கோவா கப்பல் தளத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணி

கோவா கப்பல்தளம் கோவா கப்பல் தளத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 34 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஐ.டி.ஐ. படித்தவர்கள், பி.பி.ஏ., எம்.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. பட்டப்படிப்பு, முதுநிலை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு தளர்வு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் 8-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www://goashipyard.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Comments