தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் உறுப்பினர்களை நியமித்தது. இதில் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர்கள் இருவரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு மேல்முறையீடு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அவர்கள் இருவரின்
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai