பிளிப்கார்டின் குளுகுளு ஏ.சி. மார்க்

ன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டின் சப்பிராண்டாக மார்க் என்ற பெயரில் புதிய ஏர் கண்டிஷனர் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.25,999-ல் ஆரம்பமாகிறது. இதில் 1.2 டன் ஏ.சி. மற்றும் 1.5 டன் ஏ.சி.க்கள் 3 நட்சத்திரக் குறியீடு கொண்டவையாக வந்துள்ளன. இதில் 1.5 டன் ஏ.சி.யில் மற்றொரு மாடல் 5 நட்சத்திரக் குறியீடு பெற்றுள்ளது. கண்ணாடி போன்ற ஜொலிப்புத் தன்மையுடன் ஸ்பிளிட் ஏ.சி.யாக இது வந்துள்ளது. இந்த ஏ.சி. தானாக சுத்தம் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டதாக வந்துள்ளது. நான்கு கட்டங்களாக சுத்தம் செய்வதற்கென தனி பொத்தானும் ரிமோட்டில் உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பிராஸ்டிங், டி பிராஸ்டிங், டிரையிங், ஸ்டெரிலைசேஷன் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த புது மாடல் ஏ.சி.க்கள் முற்றிலும் தாமிரத்தால் ஆன கன்டென்ஸரைக் கொண்டவை. இதனால் இது விரைவாக குளிர்ச்சியை அளிக்கும். இதில் கோல்டன் பின் எவாப்ரேட்டர் வசதி உள்ளது. இது துருபிடிப்பதை தடுக்கும். இதில் செல்ப் டயாக்னோசிஸ் நுட்பம் உள்ளது. ஏ.சி. செயல்பாட்டில் பழுது ஏற்பட்டால் அதன் டிஸ்பிளேயில் காட்டும். 1.2 டன் ஏ.சி.யானது 100 சதுர அடி முதல் 150 சதுர அடி பரப்பு கொண்ட அறைக்கு மிகவும் ஏற்றது. இந்திய வீடுகளுக்கு ஏற்ற கட்டுபடியாகும் விலையில் ஏ.சி.க்களை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது. இவை மின்சாரத்தை குறைந்த அளவில் நுகர்வதால் மின்சாரமும் சிக்கனமாக செலவாகும். அழகிய தோற்றம், நவீன வடிவமைப்பு, குறைந்த விலை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். கோடையின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க இந்த ஏ.சி. நிச்சயம் உதவும்.

Comments