எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் வருகிற 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து, அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. அந்தவகையில் தற்போது இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் வருகிற 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் இந்த ராக்கெட் முதன் முறையாக வெவ்வேறு புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டில் மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான ‘எமிசாட்’ உடன் 28 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் ஏவப்படுகிறது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 1-ந்தேதி ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. ரகத்த