எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

 தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது மற்றும்கலந்தாய்வு ஆன்லைன் மூலம்நடைபெற்று வருகிறது. இதேபோல் தமிழகத்தில் ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் முறையாக மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலந்தாய்வும் ஆன்லைனில் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால், சில தொழில்நுட்ப பிரச்சினையால் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதை கைவிட்டு, ஒற்றைச்சாளர கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று கலந்தாய்வு நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி களிடம் கேட்ட போது, “முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்றது போல், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறுவதென திட்டமிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஆன்லைனில் நடத்துவதா இல்லையா என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்” என்றனர்.

Comments