பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணி

பாரத் பெட்ரோலியம் கழக நிறுவனம் சுருக்கமாக பி.பி.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.bharatpetroleum.com/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 14-10-2018-ந் தேதியாகும்.

Comments