Skip to main content

Posts

Showing posts from December, 2018

2019 ஏப்ரல் முதல் வாகனங்களுக்கு புது வகை நம்பர் பிளேட்! மத்தியஅரசு முடிவு

போலி நம்பர் பிளேட்கள் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 1ந்தேதி முதல் வாகனங்களுக்கு பாதுகாப்பு வசதியுடன் கூடிய புது வகை நம்பர் பிளேட் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற மக்களவையில், போலி நம்பர் பிளேட் விவகாரம் குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்து உள்ளார். அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் குரோமியம் பூசப்பட்ட நம்பர் பிளேட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என்றும், அத்துடன் வாகனத்தின் எண் லேசர் ஒளிக்கற்றை மூலம் பொறிக்கப்பட இருப்பதாகவும் கூறினார். வாகனத்தின் வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பிக்கம் ஆகிய இருபுறங்களில் அமைக்கப்படும் நம்பர் பிளேட்டுளும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019 ஏப்ரல் 1-ஆம் நாள் முதல், வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் தாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொர

வரும் கல்வி ஆண்டிலிருந்து, தொடக்கப் பள்ளிகளே கிடையாது.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் முறைகளில், பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது, தமிழக அரசு. சமச்சீர் கல்வியை, அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும், என்ற கட்டாயமும் உள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் அனைத்தும், பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனை அடுத்து, தமிழக அரசு, தமிழகத்தில் இயங்கும், அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, வரும் 2019-ஆம் ஆண்டு, ஜுன் மாதம் முதல், தமிழகத்தில், அரசு துவக்கப் பள்ளிகளே இருக்காது. அனைத்து அரசு துவக்கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளி மற்றும், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்படும். இனி, ஒரே பள்ளியல், 1 முதல் பிளஸ் டூ வரை, இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி பயிலலாம். இந்த நடைமுறை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது
யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ஜினீயர்களுக்கான என்ஜினீயரிங் சர்வீஸ் எக்ஸாம் 2019 தேர்வை விரைவில் நடத்த உள்ளது. 581 பணியிடங்களை நிரப்பும் இந்தத் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வினியோகம் தொடங்கி உள்ளது. ஜனவரி 6-ந் தேதி தேர்வு நடக்க உள்ளது. இதுவரை அட்மிட்கார்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனே www.upsc.gov.in இணையதளம் வழியாக அட்மிட் கார்டு பெறலாம்.

அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார். யோகா, வேதப் பயிற்சி, பதஞ் சலி ஆகியவற்றை எடுத்துரைக்கும் 3 நாள் (டிச.26, 27, 28) பாரத் ஸ்வாபிமான் நிகழ்ச்சி யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேசுவரத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாபா ராம்தேவ் யோகா மையங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ராமேசுவரம் வந்துள்ள னர். ராமேசுவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று சிறப்பு யோகா பயிற்சி அளித்த யோகா குரு பாபா ராம்தேவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரத் ஸ்வாபிமான் எந்தவித மதம் மற்றும் அரசியல் சார்பும் இல்லாத ஒரு ஆன்மிக நிகழ்ச்சி. இதன் மூலம் இந்தியா முழுவதும் யோகா, வேதம் மற்றும் பதஞ்சலியை பிரபலப்படுத்தவும், நம் மக்களை சுதேசிப் பொருட்களை வாங்கச் செய்யவும் முயற்சி எடுத்து வரு கிறோம். யோகா என்பது மதம் சார்ந்ததோ அல்லது உடற்பயிற்சி சார்ந்ததோ அல்ல. அது ஒரு அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறை. யோகா மூலம் நம் உடம்பில் உள்ள நோய்களை சரிப்படுத்தலாம். மன அழுத்தத்தில் இருந்து வெளிவரலாம் என்றார்.

பொதுத்தேர்வு நேரம் மாற்றம் தேர்வுத் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு நேரங்கள் மாற்றி அமைக் கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு அட்டவணை கடந்த ஜூனில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சில மாற்றங்களுடன் பொதுத் தேர்வு கால அட்டவணையை நாள் மற்றும் நேரம் வாரியாக தேர்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மார்ச்சில் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் (முதல், 2-ம் தாள்) மற்றும் ஆங்கிலம் (முதல், 2-ம் தாள்) தேர்வுகள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். மற்ற கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். இதேபோல், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்து, மார்ச்சில் மறுதேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங் களுக்கு மொத்த மதிப்பெண் 100 ஆகவும், நேரம் 2.30 மணியாகவும் இருக்கும். மற்ற எல்லா பாடங் களுக்கும் மதிப்பெண் 200 ஆகவும், நேரம் 3 மணியாக இருக் கும். மேலும், நேரடியாக பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம் வகுப்பு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்த கூடுதல் விவரங் களை www.dge.tn.gov.in என்ற இண

போட்டித் தேர்வுக் களமாக மாறிய ரெயில் நிலையம்

அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கு போட்டி தேர்வு எழுதும் இளைஞர்கள் குழுவாக அமர்ந்து படிக்கும் வழக்கம் பெருகிக்கொண்டிருக்கிறது. ரெயிலில் பயணித்து வேலைக்கு செல்பவர்களில் நிறைய பேர் பணி முடிந்து வீடு திரும்பு வதற்கு முன்பு ரெயில் நிலையத்தில் அமர்ந்து போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள். பீகார் மாநிலத்தில் உள்ள சாசராம் ரெயில் நிலையத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி எந்தவிதமான சச்சரவுமின்றி போட்டித்தேர்வுக்கு குழுவாக அமர்ந்து படித்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். அவர்களுக்கு ரெயில் நிலைய அதிகாரிகளும், ரெயில்வே போலீசாரும் உறுதுணையாக இருந்து தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கு அமர்ந்து படித்து வேலை வாய்ப்பை பெற்றவர்கள், போட்டித் தேர்வுக்கு முழு கவனம் செலுத்தி படிப்பவர்கள் தினமும் வந்து பயிற்சி அளிக்கிறார்கள். இங்கு 2002-ம் ஆண்டில் இருந்தே மாணவர்கள் தேர்வுக்கு படித்து கொண்டிருக் கிறார்கள். சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை பிரச

2 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்திய வீரர் செல்வார் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

2 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்திய வீரர் செல்வார் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். இஸ்ரோ தலைவர் சிவன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் மதியம் குமரி மாவட்டம் வந்தார். அவர் அகஸ்தீஸ்வரம் பகுதி மற்றும் தேரேகால்புதூரில் உள்ள சகோதரிகள் வீடுகளுக்குச் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- ரூ.10 ஆயிரம் கோடி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) சார்பில் விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பி வைக்கும் ‘ககன்யான்‘ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்துக்காக கடந்த 10 ஆண்டுகளாக நிதி கேட்டு வந்தோம். தற்போது மத்திய அரசின் மந்திரிசபைக் கூட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அதிகமானது என்றாலும், இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது பெரிய விஷயம்தான். ‘ககன்யான்‘ திட்டத்தின்படி முதன்முதலாக விண்வெளிக்கு ஒரு விண்வெளி வீரர் மட்டும்தான் அனுப்பி வைக்கப்பட இருக்கிறார். அந்த வீரர் விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட இருக்கிறார். அதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. மன

ஜனவரி 4 முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது: சென்னை புத்தக கண்காட்சி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வயிரவன், துணைத் தலைவர் மயிலவேலன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 42-வது சென்னை புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 17 நாட்கள் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும். தமிழுக்கு 487 அரங்குகள் என மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஜனவரி 5-ந்தேதியன்று புத்தக கண்காட்சி வளாகத்தில் தமிழ் அன்னை சிலை நிறுவப்பட உள்ளது. இதனை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார். மக்க

பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்

மார்ச்-2019 பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வு எழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கு ரூ.50 தேர்வு கட்டணமும், ரூ.35 இதர கட்டணமும், ஆன்-லைன் கட்டணம் ரூ.50-ம், முதன்முறையாக எழுத உள்ள தனித்தேர்வர் கள் தேர்வு கட்டணமாக ரூ.150-ம், இதர கட்டணமாக ரூ.35-ம், ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்

அலங்காநல்லூரில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கடந்த 2016-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மெரினா கடற்கரையில், பல்வேறு இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் - 2017-ன் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று அனுமதித்துள்ளார். அதன்படி, மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந் தேதியும்; வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேட்டில் ஜனவரி 16-ந் தேதி அன்றும்; அலங்காநல்லூரில் ஜனவரி 17-ந் தேதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். இவ்வாறு அதி

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்.

புதிய அம்சங்களுடன் ரூ. 20 நோட்டை விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரூ.50, ரூ.100, ரூ.500 ரூபாய் நோட்டு களை வெளியிட்டுள்ளது. மேலும், பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை யின் போது புதிதாக ரூ.200, ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத் தியது. இந்த ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தி (புதிய) தொடர் வரிசையில் வெளியிட்டது. இந்த நிலையில், பல்வேறு புதிய அம்சங்களுடன் புதிதாக ரூ.20 நோட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை யில் 492 கோடி 20 ரூபாய் நோட்டு கள் புழக்கத்தில் இருந்தன. இந்த ஆண்டு புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 20 ரூபாய் நோட்டின் பங்களிப்பு 9.8 சதவீதமாக இருக்கிறது.

ரூ.5,900 கோடியில் உருவான நாட்டிலேயே மிக நீளமான பாலம் அசாமில் இரண்டு அடுக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரூ.5,900 கோடியில் உருவான நாட்டி லேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்கு பாலத்தை அசாமில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே போகிபீல் என்ற இடத்தில் ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்கு பாலம் கட்டப்பட்டுள் ளது. இது அசாமின் தேமாஜி, திப்ரு கர் பகுதிகளை இணைக்கிறது. 4.94 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் நாட்டிலேயே மிகவும் நீளமானதாகும். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் அசாமின் திப்ருகரில் இருந்து அருணாசலப் பிரதேசத்தின் இடா நகருக்கு ரயிலில் எளிதாக செல்ல முடியும். சுமார் 3 மணி நேரம் பயண நேரம் குறையும். 1997-ல் அப்போ தைய பிரதமர் தேவகவுடாவால் அடிக் கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போ தைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 3-ல் கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்தது. இந்தப் பாலத்தை அசாமின் திப்ருகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மே 2019-ல் வெளியாகும் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் ஃபெரோஸ்கான் தகவல்

உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை வரும் 2019 மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் ஃபெரோஸ் கான் தெரிவித்தார். தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், திமுக தொடர்ந்த வழக்கின் காரண மாக தள்ளிப்போனது. இந்நிலை யில் 2017 நவ.17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் அமல் படுத்தவில்லை எனக்கூறி திமுக சார் பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோல வார்டு மறு வரையறை தொடர்பாக திமுக சார் பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையரான எம்.மாலிக் ஃபெ ரோஸ்கான் ‘இந்து தமிழ்’ நாளிதழி டம் கூறியது: தமிழகத்தில் உள்ள மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஏற்கெனவே 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இத் தனை

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்  செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்  பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது 

அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார். பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய சீருடையை அணிந்து செவிலியர் கள் பணியாற்ற உள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் பெண், ஆண் செவிலியர்களுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள சீருடை கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதிய சீருடைகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியதாவது: தமிழக அரசு மருத்துவ மனைகளில் சேவைகள் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. செவிலியர்களின் சீருடையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற செவிலியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பணிபு ரியும் 13,864 நிரந்தர செவிலியர்கள், 12,600 தற்காலிக செவிலியர்கள் என மொத்தம் 26,464 செவிலியர்கள் பயனடைவார்கள். முதல்நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள், இரண்டாம் நிலை செவிலிய கண்காணிப்பாள

வெளிவர முடியாமல் தவிக்கிறீர்களா?

பொழுதுபோக்கிற்காக பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் நுழைந்துவிட்டு, அதைவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறீர்களா? படிக்க வேண்டிய நேரங்களிலும் மனம், அந்த தளங்களில் ஒரு நிமிடம் உலவிவிட்டு வந்துவிட துடிக் கிறதா? உங்கள் மனதை கட்டுப்படுத்த உதவக்கூடியது http://keepmeout.com/en/ என்ற இணையதளம். இதில் மக்கள் அதிகமாக பொழுதுபோக்கும் இணைய தளத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும், அவை அல்லாமல் உங்கள் படிப்பை தடுக்கும் இணையதள முகவரியையும் கொடுத்து, எவ்வளவு நேரத்திற்கு அந்த இணையப்பக்கம் திறக்காமல் இருக்க வேண்டும் என்பதை கொடுத்து வைக்கலாம். இப்படி கொடுத்து வைப்பதால் நீங்களே விரும்பினாலும் குறிப்பிட்ட அந்த நேரம் வரை சம்பந்தப்பட்ட இணையதளம் திறக்காமல் தடுக்கப்பட்டு விடும். அடம்பிடிக்கும் குழந்தைகள், அடங்க மறுக்கும் இளசுகளை கட்டுப்படுத்துவதற்காக பெற்றோர் பயன்படுத்தும் இந்த இணையதளத்தை கட்டுப்பாடு மிக்க மாணவர்களான நீங்களும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

யூ.பி.எஸ்.சி. என்ஜினீயரிங் சர்வீஸ் எக்ஸாம் அட்மிட்கார்டு பதிவிறக்கம்

யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ஜினீயர்களுக்கான என்ஜினீயரிங் சர்வீஸ் எக்ஸாம் 2019 தேர்வை விரைவில் நடத்த உள்ளது. 581 பணியிடங்களை நிரப்பும் இந்தத் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வினியோகம் தொடங்கி உள்ளது. ஜனவரி 6-ந் தேதி தேர்வு நடக்க உள்ளது. இதுவரை அட்மிட்கார்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனே www.upsc.gov.in இணையதளம் வழியாக அட்மிட் கார்டு பெறலாம்.

ஐ.பி.பீ.எஸ் தேர்வு நுழைவு அட்டை

வங்கிப் பணியாளர் தேர்வு அமைப்பான ஐ.பி.பீ.எஸ்., புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான 8-வது தேர்வை சமீபத்தில் அறிவித்திருந்தது. 1599 பணிகளுக்கான இந்தத் தேர்வு முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளில் நடக்க உள்ளது. முதல்நிலைத் தேர்வு வருகிற 29,30-ந் தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்வு நுழைவு அட்டை (அட்மிட் கார்டு) கடந்த வாரம் முதல் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப் படுகிறது. இதுவரை அட்மிட் கார்டு பெறாதவர்கள் இணையதளம் (www.ibps.in) சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது ‘அட்மிஷன்’ காலம்

தனியார் பள்ளிகளில் ஜனவரி முதலே எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் முதலாம் வகுப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். பிரபலமான பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், இதற்காக ஏற்கனவே தயாராகிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மற்றும் ஆதார் அட்டை போன்றவை கட்டாயமாக கேட்கப்படுவதால், இதுவரை சான்றிதழ் ஏதேனும் இல்லாதிருப்பவர்கள், இந்த அரையாண்டு விடுமுறை காலத்திலேயே விண்ணப்பித்துவிடலாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி வந்து ஆதார் பதிவு செய்யும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எய்ம்ஸ் மையத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

நமது நாட்டின் பிரபலமான மருத்துவ கல்வி ஆராய்ச்சி மையமான எய்ம்ஸ் மையத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சேர நீட் தேர்வு எழுத வேண்டியதில்லை. அவர்கள் நடத்தும் தனி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ்-2 படிப்பை அறிவியல் பிரிவில் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் www.aiimsexams.org இணையதளம் வழியாக எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஜனவரி 3-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வருகிற மே மாதம் 25,26-ந் தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ..

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர 2019-ம் காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை படிப்புகள், கல்வியியல் படிப்புகள், டிப்ளமோ-சான்றிதழ் படிப்புகள் படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை வருகிற ஜனவரி 2-ந் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி 31-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்காக சென்னை பல்கலைக்கழகம், 23 கல்லூரிகளில் கற்றல் உதவி மையங்களை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்தியாவில் 2032-ல் ஒலிம்பிக் போட்டி?

இந்தியாவில் 2032-ல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் தாங்கள் மிகத் தீவிரமாக இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் (ஐ.ஓ.ஏ.) நரீந்தர் பத்ரா கூறுகிறார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான விருப்பத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் தெரிவித்துள்ள ஐ.ஓ.ஏ., இவ்விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்கிடம், 2032 ஒலிம்பிக் போட்டியை நம் நாடு நடத்த விரும்பும் விஷயத்தைத் தெரிவித்தார், பத்ரா. அம்முயற்சிக்கு தாமஸ் பாக்கும் வரவேற்புத் தெரிவித்தார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் விருப்பத்தைத் தெரிவிக்கும் முறைப்படியான விண்ணப்பமும் ஒலிம்பிக் கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஐ.ஓ.ஏ. பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, ஒலிம்பிக் கமிட்டியின், போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பக் குழுவைச் சந்தித்தார். ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் போட்டியை நடத்த விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான இணை இயக்குநர் ஜாக்குலின் பாரட் தலைமையிலானது அக்குழு. இந்த மாத தொடக்க

ரூ.800 கோடியில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜனவரியில் விண்ணில் செலுத்த திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

‘ரூ.800 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இதன் மூலம் நடந்த ஆய்வில் சந்திரனில் தண்ணீர் இருப்பதை இந்தியா கண்டுப் பிடித்தது. தொடர்ந்து சந்திரனில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி இஸ்ரோ தயாரித்த சந்திரயான்-2 விண்கலத்தை ஜனவரி மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தற்போது இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தும் வகையில் ‘தெற்காசிய செயற்கைகோள்’ ஆகியவை இதில் அடங்கும். ஸ்மார்ட் சிட்டி, தொலைநோக்கு திட்டம் கையாளும் அமைச்சகங்கள் உள்பட பல்வேறு துறை அமைச்சகங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முன்னணி நாடு என்ற நிலையை

ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று கூடுகிறது ஏ.சி., சிமெண்டு, டயர் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு 99 சதவீத பொருட்கள், 18 சதவீத வரம்புக்குள் வருமா?

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. அதில், ஏ.சி., சிமெண்டு, டயர், சில எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றின் மீதான வரியை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள். இதில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரே

ஜிப்மரில் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு இன்று முதல் இணையத்தில் ஒளிபரப்பு

இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் சுவாமிநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (டிச.21) காலை மருத்துவ மேற்படிப்பு (DM, MCh) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இது முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கலந்தாய்வு வெளிப்படை தன்மையாக நடப்பது தெரிய வரும். கலந்தாய்வில் பெற்றோருக்கு அனுமதியில்லை. பெற்றோர் வீட்டில் இருந்தே இந்த கலந்தாய்வை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம். மருத்துவக் கலந்தாய்வு இந்திய அளவில் அரசு மருத்துவ நிறுவனத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்வது இதுவே முதல்முறை. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவக் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குரூப்-2 முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- குரூப்-2 பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாட்களில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் அந்த விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக்கருதி அவர்களுடைய விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முதல்நிலை எழுத்து தேர்வுக்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு கட்டணம் ரூ.150-ஐ அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவித்துள்ளவாறு அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அவ

பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில் தங்கம் வென்றதன் மூலம் சிந்துவுக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9-வது இடத்தில் நீடிக்கிறார். தாய் ஜூ யிங் (சீனதைபே) முதலிடத்திலும், நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 2-வது இடத்திலும் உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 8-வது இடமும், சமீர் வர்மா 2 இடங்கள் உயர்ந்து 12-வது இடமும் வகிக்கிறார்கள்.

கீழ் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு

கீழ் கோர்ட்டுகளில் நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. அகில இந்திய நீதித்துறை பணிகள் முறையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் 9 ஐகோர்ட்டுகள் இதை ஏற்கவில்லை. 8 ஐகோர்ட்டுகள், அந்த திட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என்று கேட்டன. இதையடுத்து அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது மத்திய திட்ட கமிஷனுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பு, கீழ் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பு கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * கீழ் கோர்ட்டு நீதிபதிகள், இந்திய சட்ட சேவை (மத்திய, மாநில அரசுகள்), அரசு வக்கீல்கள், சட்ட ஆலோசகர்கள், சட்ட வரைவாளர்கள் பதவிகளுக்கு அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும். அந்தப் பொறுப்பை யு.பி.எஸ்.சி. என்னும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். * இந்த நடவடிக்கையால் இளம் மற்றும் பிரகாசமான சட்ட பட்டதாரிகளை நீதித்துறை பணிக்கு கொண்டு வர முடியும். ஆட்சி அமைப்பில் பொறுப்புண

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு பெற்றனர். மனிதநேய மையம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வும், தொடர்ந்து முதன்மை தேர்வும், அதன் பிறகு நேர்முகத்தேர்வும் நடக்கிறது. இந்த ஆண்டு 874 பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வில் கலந்துகொண்டனர். கடந்த செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளித்தது. அந்த பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மிக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 10 மாணவர்கள், 24 மாணவிகள் என 34 பேர் தேர்ச்சி பெற்றனர். நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி இந்த முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அன

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன. ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இட

மதுரை ஆவின் தலைவரான 5 மணி நேரத்தில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா அதிமுகவிலிருந்து திடீர் நீக்கம் கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்ததின் பின்னணி

மதுரை ஆவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மணி நேரத் தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பலரும் வாழ்த்துத் தெரிவித்த நிலையில் திடீரென நீக்கப்பட்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர். மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள 1,070 கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஆவின் ஒன்றியம் மதுரையில் உள் ளது. இந்த ஆவின் நிர்வாகத்துக்கான தேர்தல் படிப்படியாக நடந்தது. ஆவின் தலைவராக இருந்த தங்கம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். மீதி 15 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிச.15-ல் நடந்தது. இதில் துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 15 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மதுரை ஆவினில் நேற்று காலை 10 மணிக்கு நடந்த தேர்தலில் தலை வர் பதவிக்கு ஓ,ராஜா, துணைத் தலைவர் பதவிக்கு தங்கம் ஆகி யோர் மட்டுமே மனுத்தாக்கல் செய்த னர். இதையடுத்து 2 பேரும் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கா

அடுத்த ஆண்டு 32 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தகவல்

அடுத்த ஆண்டு 32 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் கூறினார். ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவன் விண் வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்பு அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றி கரமாக குறித்த புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள் ளது. இது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு கிடைத்த வெற்றி. அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது, 35 நாளில் விண்ணில் செலுத்தப்பட் டுள்ள 3-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். அதி லுள்ள சோலார் பேனல்கள் விரிந்து செயல்படத் தொடங்கியுள்ளன. செயற்கைக்கோளின் சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் பணி வியாழக்கிழமை (இன்று) காலை மேற்கொள்ளப்படும். இந்த செயற் கைகோளிலும், அதை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி ராக்கெட் டிலும் கூடுதல் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டன. தற்போதைய வெற்றியானது இஸ்ரோவுக

‘போக்சோ’ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி பழனியை அடுத்த கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற இந்த குழுவினர், மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என விசாரித்தனர். அப்போது, அதே பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றும் பழனி முல்லைநகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது 45) என்பவர் தங்களிடம் ஆபாசமாக பேசுவதாக மாணவிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை தயாரித்து பழனி சப்-கோர்ட்டில் சமர்ப்பித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற போலீசார், ஸ்டீபன்ராஜிடமும், மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ஸ்டீபன்ராஜ், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர

அண்ணா பல்கலைக்கழகத்தில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேள்வித்தாள் வெளியாக பல்கலைக்கழக ஊழியரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எம்.வெங்கடேசன், சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசில் கடந்த 7-ந் தேதி புகார் கொடுத்தார். அதில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 3-ந் தேதி கணக்கு பாடத்தில் நடந்த தேர்வு தொடர்பான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி விட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோசடி சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின் முடிவில், சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 வாலிபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் சுரேஷ்குமார் என்ஜினீயரிங் படித்துள்ளார். ஹரிகிருஷ்ணன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். ஆனால் கணக்கு பாடத

கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேறியது ‘குழந்தை பெற்றுத்தர பணம் கொடுத்து ஒருவரை அமர்த்த முடியாது’

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேறியது. இதன்படி, குழந்தை பெற்றுத்தர பணம் கொடுத்து ஒருவரை வாடகைத்தாயாக அமர்த்த முடியாது. ரபேல் போர் விமான விவகாரம், மேகதாது அணை பிரச்சினை உள்ளிட்டவற்றில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த அமளிக்கு மத்தியில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பி.மகாதேவ் (பிஜூ ஜனதாதளம்), காக்கோலி கோஷ் தஸ்திதார் (திரிணாமுல் காங்கிரஸ்), நிஷிகந்த் துபே (பாரதீய ஜனதா), என்.கே.பிரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி) ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறினார்கள். விவாதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதில் அளித்துப்பேசினார். அப்போது அவர், “அமளிக்கு மத்தியில் இந்த மசோதா மீது தரமான விவாதம் நடந்தது. இது உறுப்பினர்களின் அக்கறையை காட்டுகிறது. இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தை பாதுகாக்கிறது. வாடகைத்தாய் முறையை வியாபார ரீதியில் செய்துகொள்ள முடியாது. இந்த மச

விமானப்படையை மேம்படுத்த ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி-எப் 11’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்

விமானப்படையை மேம்படுத்த ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோளை சுமந்துகொண்டு ‘ஜி.எஸ்.எல்.வி- எப்11’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விமானப்படையை மேம்படுத்த உதவும் வகையில் ‘ஜி-சாட் 7ஏ’ என்ற செயற்கைகோளை சிறப்பாக உருவாக்கியது. இது 39-வது தகவல் தொடர்பு செயற்கை கோள் ஆகும். இந்த செயற்கை கோள், 2,250 கிலோ எடை கொண்டதாகும். இது பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கி.மீ. தொலைவிலும், குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும் சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 நவீன ரக கேமராக்கள், தகவல்களை சேகரிப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடைய ஆயுள் காலம் 8 ஆண்டுகளாகும். பயன் என்ன? இந்த செயற்கை கோள், தரையில் உள்ள ரேடார் நிலையங்கள், விமானப்படை தளங்கள், வான் ஆபத்து எச்சரிக்கை மற்றும் போர் விமானம் ஆகியவற்றுடன் விமானப்படை தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள பயன்படும். மேலும் விமானப்படையின் நெட்வொர்க் மையப்படுத்தப

பொதுமக்களுக்கு இடையூறாக தமிழகம் முழுவதும் ‘பேனர்கள்’ வைக்க தடை ஐகோர்ட்டு உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறாக தமிழகம் முழுவதும் சாலைகளிலும், சாலையோரத்திலும் பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் விதிகளை மீறி சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர் வைப்பதை தடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்ட போது, சட்டவிரோதமாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. சென்னை பசுமைச்சாலையில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகள் வீட்டிற்கு முன்பும் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டன. இதேபோல், கடந்த 16-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்த போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரது புகைப்படத்துடன் ஏராளமான பேனர்களை வைத்தனர். கடந்த 12-ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனி பகுதியில் அனுமதி இன்றி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. இவற்றை எல்லாம் குறிப்பிட்டு சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி கூடுதல் மனுக்களை தாக்கல் செய்தார்.

போட்டி நடத்தி சுகாதார விழிப்புணர்வு: அரசு பள்ளிகளில் செயல்படுத்த திட்டம்

மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், தங்களுக்கு தனிமரியாதை கிடைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென, பள்ளிகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும், காலை நடைபெறும் வழிபாட்டு கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் வாயிலாக, மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், மாணவர்கள், மன அளவிலும், உடல் அளவிலும் சுத்தமாக இருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் முன் குளித்து உடலை சுத்த செய்தும், சுத்தமான சீருடை அணிவித்தும், நகத்தையும், தலை முடியையும் சீராக கத்தரித்து அழகுபடுத்தி தனிமரியாதை ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'சுகாதாரம், சுற்றுச் சூழல் துாய்மை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், தனி நடிப்பு ஆகிய போட்டிகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல், திறந

காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 196 பேர் விண்ணப்பம்

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, ஓய்வு பெற்ற, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பல்கலை மானிய குழு முன்னாள் துணை தலைவர் தேவராஜ் உட்பட, 196 பேர் விண்ணப்பித்துள்ளனர் காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலை முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் தலைமையில், முன்னாள் துணைவேந்தர்கள் அனந்தகிருஷ்ணன், ஓஜா இடம்பெற்ற தேடல் குழு, டிச., 14 வரை விண்ணப்பங்கள் பெற்றது.இப்பல்கலைக்கு தொடர்புடைய, 38 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஓய்வு பெற்ற, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பல்கலை மானிய குழு முன்னாள் துணை தலைவர் தேவராஜ் உட்பட, 196 பேர் விண்ணப்பித்துள்ளனர் தேடல் குழுவின் வெளிப்படை தன்மை காரணமாக, முதன் முதலில் இணையதளத்தில் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.அதே நேரம், குற்றப் பின்னணி உள்ளோரும், ஆவலுடன் விண்ணப்பித்துள்ளனர் விண்ணப்பித்துள்ள இப்பல்கலையைச் சேர்ந்த சிலருக்கு, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. சிலர், வழக்கில் இருந்து விடுபட்டோராக உள்ளனர் சிலர், நிதி முறைகேடு புகாரில் சிக்கி, விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். இ

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று காலை கார் மூலம் சென்னையில் இருந்து காஞ்சீபுரம் வந்தார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் கோவில் பிரசாதங்கள் வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். அங்கிருந்து காஞ்சீ சங்கரமடம் சென்ற அவர், சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சங்கரமடத்தில் முக்தியடைந்த மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள், ஜெயேந்திரர் ஆகியோரது பிருந்தாவனத்துக்கும் சென்று வணங்கினார். அதைதொடர்ந்து காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன், அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் ம

பொங்கல் முதல் கல்வித் தொலைக்காட்சி: அரசு கேபிளில் காணலாம்

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புதிய பாடத்திட்டம், ரேங்க் முறை ரத்து, எஸ்சிஇஆர்டி யூடியூப்-சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதிய தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார் இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது கல்வித் தொலைக்காட்சி அலைவ

மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு செய்ய சிறப்பு பிரிவு துவக்கம்

தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பிற்காக, தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்புப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதுவரை உறுப்பு குறைபாடுகள் கொண்டோர் மட்டுமே கல்வித்தகுதியை பதிவு செய்யும் வசதி இரு ந்தது.கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமே பதிவு செய்து வந்தனர். அந்த நிலை மாற்றப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கல்வித் தகுதிகளை பதிவு செய்திடும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ்ந்திய தேர்தல் ஆணையத்திற்கு பள்ளி மாணவர்கள் கோரிக்கை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தேர்தலை நடத்த வேண்டுமென, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, மாணவர்கள் சார்பில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ்குமார் தலைமை தாங்கினார்.முதுகலை ஆசிரியர் பொன்பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளியை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனித்தனியாக, தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பினர். கடிதத்தில், 'பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலின் போது, காற்று மாசு படுவதை தடுக்க, தேர்தல் பிரசாரத்தின் போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஒலி, ஒளி மாசு அடைவதை தடுக்க பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரத்திலும் அதிக திறன் கொண்டு ஒலிப்பெருக்கிகள், மின் விளக்குகளை தவிர்க்க வேண்டும். இணைய வழி வாக்களிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள, பிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றை தவிர்த்து, சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.

உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...

எந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான். சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளா தார அஸ்திவாரத்தை வலுவாக்கும். சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும். அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட். அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார். உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா? பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்... உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.