ஜிப்மரில் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு இன்று முதல் இணையத்தில் ஒளிபரப்பு

இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் சுவாமிநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (டிச.21) காலை மருத்துவ மேற்படிப்பு (DM, MCh) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இது முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கலந்தாய்வு வெளிப்படை தன்மையாக நடப்பது தெரிய வரும். கலந்தாய்வில் பெற்றோருக்கு அனுமதியில்லை. பெற்றோர் வீட்டில் இருந்தே இந்த கலந்தாய்வை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம். மருத்துவக் கலந்தாய்வு இந்திய அளவில் அரசு மருத்துவ நிறுவனத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்வது இதுவே முதல்முறை. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவக் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments