விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கையில் இருந்து விலக்கு அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர உயர் நீதிமன்றம் ஆலோசனை

பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத் துடன் உறவு கொண்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந் தது. அப்போது, ‘கடத்தப்பட்டதாக கூறப்படும் மைனர் பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் கீழமை நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாமல், எனக்கு தண்டனை விதித்துள்ளது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த இளைஞர் மீதான குற்றச் சாட்டுகளை போலீஸார் சரிவர நிரூபிக்கவில்லை என்று கூறி, அவரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். தனது உத்தரவில் நீதிபதி மேலும் கூறியதாவது: 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவு கொண்டால், அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, அந்த சட்டத்தில் தமிழக அரசு உரிய திருத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் போக்ஸோ சட்டம் தொடர்பாக போதுமான விழிப்பு ணர்வு முயற்சிகள் எடுத்தபோதும் குற்றங்கள் குறையவில்லை. இந்த குற்றங்களை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர் இளம் பருவம் தொடர்பான திரைப்படங்களை திரையிடும் போது, போக்ஸோ சட்டம் குறித்த எச்சரிக்கையையும் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய் துகொண்டால்கூட, போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படுகிறது. இதனால், சம்பந் தப்பட்ட ஆணுக்கு 7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதை தடுக்க, போக்ஸோ சட்டத் தில் சிறுமிகளுக்கான வயது வரம்பை 16 வயதாக குறைக்கலாம். சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்களை ஆராய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட் டுள்ளார்.

Comments