You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: May 2019

Tuesday, May 28, 2019

கேரளாவில் மகளின் திருமண விழாவில் பாட்டு பாடியபோது போலீஸ் அதிகாரி மரணம் - வீடியோ இணைப்பு


திரைப்படத்தில் வருவது போல, தனது மகளின் திருமண விழாவில் பாடிக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது அங்கிருந்தவர்களின் மனதை உருக வைத்தது. எனினும், திருமணம் திட்டமிட்டபடி நடந்தது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நீந்தகரா கிராமத்தைச் சேர்ந்த பி.விஷ்ணு பிரசாத், திருவனந்தபுரத்தில் கரமனா காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றினார். இவரது இளைய மகள் அர்ச்சாவுக்கும் அதே மாவட்டம் கடக்கல் நகரைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத்துக்கும் (மாப்பிள்ளை) கடந்த 26-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதை யொட்டி விருந்தினர்களை மகிழ் விப்பதற்காக 25-ம் தேதி இரவு தனது வீட்டில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஷ்ணு பிரசாத். அப்போது இசைக் குழுவினருடன் சேர்ந்து, பாடிக் கொண்டிருந்தார். மம்முட்டி நடித்த ‘அமரம்’ படத்தில், மகளின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் தந்தை பாடிய புகழ்பெற்ற ‘ராக்கிளி பொன்மகளே’ என்ற பாடலை பாடிக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் திடீரென சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த னர். இந்தத் தகவல் அவருடைய உறவினர்களில் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. திருமணம் தடைபடக்கூடாது என்று எண்ணிய அவர்கள் மணப்பெண்ணுக்கும் மற்ற உறவினர்களுக்கும் இந்தத் தகவலை தெரிவிக்கவில்லை. அர்ச்சா தனது வீட்டிலிருந்து மணமகனுடன் வெளியே சென்றபோது, தனது தந்தையை தேடி உள்ளார். அவர் விரைவில் வருவார் என சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். 26-ம் தேதி காலையில் பரிமணம் துர்காதேவி கோயிலில் அர்ச்சாவுக்கும் விஷ்ணு பிரசாத்துக்கும் திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்றது. பின்னர் புதுமணத் தம்பதியை மணமகன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், உயிரிழந்த விஷ்ணு பிரசாத்தின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு சற்று முன்புதான் மணப்பெண்ணிடம் அவரது தந்தையின் மரண செய் தியை தெரிவித்துள்ளனர். இதனால் அர்ச்சா மணமுடைந்து கதறி அழு தது அங்கிருந்தவர்களின் மனதை உலுக்குவதாக அமைந்தது.

கடனை செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

வங்கிகளில் பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கியை மத்திய தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த நூதன் தாகுர் என்ற சமூக ஆர்வலர் தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தாக்கல் செய்த மனுவில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா 2017-ம் ஆண்டு நிகழ்த்திய உரையில், அதிக கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அவ்விதம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடன்தாரர்கள் விவரத்தை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. வங்கிகளின் மொத்த வாராக் கடனில் (என்பிஏ) 25 சதவீதத்துக்கும் மேலான கடன் தொகை பெற் றுள்ள நிறுவனங்களில் 12 நிறுவனங் களின் பட்டியலை அனுப்புமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விதம் கடன் பெற்ற நிறுவனங்கள், தனி நபர்களின் கடனை மீட்பதற்கான மாற்று திட்டங்கள் (சீரமைப்பு) அளிக்கு மாறு, குறித்த காலத்துக்குள் அவை செயல்படுத்த முடியாவிட் டால் அவற்றை திவால் நடை முறை சட்டத்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள் ளதாக வீரல் ஆச்சார்யா குறிப் பிட்டிருந்தார். அதை சுட்டிக் காட்டி வங்கிகளுக்கு அனுப்பிய கடனை பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் பெயர் விவரத்தை வெளியிடுமாறு தாகுர் கேட்டுள்ளார். மனு நிராகரிப்பு ஆனால் இது மிகவும் ரகசியமானது, இந்த விவரத்தை வெளியிட முடியாது என ஆர்பிஐ தெரிவித்துவிட்டது. ரிசர்வ் வங்கியில் உள்ள தலைமை தகவல அதிகாரி, விதி 8 (1), (டி) (வர்த்தக ரகசியம்) ஆகிய பிரிவுகளின்கீழ் ஆர்டிஐ மனுவுக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டு தாகுரின் மனுவை நிராகரித்துவிட்டார். இதுகுறித்து மத்திய தகவல் ஆணையர் சுபாஷ் சந்திராவிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த அவர், கடனை பெற்று திரும்ப செலுத்தாத வர்கள் விவரத்தை வெளியிட் டால் வங்கியில் முதலீடு செய்துள் ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற ஆர்பிஐ கூற்றை ஏற்றுக் கொண்டாலும், இதில் மறு சீரமைப்புக்கு அனுப்பப்பட்டுள் ளவர்களின் பெயர் விவரங்களை வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை. எனவே ஆவணங்களை முழுமையாக தராவிட்டாலும், பெயரை வெளியிடலாம் என்று ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தர விட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித் துள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத் திலும், இதர வகுப்புகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 முதல் அனைத்துப் பள்ளி களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், கோடை விடு முறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக் கல்வி இயக் ககத்திலிருந்து தகவல் அனுப்பப் பட்டிருப்பதாக ஊடகங்களில் கடந்த 22-ம் தேதி செய்திகள் வெளியாயின. ஆனால், இதுதொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்வி இயக்ககம், பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அறி வித்தது. கோடை வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போகும் என்று எதிர்பார்த்துக் கொண்டி ருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆவலை இந்த அறிவிப்பு மேலும் அதிகப் படுத்தியது. வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்பது போன்ற தகவல்கள் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியில் தொடர்ந்து பரவிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் நேற்று தனியார் தொலைக் காட்சியில் கூறும்போது, ‘‘திட்ட மிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வெயிலால் பள்ளி கள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்ற செய் திகள் உண்மை அல்ல. பள்ளி கள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை. ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். மாணவர்களின் நலன் கருதி.. இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் நேற்று அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளி களிலும் 2019-2020-ம் கல்வி ஆண் டில் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை முழுமையான அளவில் முடிக்க வேண்டியுள்ள தால் மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்பட வேண்டும். இந்த விவரத்தை தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரி விக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10 நகரங்களில் வெயில் சதம் இரு நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் நேற்று 10 நகரங் களில் 100 டிகிரி அளவை விட அதிகமாக வெயில் பதிவாகி யுள்ளது. மேலும் இரு நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசவேண்டிய கடல் காற்று முறையாக வீச வில்லை. தற்போது தென்மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அள வின்படி அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் தலா 112 டிகிரி பதிவாகியுள்ளது. வேலூரில் கடந்த 10 ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இது உள்ளது. மேலும், திருச்சியில் 108 டிகிரி, கரூர் பரமத்தியில் 106 டிகிரி, மதுரை யில் 105 டிகிரி, நாமக்கல், சேலம் மற்றும் பாளையங்கோட்டையில் தலா 104 டிகிரி, தருமபுரியில் 102 டிகிரி, கோவையில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. தெலங்கானா முதல் கன்னியா குமரி வரை தமிழகத்தின் உட்பகுதி வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதன் காரணமா கவும், வெப்பச் சலனம் காரணமாக வும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக் கோட்டை ஆகிய 12 மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கூடலூர் பஜாரில் 5 செமீ மழை திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 5 செமீ, நடுவட்டத்தில் 3 செமீ, நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை, சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் கொடநாடு, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செமீ, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Wednesday, May 22, 2019

அதிக சார்ஜ் ஏற்றும் பவர் பேங்க்


 • வெளியூர் பயணங்களின் போது அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களில் பவர் பேங்கும் ஒன்றாகிவிட்டது. 
 • இந்த ஹூகோநூயி பவர் பேங்க் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் யு.எஸ்.பி.- சி நோட்புக்ஸ் ஆகியவற்றுக்கு சார்ஜ் ஏற்ற பயன்படும். பொதுவாக ஒரு பவர் பேங்க் சார்ஜ் ஏற குறைந்தது 10 மணி நேரம் ஆகும். 
 • ஆனால் இந்த ஹூகோநூயி பவர் பேங்க் நான்கு மணி நேரத்திலேயே சார்ஜ் ஆகிவிடுகிறது. 
 • இது 10000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. 
 • உள்புறம் தரமான காப்பர் சுருள் பொருத்தப்பட்டுள்ளதால் வேகமாக மின்சாரத்தை கடத்தி சீக்கிரமாக நமது கருவிகளை சார்ஜ் செய்யும். அது மட்டுமின்றி சார்ஜ் ஏறியவுடன் தானாகவே பவர் ஆப் ஆகிவிடும். 
 • இதனால் தேவைக்கு அதிகமாக சார்ஜ் ஏறி நமது ஸ்மார்ட் கருவிகள் சூடு ஏறிவிடாமல் பாதுகாக்கிறது. 
 • இதன் பின்புறத்தில் சாய்வாக வைக்கக்கூடிய ஒரு போன் ஸ்டாண்ட் இருப்பதால் நம் போனை இதில் வைத்து வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். மற்ற பவர் பேங்குகளை விட இருபத்துஐந்து சதவீதம் விரைவாக சார்ஜ் செய்யும் இதன் விலை ரூ.2,500.

பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’

 • சமீப காலங்களில் இணையதளத்தையும் தாண்டி ஹாட் நியூஸாக பேசப்பட்ட விஷயம் ஒன்று உண்டென்றால் அது டிக் டாக். 
 • இணையதளத்தில் பேஸ்புக் எனப்படும் முக நூல் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிக அளவில் டிக்டாக் செயலியை பார்த்தவர்கள் அதிகம். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் 31 வரையான காலத்தில் உலகெங்கும் 18.80 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். 
 • சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் என்ற நிறுவனம் 2016-ம் ஆண்டில் உருவாக்கிய செயலிதான் இது. 
 • இந்த செயலியில் உபயோகிப்பாளர் 3 வினாடி முதல் 15 வினாடி வரையிலான சிறிய இசை வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். 
 • அதேபோல 3 வினாடி முதல் 60 வினாடி வரையான இணைப்பு வீடியோ பதிவை இணைக்க முடியும். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படக்கூடியது. 
 • 75 சர்வதேச மொழிகளில் இந்த செயலி உள்ளது. 
 • உலகம் முழுவதும் 80 கோடி உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 
 • 200 நாளில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 100 கோடி வீடியோ பதிவுகள் இதில் பார்க்கப்படுகின்றன. 
 • அமெரிக்காவில் 8 கோடி தடவை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏ.ஐ.) செயல்படுகிறது. 
 • இதனால் தனி நபரின் ஆசை, விருப்பம் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ற வீடியோ பதிவுகளை அளிக்கிறது. 
 • உலகிலேயே பி.யு.பி.ஜி. மொபைல், யூ டியூப், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை அதிகம். 
 • இந்தியாவில் 20 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். 
 • இந்தியாவில் இந்த செயலி மூலம் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்தது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. 
 • ஆபாச வீடியோ உள்ளிட்ட தவறான தகவல் பரப்புவதை கட்டுப்படுத்துவதாக நிறுவனம் அளித்த உறுதிமொழியின் பேரில் இம்மாதம் தடை நீக்கப்பட்டது. 13 வகையான பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 
 • உபயோகிப்பாளர்கள் மத்தியில் செயலியை பயன்படுத்துவதில் உள்ள வழிகாட்டு நெறிகளை நிறுவனம் வெளியிட்டது. 
 • ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தமிழ் உட்பட 10 பிராந்திய மொழிகளில் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. 
 • குழந்தைகளிடம் தவறான தகவல் பரவுவதாக நினைத்தால் பெற்றோர்களே அதை தடுக்கும் வசதி (ரெஸ்ட்ரிக்டர் மோட்) செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை முறை தங்கள் குழந்தைகள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 
 • அதேபோல 13 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான வயது வரம்பு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. ரிஸ்க் வார்னிங் டாக் எனப்படும் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பாக இந்த செயலியை பயன்படுத்த முடியும். வீடியோ பதிவை மற்றவர்கள் பார்வையிட்டு உங்களைத் தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். 
 • மோசமான விமர்சனங்களை வடிகட்டும் வசதி (பில்டர்) உருவாக்கப்பட்டுள்ளது. 
 • பாதுகாப்பு மையம் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 • இந்த இணையதளத்தை டிக்டாக் உபயோகிப்பாளர்கள் பயன்படுத்த முடியும். 
 • உங்களைப் பற்றிய தகவலை மற்றவர்கள் அறிந்து கொள்வதை எப்படி தடுப்பது, உங்கள் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டு) மேலும் வலுவானதாக மாற்றுவது எப்படி, தனிப்பட்ட விஷயங்கள் பரவாமல் தடுப்பது எப்படி என்பன போன்ற விவரங்களும் இதில் உள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் மீண்டும் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது டிக் டாக். 
 •  இது ஆன்லைன் உலகம். விரல் நுனியில் தகவல் பெறும் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்ட சூழலில் நாம்தான் நமக்கான பாதுகாப்பு வளையத்தை நமது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும். 
 • டிக்டாக் செயலி ஒரு பொழுதுபோக்கு என்று நினைத்தால் அதற்குரிய, பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றினால் உங்களுக்கு ஒரு போதும் பிரச்சினை வராது. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகளும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்க முடியும். கடிவாளம் உங்கள் கையில் இருக்கும்போது குடும்ப வண்டி தறிகெட்டு போகுமா?

45 முதுநிலை சிவில் நீதிபதிகள் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு

மதுரை தலைமை குற்றவியல் நடுவர் உட்பட தமிழகம் முழு வதும் உள்ள 45 முதுநிலை சிவில் நீதிபதிகளுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பரிந்துரைப்படி தமிழகம் முழுவதும் முதுநிலை சிவில் நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் 45 நீதிபதிகளுக்கு, மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, ஏனாம் (புதுச்சேரி) சார்பு நீதிபதி சி.புவனேஸ்வரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதலாவது உதவி நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி, நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் கே.கருணாநிதி, மதுரை தலைமை குற்றவியல் நடுவர் எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தேனி தலைமை குற்றவியல் நடுவர் எம்.இளங்கோவன் ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல கரூர் தலைமை குற்றவியல் நடுவர் பி.பார்த்தசாரதி, பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் ஏ.முரளிதரன், செங்கல்பட்டு முதன்மை சார்பு நீதிபதி கே.சுதா, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் ஆர்.காந்தி, சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் ஜெ.ராதிகா, திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் எஸ்.ஜெகந்நாதன், திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் ஆர்.நம்பி, திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் டி.வி.மணி, திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் என்.ராஜமாணிக்கம், ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் எம்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட 45 முதுநிலை சிவில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 18, 2019

ஆதார் தகவல்களை இனி ‘பூட்டி’ வைக்கலாம் யுஐடிஏஐ நிறுவனம் புதிய வசதி அறிமுகம்

தொழில்நுட்பத்தால் யாரும் திருட முடியாது ஆதார் தகவல்களை இனி ‘பூட்டி’ வைக்கலாம் யுஐடிஏஐ நிறுவனம் புதிய வசதி அறிமுகம். தனி நபரின் ஆதார் விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, அதை தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் முதியோர், விதவை, மாற்றுத்தினாளிகளுக்கான ஓய்வூதியம் போன்ற சமூகநலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடும்பஅட்டை மூலமாக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சமையல் எரிவாயு பெற மானியம் வழங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த ஏழை மக்களை மட்டுமே இத்திட்டங்களின் பயன்சென்றடைய வேண்டும்; தகுதியற்றவர்கள் இதுபோன்ற திட்டங்களின் பயனை அனுபவிப்பதால் அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆதார் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. ஆதார் பதிவு, ஆதார் அட்டை விநியோகப் பணிகளை மத்திய அரசின் சார்பு நிறுவனமான யுஐடிஏஐ செய்து வருகிறது. தற்போது சிம் கார்டு வாங்குவது, வங்கி, அஞ்சல் கணக்கு தொடங்குவது, சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது போன்றவற்றுக்கு ‘உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்’ (KYC) படிவம் வழங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை தாள் வடிவில் விண்ணப்ப படிவமாக பெற்று, அதை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி சமர்ப்பிக்க வேண்டிஉள்ளது. அதை பரிசோதிக்கவும் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், ஆதார் மூலமாக பயோமெட்ரிக் விவரங்கள் (கைரேகை, கண் கருவிழி படலம்) அடிப்படையில் கேஒய்சி படிவம் தாக்கல் செய்ய, கை விரல் ரேகையை வைத்தாலே போதும். அதிகாரிகள் தகவல் இந்நிலையில், இந்த பயோமெட்ரிக் விவரங்களை, நவீன தொழில்நுட்பம் மூலம் வேறு யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட நபரே அந்த விவரங்களை தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை பூட்ட (‘லாக்’ செய்ய) வேண்டும் என்றால், https://uidai.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று, My Aadhaar என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அங்கு Aadhaar Services என்பதன் கீழ் Lock/Unlock Biometric என்று இருக்கும். அதை கிளிக் செய்து, அதில் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். அப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுக்கு ‘ஓடிபி’ எண் வரும். அதை பதிவிட்டால் சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் விவரங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டுவிடும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட நபரே பயோமெட்ரிக் ரீடரில் கை வைத்தாலும், அதை கணினி ஏற்காது. மீண்டும், மேற்கண்டவாறு செய்து Enable/Disable Biometric Lock என்பதன் கீழ் ஓடிபி எண்ணை பதிவிட்டால் மட்டுமே பயோமெட்ரிக் விவரங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம், ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Thursday, May 16, 2019

நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் எத்தனை பதிவாகின? தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள் எத்தனை? அதில் எத்தனை ஓட்டுகள் பதிவாகின? என்று தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக தபால் ஓட்டுகள் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டுக்கான படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட படிவங்களில் சிறு சிறு தவறுகளுக்காக நிராகரிக்கப்பட்டன. அண்மை காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ளதால், அவர்கள் தங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்ற காரணத்துக்காக தபால் ஓட்டுகள் போட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்தவகையில் சுமார் 1¼ லட்சம் பேருக்கு தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை. தமிழக காவல்துறையில் சுமார் 90 ஆயிரம் பேர் முறையாக தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் எத்தனை பேர் முறையாக தபால் ஓட்டுகளை போட்டுள்ளனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. இதன்மூலம் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 23-ந்தேதி எண்ணப்படுகிறது. அன்று காலை 6 மணி வரை அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியும். எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவங்களை முறையாக வழங்கி, அனைவரையும் வாக்களிக்க செய்து, அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ண இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி, “தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என திட்டமிட்டே தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “ஒவ்வொரு வாக்காளருடைய வாக்கும் மிகவும் முக்கியமானது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள் எத்தனை?. அதில் எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளன? என்ற விவரங்களை தேர்தல் கமிஷன் நாளை (வெள்ளிக் கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் குளறுபடி: சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. அதிரடி மாற்றம்

கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த குளறுபடியையொட்டி, சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவை சமீபத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வு எழுதிய சென்னை உளவுப்பிரிவு போலீஸ்காரர் அருணாச்சலம் தேர்வாகவில்லை. தான் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கணக்கு சம்பந்தப்பட்ட கேள்வி ஒன்றில் தான் சரியான விடை எழுதி இருப்பதாகவும், ஆனால் அதனை தவறு என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்து விட்டதாகவும் போலீஸ்காரர் அருணாச்சலம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தார். போலீஸ்காரர் அருணாச்சலம் எழுதிய விடை சரியானது தானா? என்று சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழுவை வைத்து சரிபார்க்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐ.ஐ.டி.பேராசிரியரை வைத்து அருணாச்சலம் எழுதிய விடையை சரிபார்த்ததாகவும், அந்த விடை தவறு என்று ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறியிருப்பதாகவும் சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐகோர்ட்டில் பதில் மனுவில் தெரிவித்தது. அதை அடிப்படையாக வைத்து போலீஸ்காரர் அருணாச்சலம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் போலீஸ்காரர் அருணாச்சலம் ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூர்த்தி என்ற ஐ.ஐ.டி. பேராசிரியர் மூலம் நான் எழுதிய விடையை சரிபார்த்ததாக கூறியுள்ளனர் என்றும், ஆனால் மூர்த்தி என்ற பெயரில் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் யாரும் வேலை பார்க்கவில்லை என்றும், சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐகோர்ட்டில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் அருணாச்சலம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். உண்மையில் மூர்த்தி என்பவர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக வேலை பார்க்கவில்லை என்று தெரிய வந்தது. அவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இந்த செயலுக்கு சென்னை ஐகோர்ட்டு கடுமையான கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் நேற்று மாலை அதிரடியாக மாற்றப்பட்டார். தேர்தல் கமிஷன் அனுமதியை பெற்று செந்தாமரை கண்ணன் மாற்றப்பட்டதாக தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. செந்தாமரை கண்ணனுக்கு புதிய பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த குளறுபடியையொட்டி, ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக ஐ.ஜி.யாக பணியாற்றும் வித்யா ஜெயந்த் குல்கர்னி, சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் புதிய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9-ல் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு 

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களைக் கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி முதல் தாளுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், 2-ம் தாள் எழுத 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜூன் 8-ல் முதல் தாள் தேர்வும், 9-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெறும். அடுத்த 2 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, May 11, 2019

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடம் தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. ஒரு மொழி பாடம் இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும். இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அரசு முடிவு செய்யும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

Friday, May 10, 2019

1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு முன்கூட்டியே ஓய்வு பெற 10 பேருக்கு அறிவுரை

சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. அவர்களில் 10 பேரை முன்கூட்டியே ஓய்வு பெற பரிந்துரை செய்துள்ளது. பணி பதிவேடு ஆய்வு நாடு முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 940 இந்திய காவல் துறை (ஐ.பி.எஸ்.) பணியிடங்கள், ஒப்புதல் அளிக்கப்பட்டவை ஆகும். இதில், 3 ஆயிரத்து 972 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில், சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது. அவர்களின் பணி பதிவேடுகளை கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை ஆய்வு செய்தது. அவர்கள் திறமையாக செயல்படுகிறார்களா என்று கண்காணித்தது. ஓய்வு பெற பரிந்துரை இதில், திறமைக்குறைவாக இருந்த 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு பெறுமாறு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அகில இந்திய பணி விதிகளின்படி, இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- திறமையாக செயல்படுபவர்களை அடையாளம் காணவும், திறமைக்குறைவாக செயல்படுபவர்களை கண்டறிந்து நீக்கவும் இந்த ஆய்வு மத்திய அரசுக்கு உதவும். இந்த ஆய்வின் அடிப்படையில், நன்றாக செயல்படுபவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். திறமைக்குறைவாக செயல்படுபவர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் அல்லது பொதுநலன் கருதி பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் 3 மாத நோட்டீஸ் கொடுத்தோ அல்லது 3 மாத ஊதியம் கொடுத்தோ நீக்கப்படுவார்கள். இதுபோல், கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை, ஆயிரத்து 143 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில், பணித்திறன் இல்லாத 4 அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறுமாறு பரிந்துரை செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.