வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவது அதிகரிப்பு இந்தியாவுக்கு வந்த தொகை 7,900 கோடி டாலர் உலக வங்கி அறிக்கையில் தகவல்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கு பணி புரிந்து பணம் அனுப்புகின்றனர். அவ் விதம் அதிக அளவில் பணம் அனுப்பப்படும் நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகை 7,900 கோடி டாலராகும். இத்தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 6,700 கோடி டாலர் பெற்ற சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் (3,400 கோடி டாலர்), எகிப்து (2,900 கோடி டாலர்) தொகைகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள இடம்பெயர்வோர் மற்றும் மேம்பாடு குறித்த அறிக்கையில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2016-ம் ஆண்டில் 6,270 கோடி டாலரும், 2017-ம் ஆண்டில் 6,530 கோடி டாலரும் இந்தியாவுக்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணமானது 14 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு உதவியாக உறவினர்கள் கடந்த ஆண்டில் அதிக அளவில் நிதியை அனுப்பியுள்ளனர் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் பணம் அனுப்புவது கணிசமாக (7%) வளர்ச்சி யடைந்துள்ளது. சவூதி அரேபியாவிலிருந்து அந்நாட்டுக்கு வருவது குறைந்துள்ளது. வங்கதேசத்துக்கு வரும் தொகையின் அளவு 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்படும் தொகையானது அதிகரித்து 52,900 கோடி டாலராக உள்ளது. இது 9.6 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு (2017) இது 48,300 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக வருமானம் உள்ள நாடுகள் பெறும் தொகையும் அதிகரித்துள்ளது. இந்த நாடுகள் பெற்ற மொத்த தொகை 68,900 கோடி டாலராகும். 2017-ம் ஆண்டில் இது 63,300 கோடி டாலராக இருந்தது. தெற்காசியாவைப் பொருத்தமட்டில் 12 சதவீத வளர்ச்சி காணப்பட்டதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. பண பரிவர்த்தனை கட்டணத்தை 2030-ம் ஆண்டுக்குள் 3 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் ஸ்திரமான வளர்ச் சியை எட்ட முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் ரெமிட்டென்ஸ் கட்டணம் 10.7 சதவீத அளவுக்கு உள்ளது. பண பரிவர்த்தன கட்டணத்தைக் குறைப் பதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவோர் பயணடைவர். பரிவர்த்தனை கட்டணம் குறைப்பதன் மூலம் முறையற்ற வழிகளில் பணம் பரிமாறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments