இர்கான் நிறுவனத்தில் என்ஜினீயர், மேனேஜர் உள்ளிட்ட பணி

மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் கட்டுமான அமைப்பு இர்கான் எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர், மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பி.இ., பி.டெக் மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் நவம்பர் 9-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். நவம்பர் 14 முதல் 28-ந் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.ircon.org என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

Comments