மாமரம் தோன்றிய நாடு

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தெற்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடு. இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா என மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.

2. மிகப் பழமையான நாகரிகத்தைக்கொண்ட நாடு.

3. பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடு. இங்கே சுமார் 120 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

4. 29 மாநிலங்களும் 6 ஒன்றியங்களும் தலைநகரமும் இருக்கின்றன.

5. 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இந்த நாட்டிலிருந்து இரண்டு நாடுகள் பிரிந்து சென்றன.

6. சந்திரயான் விண்கலத்தைச் சந்திரனுக்கும் மங்கல்யான் விண்கலத்தைச் செவ்வாய்க் கோளுக்கும் அனுப்பிய நாடு.

7. தேசிய விளையாட்டு ஹாக்கி. பிரபலமான விளையாட்டு கிரிக்கெட்.

8. இந்த நாட்டின் உயர்ந்த மலைச் சிகரம் கஞ்சன்ஜங்கா.

9. மாமரம் இந்த நாட்டில் தோன்றியது என்பதால் ‘மாஞ்சிஃபெரோ இண்டிகா’ என்று அறிவியல் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தேசியப் பழம் மாம்பழம்.

10. இந்த நாட்டின் கொடியில் அசோகச் சக்கரம் இருக்கிறது.

விடை: இந்தியா

Comments