ரூ.1,340 கோடியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலமாக 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை 37 லட்சத்து 88 ஆயிரத்து 528 மாணவ-மாணவியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 552 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
2018-19-ம் ஆண்டு முதல், பிளஸ்-2 வகுப்பில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகளை ஓராண்டுக்கு முன்னதாக பிளஸ்-1 வகுப்பிலேயே வழங்கிட ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.
எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
அதன் அடிப்படையில், 2018-19-ம் ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு படிக்கின்ற 5.12 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு படிக்கின்ற மாணவ- மாணவிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளும் பயன் அடைய உள்ளனர்.
அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத்திறனாளி பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் என ஆக மொத்தம் 15.18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,340 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
அதேபோல், தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி மாதம் 23, 24-ந்தேதிகளில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019’ வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், ரூ.3 லட்சத்து 431 கோடி அளவிலான முதலீட்டினை ஈர்க்கும் வகையிலும், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
உலகெங்கிலும் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு அரசு பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதற்கு சான்றாக அமைந்துள்ளது.
அடிக்கல் நாட்டினார்
அந்த வகையில் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த திட்டங்களில் ரூ.14 ஆயிரத்து 71 கோடி முதலீட்டில் 12 ஆயிரத்து 294 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 12 திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச
Comments