ரூபாய் நோட்டு அச்சகத்தில் சூப்பிரவைசா் வேலை

ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனம் சுருக்கமாக ஸ்பிம்சில் எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசா், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் , ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வுெசய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக சூப்பிரவைசர் பணிக்கு 27 இடங்களும், ஜூ‌னியர் டெக்னீசியன் பணிக்கு 39 இடங்களும், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 18 இடங்களும் உள்ளன.விண்ணப்பதாரர்கள் 9-11-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப் படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, சமூக அறிவியல் டிப்ளமோ மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. பட்டப்படிப்புடன், தட்டச்சு கணினி அறிவு பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஜூ‌னியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 17-11-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bnpdewas.spmcil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Comments