அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க  3,000 செயற்கைக்கோள்களை அனுப்ப அமேசான் திட்டம்

அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதற்காக 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட் டுள்ளது. பிராட்பேண்ட் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதி களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க அமேசான் இந் தத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. ‘புராஜக்ட் குய்பர்’ என்று பெயரிடப் பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 3,236 செயற்கைக்கோள்கள் அனுப்பப் பட உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட் டப் பாதையில் குழுவாக நிலை நிறுத்தப்பட உள்ளன. பூமியி லிருந்து 367 மைல்கள் (590 கிமீ) முதல் 391 மைல்கள் (630 கிமீ)வரையிலான மண்டல வெளியில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளன. இதன் மூலம், குறைவான நேரத் தில் அதிவேக இணையதளத்தை வழங்க முடியும். இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதி களில் இணைய சேவை வழங்கப் படும் என அமேசான் தெரிவித்துள் ளது. அமெரிக்க சந்தை ஒழுங்கு முறை அமைப்பிடம் அமேசான் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கு ஒரு பில்லியன் டாலர் ஆகலாம் எனக் கூறியுள்ளது. மேலும் இந்தத் திட்டம் ஒரு நீண்ட கால நோக்குள்ள திட்டம் என்றும், இதுவரை சரிவர இணையவசதி கிடைக்காத பல கோடிக் கணக்கான மக்களுக்கு இணைய வசதியைச் சாத்தியப்படுத்தும் திட்டம் என்றும் அமேசான் கூறியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஆர்வமுள்ள பிற நிறு வனங்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ள அமேசான் தயாராகிறது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்குச் சொந்தமாக புளூ ஆரிஜின் என்ற ராக்கெட் நிறுவனம் ஒன்று உள்ளது. ஆனால், இந்நிறு வனத்துக்கும் இந்த குய்பர் புராஜக் டுக்கும் தொடர்பு இருப்பதாக இது வரையிலும் தகவல் இல்லை. இந் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத் தில் தனது 10-வது விமான சோதனையை நிகழ்த்தியுள்ளது. பல விமானங்கள் தயார் நிலை யில் இருந்தாலும், இதன் முதல் விமான சேவை வாடிக்கையாளர் களுக்கு இந்த ஆண்டு இறுதிக் குள் வழங்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. இணைய சேவை வழங்க செயற்கைக்கோள்களை அனுப் பும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஒன்வெப், சாஃப்ட் பேங்க், ஏர்பஸ், குவால்கம் உள் ளிட்ட நிறுவனங்களும் முயற் சித்து வருகின்றன.

Comments