சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு பெற்றனர். மனிதநேய மையம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வும், தொடர்ந்து முதன்மை தேர்வும், அதன் பிறகு நேர்முகத்தேர்வும் நடக்கிறது. இந்த ஆண்டு 874 பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வில் கலந்துகொண்டனர். கடந்த செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளித்தது. அந்த பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மிக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 10 மாணவர்கள், 24 மாணவிகள் என 34 பேர் தேர்ச்சி பெற்றனர். நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி இந்த முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளும், தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் மனிதநேயம் மையத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தின் (ஷ்ஷ்ஷ்.னீஸீ௴யீக்ஷீமீமீவீணீ.நீஷீனீ) வாயிலாகவோ பதிவு செய்துகொள்ளலாம். அனைத்து வசதிகள் இலவசம் நேர்முகத் தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும். மேற்கண்ட தகவலை மனிதநேய மைய பயிற்சி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Comments