அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார். யோகா, வேதப் பயிற்சி, பதஞ் சலி ஆகியவற்றை எடுத்துரைக்கும் 3 நாள் (டிச.26, 27, 28) பாரத் ஸ்வாபிமான் நிகழ்ச்சி யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேசுவரத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாபா ராம்தேவ் யோகா மையங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ராமேசுவரம் வந்துள்ள னர். ராமேசுவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று சிறப்பு யோகா பயிற்சி அளித்த யோகா குரு பாபா ராம்தேவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரத் ஸ்வாபிமான் எந்தவித மதம் மற்றும் அரசியல் சார்பும் இல்லாத ஒரு ஆன்மிக நிகழ்ச்சி. இதன் மூலம் இந்தியா முழுவதும் யோகா, வேதம் மற்றும் பதஞ்சலியை பிரபலப்படுத்தவும், நம் மக்களை சுதேசிப் பொருட்களை வாங்கச் செய்யவும் முயற்சி எடுத்து வரு கிறோம். யோகா என்பது மதம் சார்ந்ததோ அல்லது உடற்பயிற்சி சார்ந்ததோ அல்ல. அது ஒரு அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறை. யோகா மூலம் நம் உடம்பில் உள்ள நோய்களை சரிப்படுத்தலாம். மன அழுத்தத்தில் இருந்து வெளிவரலாம் என்றார். தற்போதைய அரசியல் சூழல் பற்றி கேட்டபோது, "தற் போது நாட்டில் அரசியல் களம் மிகவும் சிக்கலானதாக உள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும், சூழ்நிலை மிகவும் சுவாரஸ்யமாகவும், கடுமையான போட்டியுடனும் காணப்படுகிறது. தற்போதைக்கு நான் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. மேலும் நான் எந்த தனிப்பட்ட நபரையோ அல்லது கட்சியையோ ஆதரிக்கவில்லை" என்று ராம் தேவ் தெரிவித்தார்.

Comments