You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: January 2019

Wednesday, January 30, 2019

கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா..?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன.. தான் சொன்னது நடக்க வேண்டும் என்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கும் எனத் தெரிகிறது. மோசமான சூழலில் சிக்கியிருக்கும் வெள்ளை மாளிகையில் நுழைய ஜனநாயகக் கட்சி சார்பில் பல பெண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்களே தயங்கி நிற்கும் வேளையில், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் களத்தில் குதித்திருக்கிறார். 54 வயதாகும் கமலா ஹாரிஸ், ஜமைக்கா நாட்டு தந்தைக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த தாய்க்கும் (சியாமளா கோபாலன்) பிறந்தவர். அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த அடுத்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் திரட்டியுள்ளார். அமெரிக்க அரசியலிலும் பத்திரிகை வட்டாரத்திலும் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா மட்டுமல்ல மேலும் பல பெண் வேட்பாளர்களும் போட்டியில் குதித்துள்ளனர். செனட்டர் எலிஸபெத் வாரன், கிறிட்டின் கில்லிபிராண்ட், ஆமி க்ளோபுச்சார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர, இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே, ஹிலாரி கிளிண்டன், துளசி கப்பார்ட் மற்றும் மிச்சேல் ஒபாமாவும் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் இந்த பெண்கள் தவிர, ஏற்கனவே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் ஆகியோரும் தயாராக உள்ளனர். இத்தனை பேர் களத்தில் இறங்கினால், அதனால் ஏற்படும் போட்டியால், இவர்களே வெற்றிக் கனியை வெள்ளித் தட்டில் வைத்து ட்ரம்பிடம் கொடுத்து விடுவார்கள் போலத் தெரிகிறது. கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கியதுமே, அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள், எதிர் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். கமலாவின் பெற்றோர் இருவருமே, கமலா பிறந்து 5 ஆண்டுகள் வரை சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்க அரசியல் சட்டப்படி, அமெரிக்காவில் பிறந்த யார் வேண்டுமானாலும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பராக் ஒபாமா, 2011-ம் ஆண்டில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் கென்யாகாரர் என எதிர் பிரச்சாரம் செய்தவர் அதிபர் ட்ரம்ப். ஒபாமா ஹவாயில் பிறக்கவில்லை என்றும் அவரது பிறப்பு சான்றிதழை தானே பார்த்துள்ளதாகவும் கூறினார். அதோடு, அவரது ஆதரவாளர்கள் ஒபாமா ஒரு முஸ்லிம் என்றும் பிரச்சாரம் செய்தார்கள். கமலாவின் வெளிநாட்டு பெற்றோர் தொடர்பாக அரசியல் எதிரிகள் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபடத்தான் செய்வார்கள். மிகவும் திறமையான செனட்டர் எனப் பெயரெடுத்த கமலா ஹாரிஸ், குற்றங் களைக் குறைத்து கலிபோர்னியாவின் கண்டிப்பான அட்டர்னி ஜெனரலாகவும் நல்ல பெயர் சம்பாதித்துள்ளார். அவர் ட்ரம்புக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பார் என்பதால், இப்போது இருந்தே பொய் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. ஒபாமா அதிபராக இருந்த காலத்திலேயே, அரசு கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் என்பதால், பெண் ஒபாமா என அழைக்கப் பட்டவர் கமலா ஹாரிஸ். வாக்கு வங்கியை சிதற விடாமல், காலநேரத்தை வீணடிக்காமல் ஜனநாயகக் கட்சியினர் இப்போதிருந்தே ஒரு வேட்பாளரை முடிவு செய்து அவர் பின்னால் அனைவரும் அணிவகுக்க வேண்டும். தனக்கு பெண்கள், சிறுபான்மையினர் ஆதரவு மட்டுமல்லாது, ட்ரம்ப் அதிருப்தியாளர்களின் ஆதரவும் இருப்பதை கமலா ஏற்கனவே நிரூபித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இரண்டு கட்சிகளிலுமே இருக்கிறார்கள். அமெரிக்க அரசியலில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அதேபோல், இரு கட்சிகளுக்குமே தேர்தல் நிதி அளித்து ஆதரித்து வந்துள்ளனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை நிறுத்தினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.. இரண்டு விஷயங்களை அக் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், கடைசிவரை வெற்றி முனைப்பு இல்லாமல்தான் இருந்தார். அந்த நிலைமை இப்போது இருக்கக்கூடாது. கட்சிக்குள் நடக்கும் கசப்பான போட்டியை தாமதம் இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த இரண்டையும் செய்யாவிட்டால், மீண்டும் ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபராக வருவார். அதைத் தடுக்க முடியாது.

தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்

தலைமைச் செயலக சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித் துள்ள நிலையில், தலைமைச் செயலக அலுவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1,300 ஆசிரி யர்கள் உட்பட 1,450-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டதையே காரணம் காட்டி பல ஊழியர்கள் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டு வரு கின்றனர். 28-ம் தேதி காலை வரை 442 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1,450 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத் தம் செய்வதாக அறிவித்தன. நாளைக்குள் அரசு முடிவு எடுக் காவிட்டால், தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்போ வதாகவும் அறிவித்தன. காரணமானவர்கள் இந்நிலையில், தலைமைச் செயலக சங்கத்தில், போராட்டத் துக்கு காரணமானவர்கள் என நிதித் துறையில் 4 பேர், சட்டப் பேரவை செயலகம், பள்ளிக்கல்வி, பொதுப்பணி, வேளாண் துறை களில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 8 பேரையும் சஸ்பெண்ட் செய்து சம்பந்தப்பட்ட துறைகளின் செய லர்கள் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கிடையில், ஆசிரியர்கள் நேற்று இரவுக்குள் பணிக்கு திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அவகாசம் அளித்திருந்தது. அதன்பிறகு பணிக்கு வராத வர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய தலைமையாசிரியை வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்

பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பெண் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். பள்ளிக் கல்வித் துறை யின் பல்வேறு நடவடிக்கைக ளால் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் பணிக்கு வந்த ஆசிரியர்களை பெண் தலைமை யாசிரியர் ஒருவர் மிரட்டும் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘‘எதற்காக வேலைக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் நேரடியாக போராட்டத்துக்கு வராவிட்டாலும் வீட்டிலேயே இருக்கலாம் அல்லவா? இன்று அதிக சம்பளம் கிடைக் கும் என நினைக்கலாம். ஆனால், நாளையே உங்களுக்கான எல்லா பலன்களும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. கல்வித் துறையில் மாற்றம் என்ற பெயரில் தேவை யில்லாத பல்வேறு நடவடிக்கை கள் அரங்கேறுகின்றன. நீங்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் மட்டுமே பிடிக்கப்படும். நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால், யார் உங்களுக்கு உதவ வருவார்கள்’’ என்ற தொனியில் அந்தப் பெண் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்தவர்களை மிரட்டும் காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த வீடியோவில் வரும் ஆசிரி யரைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியு றுத்தி சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப் பட்டது. விசாரணையில் அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ரமணமுதலி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிநேகலதா என்பது தெரி யவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்களை பணிக்கு வரவிடா மல் தடுக்கும் நோக்கத்தில் செயல் பட்டதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அய்யண்ணன் உத்தரவிட் டுள்ளார். இதற்கு வலைதளங்களில் வரவேற்புகள் கிடைத்தாலும், ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது டிடிவி தினகரன் திட்டவட்டம் 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கரூர் மாவட் டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் முதல்வர் குறித்து விமர்சித்ததாக டிடிவி தினகரன் மீது கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சாந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுடன் நீதிமன் றத்தில் ஆஜராகி வழக்கு நகல் களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். அதையடுத்து வழக்கு விசாரணையை பிப்.4-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது: ஜாக்டோ ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற 95 சதவீத ஆசிரி யர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர் என கூறுவது உண்மைக்கு மாறான தகவல். இந்த அரசு எல்லா விஷயத்திலும் பொய் சொல்கிறது. ஊடகங்கள் நடுநிலை தவறாமல் செய்திகளை வெளியிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது. ஒரு தொகுதியிலும் டெபாசிட்டும் கிடைக்காது. எங் களைப் பொறுத்தவரை 6 மாதத் துக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட் டோம். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகி றோம். தேசியக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்காக இங்குள்ள ஆட்சியாளர்கள் என்ன நட வடிக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. மத்திய அரசு எல்லா விஷயத்திலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படு கிறது என்றார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

போராட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் மட்டும் உடனடியாக பணிக்கு திரும்ப முடியுமா என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக நேற்று (ஜன.28) மதியத்துக்குள் பதிலளிக்க வேண் டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.கிருபா கரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ - ஜியோ சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘நியாயமான கோரிக் கைகளை வலியுறுத்திதான் தற் போது ஜாக்டோ- ஜியோ போராடி வருகிறது. இது பல ஆண்டுகால கோரிக்கை. பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்காக செலுத்த வேண்டிய ரூ. 25 ஆயிரம் கோடியை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு செலுத்தவில்லை. 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்க வேண் டிய ஊதிய நிலுவைத் தொகையை யும் வழங்கவில்லை. எங்களது கோரிக்கையை அரசு தொடர்ந்து பரிசீலிக்கவில்லை என்பதால்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஆசிரி யர்களுக்கும் மாணவர்களின் நல னில் அக்கறை உள்ளது. இது தொடர்பாக முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் உட னடியாக போராட்டத்தைக் கைவிடத் தயார். ஆனால் தற்போது ஆசிரியர்களை இடைநீக்கம் செய் தும் பணிக்கு வரும் ஆசிரியர் களுக்கு விருப்பத்துக்கேற்ப இட மாற்றமும் வழங்கி போராட்டத்தை நீர்த்துப்போக முயற்சிக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போது தவறான புள்ளி விவரங் களை தெரிவித்து குழப்பி வரு கிறது’’ என்றனர். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பிடித்தம் போக இரண்டாம் நிலை ஆசிரியர்கள் பணிக்கு சேரும்போது ரூ.18,000-மும் ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.56,000-மும் பெறுகின்றனர். அதுவே உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்நேரத் தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம் பளம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர்களில் எனில் ரூ. 1 லட் சத்து 80 ஆயிரம் சம்பளம் பெறுகின் றனர். தற்போதைய நிலவரப்படி 85 முதல் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். எஞ்சியவர்களும் உடனடியாக பணிக்கு திரும்பிவிடுவர். இதுவரை 3 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதிலிருந்து வேலை கிடைக்காத ஆசிரியர் களின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஏற் கெனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர் பான வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலு வையில் உள்ளதால், தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்து வது என்பது இயலாத காரியம்’ என விளக்கம் தெரிவித்தார். சுமுகமான தீர்வு அதையடுத்து நீதிபதி என்.கிரு பாகரன், ‘‘மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர் என்பதே மகிழ்ச்சி யான விஷயம். இந்த பிரச்சி னைக்கு ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் குறிக்கோள். இருதரப்பும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேநேரம் ஆசிரியர்கள் போராடத் தொடங்கி யதும் மற்ற அரசு ஊழியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என்பது அரசை மிரட்டி பணிய வைப்பது போல் உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்தான் முக்கி யம். அதனால் தான் இந்த விஷ யத்தில் நீதிமன்றமும் தலையிடு கிறது’ என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Tuesday, January 29, 2019

கல்விக்காக அரசு டி.வி.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதத்தில் “கல்வி தொலைக்காட்சி” சானல் தொடங்கப்படுகிறது. 24 மணி நேர ஒளிபரப்பு சானலாக இது ஒளிபரப்பாக உள்ளது. சென்னை ஆர்.ஏ.புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் வேகமாக நடக்கிறது. உடற்பயிற்சி, நாட்டு நடப்பு, கல்வி மற்றும் போட்டித் தேர்வு சாா்ந்த அனைத்து தகவல்களும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட உள்ளது. சாதனைப் பள்ளிகள் பற்றியும், கல்விக்காக சிறந்த சேவையளிப்பவர்கள் பற்றியும் நிகழ்வுகள் இடம் பெறும். முக்கிய நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கும் நாள் விரைவில் வெளி யாகும்.

Saturday, January 26, 2019

மைக்ரோசாட், கலாம்சாட் செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி44

இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு உதவும் மைக்ரோசாட் - ஆர், மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் ஆகிய 2 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய எல்லைப் பகுதி கண்காணிப்பு உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான ‘மைக்ரோசாட் - ஆர்’ என்ற நவீன இமேஜிங் செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கியது. இதனுடன், தமிழக மாணவர்கள் தயாரித்த நானோ வகை ‘கலாம்சாட்’ செயற்கைக் கோளையும் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. இந்த 2 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் கடந்த ஒருவாரமாக மும்முரமாக நடந்து வந்தன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்ட்-டவுன் கடந்த 23-ம் தேதி இரவு 7.37 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், திட்டமிட்டபடி சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் 2 செயற்கைக் கோள்களும் 24-ம் தேதி இரவு 11.37 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. புறப்பட்ட 13 நிமிடம் 26 விநாடிகளில் 274 கி.மீ. தூரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் மைக்ரோசாட் - ஆர் செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ் 4 இன்ஜின் 1 மணி நேரம் 40 நிமிடம் பயணித்து 453 கி.மீ. தூரத்தில் புவி வட்டப்பாதையில் கலாம்சாட் செயற்கைக் கோளை நிலைநிறுத்தியது. இதுவரை ஏவப்பட்டதில் மிகக் குறைந்த தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள் இதுவாகும். புவி ஆய்வுக்கான மைக்ரோசாட் - ஆர் செயற்கைக் கோள் 700 கிலோ எடை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நேரடி கட்டுப்பாட்டில், இந்திய எல்லைப் பகுதிகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணி. இதில் 3டி கேமராக்கள், லேசர் கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. தகவல் தொடர்பு செயற்கைக் கோளான கலாம்சாட், 1.2 கிலோ எடை உடையது. 2 மாதங்களே ஆயுட்காலம் கொண்ட இது ஹாம்ரேடியோ சேவைக்கு பயன்படும். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பின் உதவியுடன் மாணவர் ரிபாத் தலைமையிலான குழுவினர் இந்த செயற்கைக் கோளை தயாரித்துள்ளனர். இஸ்ரோவின் குடியரசு தின பரிசு புதிய ஆண்டின் முதல் திட்டமே வெற்றிகரமாக அமைந்திருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது: இந்த ஆண்டின் முதல் திட்டமே வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை இந்திய மக்க ளுக்கு குடியரசு தினப் பரிசாக இஸ்ரோ சமர்ப்பிக்கிறது. உலகில் முதல்முறையாக ராக்கெட்டின் இறுதிக்கட்ட நிலையான பிஎஸ் 4 இன்ஜின் மூலம் குறைந்த சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டுவர மாணவர்கள் பணி யாற்ற வேண்டும். ‘சந்திரயான் 2’ ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும். 2020-ம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 2 ராக்கெட்கள் சோதனை முறையில் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டுவர மாணவர்கள் பணி யாற்ற வேண்டும். ‘சந்திரயான் 2’ ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும்.

Friday, January 25, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு சலுகை: மத்திய அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு, 1-ந்தேதி முதல் அமல்

மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு 1-ந்தேதி முதல் வழங்கப்படும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அரசியல் சாசனத்தின் 124-வது திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்ட அந்தஸ்தை பெற்றுவிட்டது. இதையடுத்து மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்த முறையான உத்தரவை மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையை பெறாதவர்கள், அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கிறபோது அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையைப் பெற அடையாளம் காணப்படுவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசு பணிகள் மற்றும் சேவைகளில் பிப்ரவரி 1-ந்தேதி அல்லது அதற்கு பின்வரும் அனைத்து நேரடி ஆள் சேர்ப்பிலும் வழங்கப்படும். மேலும் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் சதுர அடியோ, அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீடு, 300 சதுர அடியோ அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீட்டு மனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடியோ அதற்கு மேலோ வீட்டுமனை உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 24, 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

மாணவர்களின் நலனைக் கருத் தில்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடி யாக பணிக்கு திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். “தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ நடத்திவரும் போராட்டத்தில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ள தால் 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு: மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி: ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஒட்டு மொத்த ஆசிரியர்களும் பங்கேற் றுள்ளதால் வகுப்புகள் நடை பெறவில்லை. செய்முறைத் தேர்வு கள் வரும் பிப்ரவரி மாதத்திலும், பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தி லும் தொடங்கவுள்ளது. மாணவர் களின் நலனைக் கருத்தில் கொள்ளா மல் தேர்வு நேரத்தில் ஆசிரியர் கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள்: இந்தப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. தலைமை வழக்கறிஞர்: ஜாக்டோ ஜியோ போராட்டத் தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக் கைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த போராட்டத் தால் மாணவர்களின் நலன் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தீர்க்கமாக உள்ளது. தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது. ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத்: அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் ஒரேநாள் இரவில் போராட்டத்தில் குதிக்கவில்லை. இந்த அரசிடம் எதையும் போராடித் தான் பெற வேண்டியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு அளித்துள்ள உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. தற்போது எங்களை மட்டுமின்றி நீதிமன்றத் தையும் இந்த அரசு ஏமாற்றுகிறது. பங்களிப்பு ஓய்வூதிய முறையை நீக்க வேண்டும் என்பது உள் ளிட்ட எங்களின் எந்த கோரிக்கை களையும் அரசு பரிசீலிக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘‘மாணவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட் டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அல்லது ஜன.25-க்குள் (நாளை) பணிக்கு திரும்ப வேண்டும். அதேநேரம் அரசும் அவர்களை போரட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளக்கூடாது’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன.28-க்கு தள்ளிவைத்தனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Wednesday, January 23, 2019

‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் பொருள், ‘புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்பதாகும். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், அவரது மனைவி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), மனோகர் லால் (அரியானா), திரிவேந்திர சிங் ரவத் (உத்தரகாண்ட்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். திரளான வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப்பேசியபோது கூறியதாவது:- இப்போது நாங்கள் ‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும். இது அனைவருக்கும் மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையை உறுதிப்படுத்தும். விசா, பியோ (இந்திய வம்சாவளி அடையாள அட்டை), ஓ.சி.ஐ. (வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை அட்டை) ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களின் சமூக பாதுகாப்பு முறையுடன் இணைப்போம். இதன்மூலம், ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும். பாஸ்போர்ட் முறையுடன் விசா வழங்கும் நடைமுறையையும் எளிமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மின்னணு விசா, நிறைய உதவி உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும், அங்கு வாழ்கிற குடும்பங்கள் இந்தியா வந்து செல்வதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இது இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு உதவும். முன்பெல்லாம், இந்தியா மாறாது என்று மக்கள் கூறி வந்தனர். இந்த மனநிலையை மாற்றுவதற்கு கடந்த 4½ ஆண்டுகளில் எங்கள் அரசு உதவி இருக்கிறது. அரசின் மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதால் அரசின் 85 சதவீத நிதி கொள்ளையடிக்கப்பட்டதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இது மாறி வரும் இந்தியாவின் பிரதிபலிப்பு ஆகும். முன்பு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒழுங்காக வரி செலுத்தி வந்தனர். அதில் 85 சதவீதம் கொள்ளையடிப்பது தொடர்ந்தது. ஆனால் அது இப்போது 100 சதவீதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4½ ஆண்டுகளில் மக்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. ராணுவ தளவாட உற்பத்தி துறை, இந்திய முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். மாறிவரும் இந்த இந்தியாவில், ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றில் நீங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள், பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவிலும், டெல்லியில் குடியரசு தின விழாவிலும் கலந்து கொள்ள வசதியாக, முதல் முறையாக இந்த மாநாடு தொடர்ந்து 3 நாள் நடத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

Monday, January 21, 2019

பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

கலாம் சாட், மைக்ரோசாட் செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் ‘கலாம் சாட், மைக்ரோசாட் செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் வருகிற 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது திட மற்றும் திரவ நிலைகளுடன் 4 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 46-வது ராக்கெட்டாகும். அத்துடன் பி.எஸ்.எல்.வி.- டி.எல் என்ற நவீன ரகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது. இதன்மூலம் ’ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து சிறிய அளவில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த ‘மைக்ரோசாட்-ஆர்’ ஆகிய 2 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதில் மாணவர்கள் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த ‘மைக்ரோசாட்-ஆர் இமேஜிங்‘ செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி., சி-44 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்டில் செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இது பூமியின் குறைந்த தூரம் கொண்ட (274.12 கிலோ மீட்டர் தூரம்) சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இறுதிகட்ட ஆயத்தப்பணிகள் எனப்படும் ‘கவுண்ட் டவுன்’ நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க திட்டமிட்டு உள்ளனர். மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Sunday, January 20, 2019

வடலூர் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் .நாளை (21-ம் தேதி) தைப்பூச திருவிழா.

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச திருவிழா சத்திய ஞானசபையில் இன்று (20-ம் தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. ‘இறைவன் ஜோதி வடிவானவர்' என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடக்கும். குறிப்பாக தை மாத பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு 148-வது தைப்பூச திருவிழா இன்று (20-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி காலை அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தருமசாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நாளை (21-ம் தேதி) தைப்பூச திருவிழா நடக்கிறது. இதில் காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 10 மணி, நாளை மறுநாள் (22-ம் தேதி) காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். பின்னர் 23-ம் தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருவறை தரிசனம் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி வெளிநாடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவிற்கான ஏற்படுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி கருணாகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு 

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 24 சதவீதம் மழை குறைவாக பெய்தது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை உயர்வு குறித்த பருவ நிலை மாற்ற நிகழ்வு (எல்நினோ), எதிர்பார்த்தபடி நிகழாமல் தாமத மானதால் மழை குறைவாக பெய்த தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்து வரும் மாதங்களில் எல் நினோவின் தாக்கம் இருக்க வாய்ப் பிருப்பதாகவும் அந்த மையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் வங்கக் கடலில் புதிய காற்ற ழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகி யுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, அதற்கு மேலோ வலுப்பெறும்போதுதான் அது தமிழகம் நோக்கி வருமா என்பதை கணிக்க முடியும். இது வலுப்பெறலாம், வலுப்பெறாமலும் போகலாம். ஒருவேளை வலுப் பெற்றால்,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி வருவதால், தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பிரதேசங்களில் மிகக் குறைந்த வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 5 டிகிரி, நிலப் பகுதியான தருமபுரி மாவட்டத்தில் 15.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மூடுபனியும், நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் உறைபனியும் நிலவ வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்

கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அரசு பள்ளி ஆசிரியர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதமாக அமலி நகரில் வாடகை வீட்டில் மனைவி ஷோபனா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாயார் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. இதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். பதில் இல்லை. உடனே இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அந்தோணி ஆரோக்கியதாஸ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். வேறு அறையில் மற்ற 4 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் உடலில் காயங்கள் இல்லை. முதுகுவலி இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில் பின்வரும் தகவல்கள் வெளியாயின. தற்கொலை செய்துகொண்ட அந்தோணி ஆரோக்கியதாசுக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவில் விஷம் ஷோபனா, மகன் ரித்திக் மைக்கேல், மகள் ரியா ஏஞ்சலின் ஆகியோர் ஒரு படுக்கை அறையிலும், தாயார் புவனேஸ்வரி மற்றொரு படுக்கை அறையிலும் பிணமாக கிடந்தனர். அந்தோணி ஆரோக்கியதாஸ் மனைவி, குழந்தைகள் இருந்த படுக்கை அறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இதன்மூலம் குடும்பத்தினரை அந்தோணி ஆரோக்கியதாஸ் ஏற்கனவே கொன்று விட்டு அவர்களை தூக்கி வந்து படுக்கையில் போட்டு விட்டு அதன்பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றுதெரிகிறது. நேற்று மதியம் அனைவரும் சாப்பிடும் போது குடும்பத்தினருக்கு தெரியாமல் அந்தோணி ஆரோக்கியதாஸ் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்றும், அதை சாப்பிட்ட அவர்கள் இறந்த பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அந்தோணி ஆரோக்கியதாஸ் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு பல ஆண்டுகளாக முதுகுவலி இருந்துள்ளது என்றும், இதனால் மனம் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றனர் தமிழக அரசு உத்தரவு

தமிழக போலீஸ் துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பணியாற்றிய ஜாபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, எம்.கே.ஜா, என்.தமிழ்செல்வன், ஆஷிஸ் பெங்க்ரா ஆகிய 6 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு போலீஸ் அகடமியின் கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட், அதே பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. பதவியிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத், அதே பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. பதவியிலும், சென்னை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா, அதே துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. பதவியிலும் நியமிக்கப்படுகிறார்கள். டெல்லி அமைச்சரவை செயலகத்தின் கூடுதல் டி.ஜி.பி. எம்.கே.ஜா டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை போலீஸ் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி. என்.தமிழ்செல்வன் அதே பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. பதவியிலும், சென்னை போலீஸ் செயலாக்கம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆஷிஸ் பெங்க்ரா, அதே பிரிவில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள டி.ஜி.பி. பதவிலும் பொறுப்பு ஏற்க உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

Saturday, January 19, 2019

பிஎஸ்என்எல்-ன் புதிய ரீ-சார்ஜ் திட்டம் அறிமுகம்

ரூ.1,699-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகள் மேற் கொள்ளும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித் துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மொபைல் ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் படி, ரூ.1,699-க்கு ரீசார்ஜ் செய் தால் ஓர் ஆண்டுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படும். அத் துடன், அனைத்து நெட்வொர்க்கு களுக்கும் அளவில்லா அழைப்பு கள் மேற்கொள்ளலாம். அத்துடன், தினமும் 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். இலவச காலர் டியூன் வசதியும் வழங் கப்படும். இத்திட்டம் ஒரு வருட வேலிடிட்டி கொண்டது. மேலும், வார இறுதி விடுமுறை தின சலுகையாக, இன்றும் (19-ம் தேதி), நாளையும் (20-ம் தேதி) ரூ.180-க்கு ரீசார்ஜ் செய்தால் முழுத் தொகைக்கும் அழைப்பை மேற் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

Thursday, January 17, 2019

விண்டோஸ் பயன்படுத்துவாருக்கு எச்சரிக்கை.. வாடிக்கையாளர்களைக் கைவிடும் மைக்ரோசாப்ட்..!

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு இனி சேவை அளிக்க முடியாது என அறிவித்துள்ளது. ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான விண்டோஸ் 7 இயங்கு தளத்திற்குச் சப்போர்ட் சேவையை 14 ஜனவரி 2020ஆம் ஆண்டு முதல் அளிக்க முடியாது என அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7க்கான அடிப்படை சேவையை நிறுத்திவிட்ட மைக்ரோசாப்ட் 2020 முதல் சேவையை முழுமையாக நிறுத்த உள்ளது. இந்நிலையில் விண்டோஸ் 7 தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் மைக்ரோசாப்ட் அப்கிரேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் லைசென்ஸ் கொண்டுள்ளவர்கள் அனைவரும் எளிதாக விண்டோஸ் 10 தளத்திற்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம். மைக்ரோசாப்ட் தனது சேவையை நிறுத்திவிட்டால் விண்டோஸ் பயன்படுத்தும் எல்லோருக்கும் பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதனால் மக்கள் மட்டும் அல்லமல்ல பல லட்ச நிறுவனங்களும் தங்களது இயங்கு தளத்தைப் புதுப்பித்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் விண்டோஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் உலகில் 39.22 சதவீதம் பேர் விண்டோஸ் 7, 4.41 சதவீதம் பேர் விண்டோஸ் 8.1, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் இதர பழைய ஓஎஸ்களைப் பயன்படுத்துவோர் அளவு 4.45 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பிற அனைத்து இயங்கு தளத்தைப் பயன்பாட்டாளர்களை விடவும் அதிகரித்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் தமிழகத்தில் 4ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் தீவிரம் விரைவில் சோதனை நடத்தப்படும் என தலைமை பொதுமேலாளர் தகவல்

 பிஎஸ்என்எல் நிறுவனம், தமிழகத்தில் 4ஜி சேவையைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச் சில் மேற்கொண்டு வருகிறது. இதற் காக, விரைவில் சோதனைகள் நடத்தப் பட உள்ளதாக, அந்நிறுவனம் தெரி வித்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங் களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்க உள்ளது. இதற்கான சோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறு வனம் தமிழ்நாடு சர்க்கிள் தலைமை பொதுமேலாளர் ராஜூ ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற் போது 80 லட்சம் மொபைல் போன் வாடிக் கையாளர்களும், 9 லட்சம் தரைவழி தொலைபேசி (லேண்ட்லைன்) வாடிக் கையாளர்களும், 3.50 லட்சம் பிராட் பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர் களை கவர்வதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகை யில், தற்போது 4ஜி சேவையைத் தொடங்க உள்ளது. மத்திய அரசு 4ஜி சேவையைத் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இச்சேவையைத் தொடங்குவற்கான நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறு வனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சேவையைத் தொடங்குவதற்காக செல்போன் கோபுரங்களில் 4ஜி சேவையை அளிப்பதற்கான சிக்னல் களைப் பெறுவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5,500 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இதில், 800 கோபுரங்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 4ஜி சேவையைத் தொடங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் இது வரை வழங்கப்படவில்லை. எந்நேரமும் ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும் என்ற நிலை உள்ளதால், அதை வழங்கிய உடனே 4ஜி சேவையைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். இதற்காக, விரைவில் சோதனைகள் நடைபெற உள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து அங்குள்ள அனைவருக்கும் 4ஜி சிம் வழங்கப்பட்டு சோதனை நடத்தப்படும். அப்போது, சிக்னல் கோளாறு உள்ளிட்ட பிரச்சினை கள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 4ஜி சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் போது வாடிக்கையாளர் களுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற் படாத வகையில் தரமான சேவை வழங்கப்படும். சென்னையில் வெள்ளம் வந்த போதும், கஜா புயலின்போது தென்மாவட்டங் களிலும் எந்தவொரு தனியார் நிறுவனங் களின் செல்போன் சேவையும் கிடைக்காத நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் தடையில்லா சேவையை வழங்கியது. அதேபோல், செல்போன் களுக்கு வரும் அழைப்புகளுக்கும் (இன்கமிங் கால்) தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஒருவருட வேலிடிட்டி வழங்கி வருகிறது. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர் களுக்கு தரமான, லாபகரமான சேவையை வழங்க கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜூ கூறினார்.

Wednesday, January 16, 2019

மாணவர்களுடன் கலெக்டர் ரயில் பயணம்

திருவண்ணாமலை: தேசிய குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன் ரயிலில் பயணம் செய்தவாறு, கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் 21 முதல், 25ம் தேதி வரை, தேசிய குழந்தைகள் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று திருவண்ணாமலையில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்பதை வலியுறுத்தி, 200 பள்ளி மாணவ - மாணவியருடன் வேலுார் வரை, ரயிலில் பயணம் செய்து, கலெக்டர் கந்தசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேலுார் கோட்டைக்கு சென்ற மாணவர்கள், அங்கு வந்த மக்களிடம், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லீ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு வரிவிலக்கு அளிக்கவும் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானமுடையவர்கள் 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் வருமான வரி செலுத்தி வருகிறார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுவருகிறது.

தபால் துறையின் வங்கி சேவைக்கு செயலி அறிமுகம்:வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்

'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் புதிய வங்கி சேவை பயன்பாட்டிற்கென அலைபேசி செயலியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க இந்திய தபால் துறை சார்பில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் வங்கி சேவை புதிதாக துவங்கப்பட்டது. இவ்வங்கியில் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு கணக்கை துவங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை டிபாசிட் செய்யலாம். பண பரிமாற்றங்களுக்கு, தபால் துறை வங்கியில் பணம் எடுக்க எவ்வித கட்டணமும் கிடையாது. கடன் மற்றும் கிரெடிட் கார்டு கிடையாது. பொதுத்துறை வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற சேவைகள் வழங்கப்படும். பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் அந்த வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்யலாம். புதிதாக கணக்கு துவங்க ஆதார் கார்டு எண் மட்டும் போதும். ஐ.பி.பி.பி. வங்கி செயலி: தபால் துறை'ஐ.பி.பி.பி.,' எனும் அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியில் அஞ்சலக சேமிப்பு கணக்கின் வரவு செலவுகளை பார்க்கலாம். பிற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும். மின்சாரம், அலைபேசி, தொலைபேசி, இன்டர்நெட் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தலாம். மேலும் இதை பயன்படுத்தி ஆதார், பேன் எண்ணை இணைத்தல், வாரிசு, முகவரி மற்றும் இமெயில் மாற்றமும் செய்யலாம். போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, January 14, 2019

ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்துள்ள வெளிநாட்டினர் களுக்கு குடியுரிமை வழங்குவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அதிப ரான பிறகு அமெரிக்கா அமெரிக் கர்களுக்கே என்று சொல்லி வெளிநாட்டிலிருந்து அமெரிக் காவில் வந்து தங்கியிருப்பவர் களுக்கு கடுமையான கட்டுப்பாடு களை விதித்தார். ஹெச் 1 பி விசா விதி முறைகளிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயற்சித்தார். மேலும், முறைகேடாக அமெரிக் காவில் குடியேறுபவர்களைத் தடுக்க அமெரிக்க எல்லையில் பெரிய சுவர் எழுப்பும் முயற்சிகளை யும் தீவிரமாக எடுத்துவருகிறார். ஆனால், இதற்கு ஜனநாயகக் கட்சித் தரப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனவே, அரசு நிர்வாகத் துக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த 21 நாட்களாக அமெரிக்க அரசில் பாதி பேர் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், தற்போது ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும், அதற்கேற்ப புதிய மாற்றங்கள் ஹெச் 1 பி விசாவில் கொண்டுவரப்படும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, “அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக் காவில் தொடர்ந்து தங்கியிருக்கும் வகையிலான மாற்றங்கள் கொண்டு வரப்படும். இந்த நடவடிக்கை குடியுரிமை வழங்குவதற்கு சாத்திய மான புதிய பாதையாகும்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் குடியேறா மல், அங்கு தங்கி பணியாற்றுபவர் களுக்கு ஹெச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா வில் 3 ஆண்டுகள் வரை அமெ ரிக்காவில் தங்கி அங்கு பணி யாற்றலாம். இந்த விசா மூலம் அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து பணியாளர்களை அதிக மாக பணியமர்த்தி வந்தனர். ஆனால், ட்ரம்ப் அதிபரான பிறகு, ஹெச் 1 பி விசா நடைமுறைகள் கடுமையான கட்டுபாடுகளை அமல் படுத்தினார். இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வந்தன. இந்நிலையில், திறமையுள்ள வெளிநாட்டினர் அமெரிக்க நிறு வனங்களின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என சமீபத்தில் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது ஹெச் 1 பி விசாவில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பணி செய்ய வந் திருக்கும் திறமையானவர்களை ஊக்குவிக்கும் வகையிலான மாற் றங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா வில் பணிபுரியும் வெளிநாட்டினர் களுக்குப் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Sunday, January 13, 2019

9 கல்லூரி மாணவிகளை பாடகிகளாக தேர்வு செய்தார், இளையராஜா

இளையராஜாவுடன், பாடகிகளாக தேர்வு செய்யப்பட்ட 9 கல்லூரி மாணவிகள். கல்லூரி மாணவிகள் 9 பேர்களை தான் இசையமைக்கும் படங்களின் மூலம் பாடகிகளாக அறிமுகம் செய்ய இருக்கிறார், இசையமைப்பாளர் இளையராஜா. சினிமா இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சென்னை எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 2 பெண்கள் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவருடைய பிறந்தநாள் விழாவையும் மாணவிகள் மத்தியில், ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். நிகழ்ச்சியில் அவர் பேசியும், பாடியும் கலகலப்பூட்டினார். மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது, அவரது இசையை பற்றி மாணவிகள் சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள். அவர் முன்னிலையில் மாணவிகள் சிலர் பாடியதுடன், அவரது இசையில் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவு என்றும் கூறினார்கள். அதை இளையராஜா மனதில் வைத்துக் கொண்டு பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து, குரல் சோதனை நடத்தினார். அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை தேர்வு செய்து இருக்கிறார். அந்த 9 பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகிகளாக அறிமுகமாக இருக்கிறார்கள். இளையராஜா மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் இருக்கிறார்கள்.

நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இதுவரை எந்த பலனும் இல்லை. இதனை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 9-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டத்திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி பின்னர் அரசால் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களில் உள்ள சிறுபான்மை கல்வி நிலையங்கள் தவிர இதர அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களிலும் 10 சதவீதம் நலிந்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களின் குடும்ப வருமானம் மற்றும் இதர பொருளாதார பாதகமான தன்மைகள் அடிப்படையில் இந்த பிரிவினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல அரசு வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 11, 2019

சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தமிழ்நாடு சுகாதாரத்துறை ஊழியர்கள் நலச்சங்க செயலாளர் கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- கலந்தாய்வு அறிவிப்பு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 11.1.2019 அன்று (அதாவது இன்று) காலை 10.30 மணியளவில் செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது என்று மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் சார்பில் கடந்த 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் செவிலியர்கள் தற்போது பணியாற்றும் இடத்தில் ஒரு வருடம் பணியாற்றி, அதற்கான சான்றிதழை கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலந்தாய்வு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக அதற்குரிய அறிவிப்பை 7-ந்தேதி தான் வெளியிட்டார்கள். செவிலியர்கள் தவிப்பு இதனால் இடமாறுதல் பெற விரும்பும் செவிலியர்கள் உடனுக்குடன் ஒரு வருடம் பணியாற்றியதற்கான சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் எந்தெந்த ஊர்களில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற தகவல் இடமாறுதல் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. செவிலியர் கலந்தாய்வுக்கான நடைமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு கூறி உள்ளது. முழுமையான தகவலை குறிப்பிடாமல் அவசர கதியில் தற்போது இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு கடந்த 7-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி உரிய அவகாசம் வழங்கியும், முழுமையான தகவல்களுடனும் அறிவிப்பு வெளியிட்டு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். கலந்தாய்வுக்கு தடை இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், செவிலியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் தமிழக அரசு வேண்டுகோள்

புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் போகி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் ஏற்பட்ட காற்று மாசுபாடு இயற்கையால் ஜீரணிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி மண்டலங்களில் காற்றில் பி.எம்.10 துகள்களின் அளவு 135 முதல் 386 வரை மைக்ரோம்/கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகும். போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 9 பன்னாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் சென்னையில் இருந்து பிற விமான நிலையங்களான பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கோயம்புத்தூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 42 விமானங்கள் தாமதமாகவும் 40 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுகளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் புகை மண்டலம் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து போலீசாருடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 10, 2019

‘ஆன்-லைன்’ மூலம் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்கள் வழங்கும்முறை புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை போலீசில் பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் ‘ஆன்-லைன்’ மூலம் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழக காவல்துறையில் ‘நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற புதிய இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையின் தொடக்கவிழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இணையவழி சேவை திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகை தாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டுவேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500-ம், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000-மும் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையினைப் பயன் படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம். இதில் விண்ணப்பதாரர்களின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல்துறை வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர் ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரம் மட்டும் இதன் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பணி முடிக்கப்படும். இந்த சான்றிதழை பெறுவதற்காக இனிமேல் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லை. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் போலீஸ் கமிஷனருக்கோ, சம்பந்தப்பட்ட துணை கமிஷனருக்கோ அல்லது சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனருக்கோ மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடு இருந்தால் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையும் திருப்பித்தரப்படமாட்டாது. மேலும் விண்ணப்பதாரர்கள் காவல்துறைக்கு தவறான தகவல்களை அளித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், அருண், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் வாகனசோதனையில் ருசிகர சம்பவம்

மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தனது சொந்த காரில் சென்று தனியாக வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் ஓட்டி வந்த லாரியையும் அவர் தடுத்து நிறுத்தி டிரைவராக இருந்தவரிடம் மாமூல் கேட்டார். உடனே லாரியில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழே இறங்கினார்கள். அதன்பின்னர் டிரைவர் போல் மாறுவேடத்தில் இருந்தவர் தான் கொண்டுவந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பதியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்ட போது மாறுவேடத்தில் இருந்த 2 பேரும், ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். உங்களை விசாரிக்க வேண்டும். சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று கூறி சுற்றி வளைத்தார்கள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பதி, ‘சரி நான் என்னுடைய காரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வருகிறேன்’ என்று கூறினார். அதை நம்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் வந்த லாரியிலும், அவர்களின் பின்னால் பதி தன்னுடைய காரிலும் சத்தியமங்கலத்துக்கு சென்றுகொண்டு இருந்தனர். சிக்கரசம்பாளையம் தாண்டி கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பதி திடீரென காரை கெஞ்சனூர் நோக்கி திருப்பினார். அதன்பின்னர் கார் மின்னல் வேகத்தில் கெஞ்சனூர் நோக்கி சென்றுவிட்டது. இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் லாரியில் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார்கள். ஆனால் காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாக சென்ற போது பதியின் கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து வேலுச்சாமியை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் பதி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், விபத்தை ஏற்படுத்தி வேலுச்சாமி படுகாயம் அடைந்ததற்காக சத்தியமங்கலம் போலீசாரும் பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். காரில் தப்பி ஓடிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tuesday, January 8, 2019

புயல் நிவாரண பணிகள் முடியாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கருணாநிதி மரணம் அடைந்ததால் காலியிடமாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடந்துவந்தது. தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக காமராஜும் அறிவிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலால் திருவாரூர் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு நிவாரண பணிகள் நடந்துகொண்டிருப்பதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. தமிழக தலைமை செயலாளரும் ஏற்கனவே இந்திய தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், கஜா புயலால் திருவாரூர் உள்பட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கத்தால் காலியான 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்திய தேர்தல் கமிஷனிலும் அவர் மனு கொடுத்தார். அந்த மனுவில், “கஜா புயல் தாக்குதலில் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் தங்கள் உடைமைகளுடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றையும் இழந்துவிட்டனர். அங்கு நிவாரண பணிகள் நடந்துவருகிறது. இந்த பணிகள் முடியும் வரை அங்கு இடைத்தேர்தலை நடத்தக்கூடாது” என்று அவர் கூறியிருந்தார். இந்த மனுவை பரிசீலித்த தேர்தல் கமிஷன், இதுபற்றி அறிக்கை தருமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கூறியது. அதன்பேரில் அவர் திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் நிர்மல்ராஜிடம் கருத்து கேட்டார். திருவாரூரில் கலெக்டர் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை அழைத்து கருத்துகேட்டார். இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளும் திருவாரூரில் இப்போது இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை இல்லை, எனவே இடைத்தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று தெரிவித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இதனை அறிக்கையாக தயாரித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினார். அவர் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அந்த அறிக்கையை அனுப்பி பரிந்துரைத்தார். இந்திய தேர்தல் கமிஷன் அந்த அறிக்கையை ஆய்வு செய்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தது. இந்திய தலைமைதேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், “திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. தேர்தலுக்கான புதிய தேதி உரியநேரத்தில் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. காரணங்கள்
தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான உத்தரவில் அதற்கான காரணங்கள் பற்றியும் கூறப்பட்டு இருந்தது. அதன் விவரம் வருமாறு:-

* புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு இன்னும் காலஅவகாசம் தேவைப்படுகிறது.

* நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பணியை பாதியில் நிறுத்திவிட்டு தான் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

* புயலில் இருந்து மீண்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவில்லை.

* புயலில் பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களால் வாக்களிப்பில் பங்கேற்க இயலாது.

* தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை விரைவில் வர இருக்கிறது.

ஆசிரியர்களுக்கு தேர்வு பணி

* சம்பா நெல் அறுவடை பணிகள் தொடங்க இருப்பதால் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டியுள்ளது.

* வணிகர் சங்கத்தினர் இப்போது தேர்தலை நடத்துவதை விரும்பவில்லை.

* மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களைத் தான் தேர்தல் பணியிலும் ஈடுபடுத்தியாக வேண்டும்.

* தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்று கூறி அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு டி.ராஜாவின் மனு மீது விசாரணை தொடங்கியதும், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்துசெய்த தேர்தல் கமிஷன் உத்தரவின் நகல் நீதிபதிக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.


Sunday, January 6, 2019

ஐன்ஸ்டீன், நியூட்டன் கோட்பாடுகள் தவறு  இந்திய அறிவியல் மாநாட்டில் தமிழக விஞ்ஞானி கருத்து

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் தவறு என்று தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் கடந்த 3-ம் தேதி இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் தமிழகத்தின் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவா மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் கடந்த 4-ம் தேதி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது: புவிஈர்ப்பு எதிர்விசை குறித்து ஐசக் நியூட்டனிடம் விஞ்ஞானிகள் கேட்டபோது அவரிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் புவிஈர்ப்பு எதிர்விசையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது கணிதங்கள் சரியாக உள்ளன. ஆனால் அவரது இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அந்த குளறுபடிகளுக்கு என்னால் தீர்வு காண முடியும். சூரியன் மற்றும் இதர கிரகங்களைவிட அண்டவெளி அடர்த்தியானது. அனைத்து கிரகங் களுக்கும் அண்டவெளி சரிசமமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால்தான் கிரகங்கள் நகர்கின்றன. இதனை நியூட்டன், ஐன்ஸ்டீனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வகையில் ஐன்ஸ்டீன் உலகத்துக்கு சரியான பாதையைக் காட்டவில்லை. ஐன்ஸ்டீன் மேதாவியாக இருந்தாலும் மிகப் பெரிய தவறுகளை செய்துள்ளார். அவரது E=MC2 கோட்பாடு முற்றிலும் தவறானது. அவரின் அனைத்து கோட்பாடுகளையும் நான் மாற்றியமைக்கப் போகிறேன். எனது ஆய்வறிக்கைகளை 40 நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். கருந்துளை கோட்பாடு தொடர்பாக இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் கூறிய கருத்துகள் தவறானவை. இதை சுட்டிக் காட்டி கடந்த 2017-ம் ஆண்டில் அவருக்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளேன். இந்து புராண வேதங்களில் இதற்கெல்லாம் விடை இருக்கிறது. பனிமலைகளில் இருந்து உருகி ஓடும் தண்ணீர் தரையை நோக்கிப் பாய்கிறது. புவிஈர்ப்பு விசை இருக்கும் என்றால் அந்த தண்ணீரை பூமி ஏன் ஈர்க்கவில்லை. புவிஈர்ப்பு விசை குறித்து இப்போது கூறப்படும் விளக்கம் சரியானது கிடையாது. எனது ஆய்வறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் புவிஈர்ப்பு விசைக்கு 'நரேந்திர மோடி அலைகள்' என்றும் ஈர்ப்பு விசை ஒளி விளைவுக்கு 'ஹர்ஷவர்தன் விளைவு' என்றும் பெயர் சூட்டுவேன். எதிர்காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைவிட மிகப்பெரிய விஞ்ஞானியாக அமைச்சர் ஹர்ஷவர்தன் உருவெடுப்பார். இவ்வாறு அவர் பேசினார்.குரு டாக்டர் சத்யமூர்த்தி புகழாரம் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணனின் குரு டாக்டர் சத்யமூர்த்தி உதகையை சேர்ந்தவர். வேதாத்திரி மகரிஷியின் தொண்டரான இவர் மூத்த யோகா மாஸ்டராக உள்ளார். உலக சமுதாய சேவா இயக்கத்தின் மூத்த பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது சீடரான கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் குறித்து கேட்ட போது, ‘மெகானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு படித்த கண்ணன், ஆஸ்திரேலியாவில் எம்.எஸ். படித்தார். அங்கேயே எம்பிஏ முடித்து, இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளாக இயற்பியலில் Unified Force (Vethon) குறித்து ஆய்வு செய்து, தற்போது இந்திய அறிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். Unified Force (Vethon) என்பது இயற்பியலில் மிகப் பெரிய துறை. சாமானியர்கள் புரிந்துக்கொள்வது கடினம். இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்’ என்றார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

மகாபாரத கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள் ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

மகாபாரதத்தில் வரும் கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள் என ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு கடந்த 3-ம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் அறிவியல் வல்லுநர்கள் பங் கேற்று, இன்றைய சூழலின் அறிவி யல் வளர்ச்சி குறித்தும், வருங் காலத்தில் ஏற்பட உள்ள அறிவியல் சார்ந்த மாற்றங்கள் குறித்தும் விவாதம் நடத்தி வருகின்றனர். இதில், ஆந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி. நாகேஸ்வர ராவ் நேற்று பேசியதாவது: நம் நாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அறிவி யல் வளர்ச்சியில் முன்னோடியாக இருந்துள்ளது. இதற்கு நம்முடைய புராணங்களே ஆதாரம். மகாபார தத்தில் வரும் கவுரவர்கள் சோதனைக்குழாய் குழந்தைகள் தான். இலங்கேஸ்வரனான இரா வணனுக்கு மிகப்பெரிய விமான தளம் இருந்துள்ளது. அவரிடம் அப்போதே 24 போர் விமானங்கள் இருந்துள்ளன. இதுபோல இந்து புராணங்களில் பல ஆதாரங்கள் உள்ளன. ஏவுகணைகளை ஏவு வதில் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே நம் நாடு முன்னோடியாக திகழ்ந்துள்ளது. மகா விஷ்ணு தனது எதிரியை தாக்க, சுதர்ஸன சக்கரத்தை ஏவி, அது மீண்டும் திரும்பி வரும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஏவுகணையை வைத்திருந்துள்ளார். விஷ்ணுவின் தசாவதாரங்களை ஆதாரமாகக் கொண்டே, சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை வருகிறது. ராமர், ‘அஸ்திரா’, ’சாஸ்த்ரா’ ஆகிய பலம் மிக்க ஆயுதங்களை பயன் படுத்தியதாக ராமாயணம் கூறுகிறது. இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணைகளும், பயங்கர ஆயுதங்களும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிகிறது. ராவணன், புஷ்பக விமானம் வைத் திருந்ததாக ராமாயணம் கூறுகி றது. மேலும் 24 வகையான போர் விமானங்கள் வைத்திருந்ததாக வும், அதன் மூலம் ராமர் படையை எதிர்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை நீரில் இருந்துதான் தொடங்குகிறது என விஞ்ஞானி டால்ஸ்டாய் கூறியுள்ளார். இதை நாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே இவ்வுலகுக்கு அறிவித்துள்ளோம். ஆம். மகா விஷ்ணுவின் தசாவதாரம் இதை நமக்கு உணர்த்துகிறது. விஷ்ணு வின் முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும். அதாவது மீன் அவதாரம். இது நீரில் இருந்துதான் தொடங்குகிறது. 2-வது கூர்ம (ஆமை) அவதாரம். இது அடுத்த கட்டமாகும். அதாவது நீரிலும், நிலத்திலும் வாழ்க்கூடியது. இதற்கு அடுத்தாற்போல, விலங்கு உரு வாகுகிறது. அது வராக அவதாரம். அதன் பின்னர் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து மிருகம், மனிதன் என நரசிம்ம அவதாரம் உருவாகிறது. அதன் பிறகு வாமணர் என சிறிய மனிதனாக உருவாகி, ஆயுதங்கள் உருவாகி றது. இதையே பரசுராமர் அவ தாரம் என்கிறோம். அதன் பின்னர் ராமர், கிருஷ்ணர் என மனிதனுக் குள் பேதம், ஆளுமை, அரச நியதி, அரசியல், போர், எதிரி, ஆயுதங்கள், தாக்குதல்கள் என உருவாகிறது. இதிலும் குறிப்பாக, இப்போது நடைமுறையில் உள்ள சோதனைக் குழாய் குழந்தைகள் குறித்து நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவுரவர்கள் பிறந்ததைக் கூறியுள்ளோம். கவுரவர்களின் தாயார் காந்தாரிக்கு 100 குழந்தை கள் பிறந்தனர் என்றால் நம்ப முடியுமா ? ஆனால் இப்போது இது சோதனைக்குழாய் குழந்தைகள் மூலம் சாத்தியமாகிறது. 100 முட்டை களை, 100 பானைகளில் வைத்து இனப்பெருக்கம் செய்தால் அது தான் சோதனைக்குழாய் குழந்தை கள். இதை நாம் எப்போதோ கூறி விட்டோம். இதேபோல குறுத்தணு (ஸ்டெம் செல்) முறை குறித்தும் நாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே கூறி விட்டோம். இதனால் நாம் இவ்வுலகின் அறிவி யல் விஞ்ஞானத்தின் முன்னோடி கள் என கூறுவதில் எந்த சந்தேக மும் வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு மழலையர் வகுப்புகளுக்கு பெண் ஆசிரியர்கள் 

அரசு மழலையர் வகுப்புகளுக்கு பெண் ஆசிரியர்கள்  தொடக்கக் கல்வித் துறை இயக்கு நர் வெளியிட்ட சுற்றறிக்கை: அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்க உள்ளன. ஏற்கெனவே மாவட்ட வாரியாக மாணவர்களின் எண் ணிக்கையின்படி உபரி ஆசிரி யர்களின் பணியிடங்கள் கண்ட றியப்பட்டுள்ளன. அவ்வாறு உபரியாக உள்ளவர்களில் பெண் ஆசிரியர்களை மையத்துக்கு ஒருவர் வீதம் அந்தந்த ஒன்றி அளவில் மட்டுமே பணி ஒதுக்க வேண்டும். அதேநேரம் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அவர் களின் சீனியாரிட்டி மாறாமல் அரு கில் உள்ள ஒன்றியங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Saturday, January 5, 2019

புதிய படிப்புகள் தொடங்க யோசனை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் அனுமதி கூடாது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு பரிந்துரை

அடுத்த ஆண்டிலிருந்து புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என்றும் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட நீண்ட காலமாக இருந்து வரும் படிப்புகளுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் போன்றவை தொடர்பான புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அண்மைக்காலமாகவே நாடு முழுவதும் பொறியியல் படிப்பில் சேரும் ஆர்வம் மாணவ-மாணவி கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. பொறியியல் கல்லூரி களில் போதிய மாணவர்கள் சேரா ததால் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக கிடக்கின்றன. தமிழ்நாட்டி லும் இதேநிலைதான் நீடிக்கிறது. இந்த நிலையில், பொறியியல் கல்வியை மேம்படுத்துவது தொடர் பாக அகிலஇந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஹைதராபாத் ஐஐடி தலைவரும், நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிவிஆர் மோகன் ரெட்டி தலைமையில் நிபுணர் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி 41 பக்க அறிக்கையை ஏஐசிடிஇ-யிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் பொறியியல் படிப்பை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், வழங்கி இருக்கிறது. அதன்படி, 2020-ம் ஆண்டிலிருந்து புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது. படிப்படியாக... சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நீண்ட காலமாக இருந்துவரும் பொறியியல் பாடப்பிரிவுகளில் இடங் களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. இந்தப் பாடப்பிரிவுகளை படிப்படியாக தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், ரொபாட் டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ், இணையப் பாது காப்பு, 3-டி பிரின்டிங் மற்றும் டிசைன் போன்ற பாடப்பிரிவுகளாக மாற்ற வேண்டும். மோகன் ரெட்டி குழுவின் பரிந்துரை களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்துவருவதாக ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதி தெரிவித்துள்ளார்.சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நீண்ட காலமாக இருந்துவரும் பொறியியல் பாடப்பிரிவுகளில் இடங் களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது.

சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா: “புத்தகங்கள் படித்து நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

“புத்தகங்கள் படித்து மேதை ஆனவர்களை விட நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம்” என்று, சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) 42-வது சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரையாற்றினார். தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் க.கண்பதி விருதை முல்லை பழனியப்பனுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான அம்சவேணி பெரியண்ணன் விருது ஜி.திலகவதிக்கும், சிறந்த விற்பனையாளருக்கான பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது ஹிக்கின்பாதம்சுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கோவி.பழநிக்கும், பபாசி-சிறந்த நூலகர் விருது ச.இளங்கோ சந்திரகுமாருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது க.ப.அறவாணனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது காயத்ரி பிரபுவுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மறைந்த அறவாணனுக்கான விருதை அவரது மகன் அறிவாளன் பெற்றுக்கொண்டார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஆண்டுக்கு ஆண்டு புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சிகளின் தேவையும் அதிகரிக்கத்தான் செய்யும். இப்படிப்பட்ட புத்தக கண்காட்சிகள் மூலம் தமிழ்நாடு அறிவு சார் மாநிலம் என்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. நமது மூதாதையர் அறிவையும், அனுபவத்தையும் ஆவணப்படுத்தி நமக்கு சொத்தாக வழங்கி செல்வது நூல்கள்தான். மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும்... பிள்ளைகள் பெற்றோர் செய்வதைப் பார்த்து மிகுதியாகக் கற்றுக் கொள்கிறார்கள் எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடும். நூல்களை படித்து மேதையானவர்களைவிட, நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம். எனவே மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும் நூல் வாசிப்பது மிக மிக அவசியம் என்பதை உணருங்கள். அண்ணாவின் வழியில் வந்த எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள் எப்போதும் படைப்பாளர்கள் பக்கமும், படிப்பாளிகளின் பக்கமும்தான் இருப்போம் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகிறது

பல்வேறு தனியார் வானொலி நிலையங்களின் வருகை, அதிதீவிர தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அகில இந்திய வானொலியை கேட்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் 5 மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள இந்திய வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத்தின் ஆமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் சில்லாங் ஆகிய 5 மண்டலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன.

Tuesday, January 1, 2019

டிஎன்பிஎஸ்சி 2019-க்கான அட்டவணை வெளியீடு

2019-ம் ஆண்டின் வருடாந்திர போட்டித் தேர்வு கால அட்ட வணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உட்பட 35 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஓராண்டில் எந்தெந்த பணி களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறி விப்பு எப்போது வெளியாகும், தேர்வுகள், தேர்வு முடிவுகள், நேர் காணல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பி எஸ்சி ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. தமிழக அரசு பணியில் சேர விரும்பும் இளை ஞர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராக இந்த அட்டவணை பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பி எஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். அதில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உட்பட 35 போட்டித்தேர்வுகளுக்கான அறி விப்புகள் இடம்பெற்றுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு தேர்வுக் கான அறிவிப்பு எப்போது வெளி யாகும், உத்தேச காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு நாள், தேர்வு முடிவு வெளியாகும் காலம், நேர்காணல், இறுதி தேர்வு முடிவு வெளியாகும் நாள் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த ஆண்டு தேர் வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணையின் படி, பொதுவான தேர்வுகளாக கருதப்படும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியிலும் குரூப்-2 தேர்வுக்கான அறிவிக்கை மே மாதமும் குரூப்-4 தேர்வுக் கான அறிவிப்பு ஜூன் மாத மும் வெளியிடப்பட உள்ளன. தேர்வுகளின் முடிவுகளை உரிய காலத்தில் வெளியிட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.