அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்  செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்  பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது 

அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார். பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய சீருடையை அணிந்து செவிலியர் கள் பணியாற்ற உள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் பெண், ஆண் செவிலியர்களுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள சீருடை கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதிய சீருடைகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியதாவது: தமிழக அரசு மருத்துவ மனைகளில் சேவைகள் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. செவிலியர்களின் சீருடையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற செவிலியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பணிபு ரியும் 13,864 நிரந்தர செவிலியர்கள், 12,600 தற்காலிக செவிலியர்கள் என மொத்தம் 26,464 செவிலியர்கள் பயனடைவார்கள். முதல்நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள், இரண்டாம் நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்கள், 10 ஆண்டுகளுக்கு கீழ் பணிபுரியும் செவிலியர்கள், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கென (பெண், ஆண்) தனித்தனி சீருடைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு செட் சீருடைகளை அரசு இலவசமாக வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். புதிய சீருடைகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் கேட்ட போது, “தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் பெண், ஆண் செவிலியர் களுக்கு சீருடை மாற்றப்பட்டுள் ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து புதிய சீருடை அணிந்து செவிலியர்கள் பணியாற்றுவார் கள்” என்றார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் நாக ராஜன், மருத்துவப் பணியார் தேர்வு வாரிய தலைவர் ராஜா ராமன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ருக்மணி, பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, செவிலியர் சங்கங்களின் தலைவி வளர்மதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.செவிலியர்களின் சீருடையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற செவிலியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 13,864 நிரந்தர செவிலியர்கள், 12,600 தற்காலிக செவிலியர்கள் என மொத்தம் 26,464 செவிலியர்கள் பயனடைவார்கள்.

Comments