பான் கார்டு-ஆதார் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 வரை கெடு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் அடையாள அட்டை கார்டை இணைக்க வேண்டும். இதற்கான இறுதி கெடு இம்மாதம் 31-ம் தேதி என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்விதம் இணைக்காதவர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. மேலும் பான் எண்ணையும் ரத்து செய்ய முடியாது. நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு பல் வேறு கட்டங்களில் கால அவ காசம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை இறுதியாக இம்மாதம் 31 என கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் எண் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. ஆதாருக்கு அரசியலமைப்பு சட் டத்தின் கீழான அங்கீகாரம் குறித்த நீதிமன்ற உத்தரவை அடுத்து வரித்துறையினர் இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளனர். இதன் படி வருமான வரி சட்டம் 139 ஏஏ (2)-ன் கீழ் நிரந்தர கணக்கு எண் ணுடன் ஆதாரை இணைக்க வேண் டியது கட்டாயம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் வருமான வரி தாக்கலுக்கு ஆதாரை இணைக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தது. பான்-ஆதார் இணைப்பை இணையதளம் மூலம் எளிதாக மேற்கொள்ள முடியும். என்எஸ் டிஎல் மற்றும் யுடிஐஐடிஎஸ்எல் ஆகி யவை பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்களை அளித்துள்ளன. வருமான வரித்துறை இணைய தளத்துக்கு சென்று உங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை அளித்தால் இணைப்புக்கான இணையதளத்தை அளிக்கும். ஆதார் கார்டில் உள்ள பெயருக் கும் பான்கார்டில் உள்ள பெயருக் கும் வித்தியாசம் இருந்தால் இணைப்பு கிடைக்காது. இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இயலாது என வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அவ்விதம் இணைப்பு மேற்கொள்ள இயலா தவர்கள் என்எஸ்டிஎல் மற்றும் யுடிஐஐடிஎஸ்எல் மையத்துக்கு சென்று ஆதார் அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். சிறிதளவு மாற்றம் இருப்பின் வருமான வரித்துறையினர் ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) மொபைல் போனுக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவரை உறுதி செய்வர் என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments