ஜியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு - ஸ்மார்ட் ரைஸ் குக்கர்

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டி.வி. உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் தற்போது ஸ்மார்ட் ரைஸ் குக்கரை தயாரித்துள்ளது. ஜியோமி மிஜா ஸ்மார்ட் ரைஸ் குக்கர் என்ற பெயரில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகமான இந்த ரைஸ் குக்கரை விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரைஸ் குக்கரில் பர்கர், பீட்சா, பாஸ்டாஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் உடலுக்கு கேடு விளைவிக்காத வகையில் வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். அதாவது சமைக்கும் உணவுகளை சுவையுள்ளதாகவும், சத்து நிறைந்ததாகவும் கலோரி கண்ணோட்டத்தில் சமைக்க இது உதவும். ரைஸ் குக்கர் விலை ரூ.6,100 ஆகவும், இன்டக்‌ஷன் பிளேட் விலை ரூ.2,000 ஆகவும் இருக்கும் என தெரிகிறது. இது தவிர ரூ.1,000 விலையில் இதன் உதிரி பாகங்களும் விற்கப்படும். ரைஸ் குக்கரில் ஓலெட் டிஸ்பிளே உள்ளது. இதன் வெப்ப நிலையையும் மற்றும் அழுத்தத்தையும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். குக்கர் அறிமுகத்துக்கு முன்பாகவே இதுபற்றிய விளம்பரங்களை தீவிரப்படுத்தியுள்ளது ஜியோமி.

Comments