பட்ஜெட் விலையில் மிகச் சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பான்


ண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மிக அதிகம். வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற உடனடி நோய்களுக்கு மிக முக்கியக் காரணமாய் இருப்பது தண்ணீர்தான். இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீர் மனிதனுக்கு அவசியமாகிறது. இதனாலேயே இப்போது வீடுகளில் கூட சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவிட்டது. ஆனால் பயணம் மேற்கொண்டால் அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகம். அதிலும் குறிப்பாக மலையேற்றம், காடுகளில் சுற்றுலா மற்றும் காடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைப்பதை சாத்தியமாக்கியுள்ளது சர்வைவர் பில்டர் புரோ. உலகிலேயே அங்கீகரிக்கப்பட்ட மிகச் சிறந்த குடிநீர் சுத்திகரிப்பானாக அமெரிக்க அரசின் சான்று பெற்ற சுத்திகரிப்பானும் இதுவே. தண்ணீரில் கலந்துள்ள வைரஸ், ஒட்டுண்ணி, பாக்டீரியா ஆகியவற்றை அழித்துவிடுவதோடு அதில் தண்ணீரில் கலந்துள்ள உலோகங்களையும் நீக்கிவிடும். இதன் மேல்பகுதி ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் ஆனது. இதனுள் மருத்துவதுறையில் பயன்படுத்தும் மெல்லிய பில்டர் உள்ளது. இத்தகைய பில்டர்களை விண்வெளி வீரர்கள் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல உணவுப் பொருள்களை வடிகட்ட உதவும் கார்பன் மற்றும் உறுதியான கைப்பிடி ஆகியன இதில் உள்ளன. இது ஊசி மருந்துசெலுத்தும் சிரின்ஜ் முறையில் செயல்படுகிறது. இதை சுத்தப்படுத்துவதும் எளிது. இதன் பில்டர் மூலம் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும். இதன் கோபைகளை தனித்தனியாக கழற்றி வைத்துவிடலாம். இதை எடுத்துச் செல்ல வசதியாக பையும் உள்ளது. இதன் எடை 360 கிராம் மட்டுமே. 6.5 அங்குலம் நீளம் உடைய இந்த சுத்திகரிப்பான் ஒரு நிமிடத்தில் 500 மி.லி. தண்ணீரை சுத்திகரிக்கும். இதில் உள்ள 2ஏஏ பேட்டரியில் கிடைக்கும் மின்சாரம் மூலம் நீரில் கரைந்துள்ள உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதை யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்ய முடியும். சுத்தமான தண்ணீருக்கு கவலைப்படத் தேவையில்லை. நீர் வீழ்ச்சி அல்லது நீரோடை தண்ணீரையும் இதனுள் செலுத்தி மிகவும் தைரியமாக பருகலாம். இதன் விலை சுமார் ரூ.4,420.

Comments