ரூ.5,900 கோடியில் உருவான நாட்டிலேயே மிக நீளமான பாலம் அசாமில் இரண்டு அடுக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரூ.5,900 கோடியில் உருவான நாட்டி லேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்கு பாலத்தை அசாமில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே போகிபீல் என்ற இடத்தில் ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்கு பாலம் கட்டப்பட்டுள் ளது. இது அசாமின் தேமாஜி, திப்ரு கர் பகுதிகளை இணைக்கிறது. 4.94 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் நாட்டிலேயே மிகவும் நீளமானதாகும். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் அசாமின் திப்ருகரில் இருந்து அருணாசலப் பிரதேசத்தின் இடா நகருக்கு ரயிலில் எளிதாக செல்ல முடியும். சுமார் 3 மணி நேரம் பயண நேரம் குறையும். 1997-ல் அப்போ தைய பிரதமர் தேவகவுடாவால் அடிக் கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போ தைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 3-ல் கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்தது. இந்தப் பாலத்தை அசாமின் திப்ருகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாலத்தில் பயணம் செய்தும் பார்வையிட்டார். மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டபடி தனது காரில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர், அசாமில் இருந்து அருணாசலப் பிரதேசம் செல்லும் முதல் பயணிகள் ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசாம் மற்றும் அருணாசலப் பிரதேச மக்களுக்கு இந்தப் பாலம் மிகப் பெரிய வரமாக கருதப்படுகிறது. பாலத்தை திறந்து வைத்த பின்னர் திப்ருகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘நாட்டின் வரலாற் றில் இன்று முக்கியமான நாள். போகிபீல் ரயில் - சாலை பாலம் மூலம் அசாம் மட்டுமின்றி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் பெருமளவில் வளர்ச்சி பெறும். இப்பகுதியின் பொருளாதார நிலை மேம்படும். ராணுவ தளவாடங் களை எல்லைப் பகுதிக்கு நம் வீரர்கள் எளிதில் கொண்டு செல்ல முடியும். வாஜ்பாய் ஆட்சியில்தான் பாலம் கட்டும் பணி தொடங்கியது. அவர் மீண் டும் பிரதமராகி இருந்தால் 2008-09 ஆண்டிலேயே இப்பாலம் கட்டப்பட் டிருக்கும். அவருக்குப் பின் வந்த அரசு கள் 2014-ம் ஆண்டுவரை இதில் அக்கறை காட்டவில்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை கட்டி முடித்துள்ளோம். போகிபீல் பாலம் வெறும் பாலம் அல்ல. இது இப்பகுதியின் வாழ்வாதாரம். வட கிழக்கு மாநிலங்களில் விரைவில் 15 புதிய ரயில்கள் தொடங்கப்படும். நாட்டின் எல்லாப் பகுதிகளும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்பதிலும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி யிலும் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டிருக்கிறது’’ என்றார்.மேலே சாலை.. கீழே ரயில் தடம் 1985-ம் ஆண்டு மத்திய அரசின் அசாம் ஒப்பந்தப்படி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக போகிபீல் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. போகிபீல் பாலம் இரண்டு அடுக்கு பாலமாகும். மேலே 3 வழிச் சாலையும் கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5,900 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அசாம், அருணாசலப் பிரதேச மக்கள் மருத்துவம், கல்வி வசதிகளை சுலபமாக பெறவும் இந்த பாலம் உதவும். ரயில்வே பாலத்தின் கர்டரும் தரைப்பகுதியும் முதல்முறையாக உருக்கு இரும்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Comments