ரூ.1,340 கோடியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலமாக 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை 37 லட்சத்து 88 ஆயிரத்து 528 மாணவ-மாணவியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 552 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டு முதல், பிளஸ்-2 வகுப்பில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகளை ஓராண்டுக்கு முன்னதாக பிளஸ்-1 வகுப்பிலேயே வழங்கிட ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. எடப்பாடி பழனிசாமி வழங்கினார் அதன் அடிப்படையில், 2018-19-ம் ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு படிக்கின்ற 5.12 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு படிக்கின்ற மாணவ- மாணவிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளும் பயன் அடைய உள்ளனர். அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai