9 இந்திய மொழிகளில் இணையதள முகவரி

குளோபல் இன்டர்நெட் சர் வரில் 9 இந்திய மொழிகளில் இணையதள முகவரிகளைப் பதிவு செய்வதற்கான வசதி ஜூன் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று சர்வதேச அள வில் மொழிகளை ஏற்கும் குழு (யுஏஎஸ்ஜி) அறிவித்துள்ளது. தற்போது இணையதள முகவரிகள் ஆங்கிலம் அல் லாத பிற மொழிகளிலும் குறிப் பாக மான்ட்ரின், அராபிக், ரஷிய மற்றும் தேவநாகரி உள் ளிட்ட மொழிகளில் அனுமதிக் கப்பட்டுள்ளன. இருப்பினும் இணைய தள முகவரிகளை நிர்வகிக் கும் இறுதி நிலை டொமைன், எழுத்தின் சில வடிவமைப்பு களை மட்டுமே ஏற்கும் வகை யில் உள்ளது. தற்போது தேவ நாகரி எழுத்து வடிவங்களை இணையதள முகவரியாக இடம்பெறச் செய்ய முடியும். ஆனால், இது டாட் பாரத் என்ற எழுத்து வடிவத்தின் விரிவாக் கமாக மட்டுமே இடம்பெற்றுள் ளது. தற்போது, 9 இந்திய எழுத்து வடிவங்கள் அதன் பிரதான சர்வரில் (ஐசிஏஎன்என் இன் டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் அசைன்டு நியூஸ் அண்ட் நெம் பர்ஸ்) பதிவு செய்யப்படு வதற்கான வசதிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அவை பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை ஆகும். எல்ஜிஆர் எனப்படும் 9 மொழிக்கான எழுத்து வடிவங் களை சேர்க்கும் பணி 3 மாதங் களில் நிறைவடையும் என்று தெரிகிறது. இதையடுத்து ஐசிஏ என்என்-ல் ஜூன் மாதத்தில் இது இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு எல்ஜிஆரில் இந்திய எழுத்துகளின் பிரதான வடி வமைப்புகள் பயன்பாட்டுக்கு ஏற்றபடி சேர்க்கப்பட்டு, அது ஐசிஏஎன்என்-ல் அங்கீகரிக்கப் பட்டு இடம்பெறவும் வழிவகை செய்யப்படும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments