அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு சட்டைகள் கசங்காமலிருக்க ...

வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது ஆண்களின் சட்டைகளை மடிப்பு கலையாமல் பாதுகாப்பது என்பது மிகவும் கடினம். ஏனெனில் குடும்பத்தினர் அனைவரது துணிகளையும் ஒரே சூட்கேஸ் அல்லது பேக்கில் வைக்கும்போது அயர்ன் செய்த சட்டையாக இருந்தாலும், ஊருக்கு சென்று பெட்டியை திறந்து பார்த்தால் அது எந்த அளவுக்கு கசங்கியிருக்கும் என்பது புரியும். இந்தக் குறையைப் போக்க வந்துள்ளதுதான் ஷர்ட் ஆர்கனைசர். இதனுள் அதிகபட்சம் 4 சட்டைகளை டையுடன் வைக்க முடியும். சுற்றுலா பயணம் மட்டுமின்றி அலுவலக வேலையாக அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் ஏற்றது. அமேசான் ஆன்லைனில் இதன் விலை சுமார் ரூ.1,632. பிரவுன், கருப்பு, கிரே ஆகிய மூன்று கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Comments