்ப முடியும்.
காரின் செயல்பாடுகள், அதன் என்ஜின் நிலை உள்ளிட்டவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் பெற முடியும். காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் கடந்தால் ஸ்பீட் அலெர்ட் எச்சரிக்கை வரும். இலக்கு மாறி பயணித்தால் அதுகுறித்த எச்சரிக்கையும் வரும். கார் நீண்ட நேரம் செயல்படுத்தாமல் நியூட்ரலில் இருந்தால் அது குறித்தும் எச்சரிக்கும்.
காரின் இடத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். சாலையில் வாகன நெரிசல் குறித்த தகவல் உடனடியாக கிடைக்கும். இதன் மூலம் மாற்று வழியில் செல்லலாம். இந்த தொழில்நுட்பம் பிற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போதுதான் அது இந்தியாவுக்கு வந்து உள்ளது. குரல் வழி சேவையில் இந்தியர்களின் உச்சரிப்புக்கு ஏற்ப (ஆங்கில உச்சரிப்பு) மாற்றியுள்ளது ஹூண்டாய். காருக்கான இ.சிம். கார்டை வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து வழங்குகிறது ஹூண்டாய். அமேசானுடன் இணைந்து இணையம் சார்ந்த கிளவுட் சேவைகளையும் அளிக்கிறது.
குடும்பத்தினர் காரை எடுத்துச் சென்றால் வாகனம் செல்லும் திசை, செயல்பாடுகளை அனைவருமே அறிந்து கொள்ளும் வகையில் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
புதிய கார்களில் இத்தகைய புளூ லிங்க் வசதியை 3 ஆண்டுகளுக்கு இலவசமாக அளிக்கிறது ஹூண்டாய். அதன் பிறகு இந்த சேவை உங்களுக்குத் தேவைப்பட்டால் அப்போது விதிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். கார் நேவிகேஷன் சிஸ்டம் அல்லது ஸ்மார்ட்போன் ஆப் (செயலி) மூலம் புளூ லிங்க் சேவையைப் பெறலாம். ஏற்கனவே வாங்கிய காரிலும் இத்தகைய இணைப்பு வசதியை பெறலாம். வாகனத்துக்கு வாரண்டி இருந்தால் பழைய காராக (செகன்ட் ஹேண்ட்) இருந்தாலும் இத்தகைய சேவையை அளிக்கிறது.
டி.வி.எஸ். அபாச்சே ஆர்.ஆர் 310 அறிமுகம்

ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்பெஷல் எடிஷன்
ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆக்டிவா. இந்த மாடலில் இரண்டு புதிய வண்ணங்களைக் கொண்ட ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் டி.எல்.எஸ். வேரியன்ட்களாக இவை வந்துள்ளன. கண்கவர் வண்ணத்தில் வந்துள்ள இந்த மாடல்கள் மந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.400 மட்டுமே அதிகமாகும். லிமிடெட் எடிஷன் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ.55,035. டீலக்ஸ் மாடல் விலை ரூ.56,900. ஸ்பெஷல் எடிஷனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் முன்பதிவு செய்யலாம். சில்வர் பிளாக் இரட்டை வண்ணங்கள் இணைந்தது மற்றும் முத்து வெள்ளை மற்றும் தங்க நிறம் இணைந்த கலவை ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது இந்நிறுவனம். என்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இது வழக்கம் போல 109.1 சி.சி. திறன் கொண்டது. 8 ஹெச்.பி. மற்றும் 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. பி.எஸ்.6 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக ஸ்கூட்டர் விற்பனை சற்று மந்தமடைந்துள்ளது. இந்த நிலையைப் போக்க முடுக்கிவிடப்பட்ட முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் ஸ்பெஷல் எடிஷனாகும்.
ஹோண்டா சி.பி. ஷைன்
இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஷைன். 125 சி.சி. பிரிவிலான இந்த மோட்டார் சைக்கிளில் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் விலை ரூ.60 ஆயிரமாகும். டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.63,750 ஆகும். கருப்பு சிவப்பு வண்ணக் கலவையில், சில்வர் வண்ண சேர்க்கையோடு இது வந்துள்ளது. இரண்டு வண்ணத்திலான (டூயல் டோன்) பெட்ரோல் டேங்க், முகப்பு விளக்கை சுற்றி கிராபிக்ஸ், பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பகுதியில் வித்தியாசமான கண்ணைக் கவரும் வகையிலான ஸ்டிக்கர் ஆகியன சிறப்பம்சமாகும். மற்றபடி என்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான 124.70 சி.சி. திறன், ஏர் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 10.1 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.
ஹோண்டா சி.பி. ஷைன்
இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஷைன். 125 சி.சி. பிரிவிலான இந்த மோட்டார் சைக்கிளில் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் விலை ரூ.60 ஆயிரமாகும். டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.63,750 ஆகும். கருப்பு சிவப்பு வண்ணக் கலவையில், சில்வர் வண்ண சேர்க்கையோடு இது வந்துள்ளது. இரண்டு வண்ணத்திலான (டூயல் டோன்) பெட்ரோல் டேங்க், முகப்பு விளக்கை சுற்றி கிராபிக்ஸ், பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பகுதியில் வித்தியாசமான கண்ணைக் கவரும் வகையிலான ஸ்டிக்கர் ஆகியன சிறப்பம்சமாகும். மற்றபடி என்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான 124.70 சி.சி. திறன், ஏர் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 10.1 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.
Tuesday, June 4, 2019
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல், கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 2-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார். இவரது நியமனத்துக்கு நியமனங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. அவருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, இதுதொடர்பான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதில், “மே 31-ந்தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் அஜித் தோவல் நீடிப்பார். அவரது பதவிக்காலம், பிரதமரின் பதவிக்காலத்துடன் இணைந்ததாக இருக்கும். இந்த பதவிக்காலத்தில், அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். தேச பாதுகாப்பு விவகாரங்களில் அவர் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் தோவல், 1968-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனவர். சில ஆண்டுகள் போலீஸ் பணிக்கு பிறகு, 33 ஆண்டுகள் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிந்துள்ளார். உளவுத்துறை இயக்குனராக 2004-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். உளவுத்துறை வட்டாரங்களில் மூளைபலம் மிகுந்தவராக அறியப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு, சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிகழ்வுகள், அஜித் தோவலின் கண்காணிப்பிலேயே நடத்தப்பட்டன.
மேலும், 1999-ம் ஆண்டு, இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்றுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)