பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில் தங்கம் வென்றதன் மூலம் சிந்துவுக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9-வது இடத்தில் நீடிக்கிறார். தாய் ஜூ யிங் (சீனதைபே) முதலிடத்திலும், நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 2-வது இடத்திலும் உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 8-வது இடமும், சமீர் வர்மா 2 இடங்கள் உயர்ந்து 12-வது இடமும் வகிக்கிறார்கள்.

Comments