எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணி

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் மற்றும் சீனியர் ரெசிடென்ட் போன்ற பணியிடங்களுக்கு 478 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம், சுருக்கமாக எய்ம்ஸ் எனப்படுகிறது. தற்போது இந்த மருத்துவ மையத்தின் பல்வேறு கிளைகளில் உதவி பேராசிரியர், சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது. ராய்ப்பூர் எய்ம்ஸ் கிளையில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு 71 இடங்களும், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 183 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல் போபால் எய்ம்ஸ் கிளையில் 121 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மேலும் ஜோத்பூர் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்..ராய்ப்பூர் கிளையில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். நேர் காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வரும் 30,31-ந் தேதிகளில் இதற்கான நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு டி.டி. எடுத்து, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நடைபெறுகிறது.இதே மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 183 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு பணியிடங்கள் உள்ள மருத்துவ பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு, பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 3-11-2018-ந் தேதி கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.aiimsraipur.edu.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.ஜோத்பூர் எய்ம்ஸ் கிளையில் குரூப்- ஏ பிரிவின் கீழ் வரும் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அனஸ்திசியாலஜி, அனட்டாமி, பயோ கெமிஸ்ட்ரி, கார்டியாலஜி, ஜெனரல் சர்ஜரி, நியூரோசர்ஜரி, நியூராலஜி உள்ளிட்ட 36 மருத்துவ பிரிவுகளில் மொத்தம் 103 பணியிடங்கள் உள்ளன. இந்த பிரிவுகளில் முதுநிலை மருத்துவ படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 3 ஆயிரம் கட்டணமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1000 கட்டணமும் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 4-11-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.aiimsraipur.edu.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.போபால் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர் பணிக்கு 41 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 29 பேரும், இணை பேராசிரியர் பணிக்கு 51 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 121 இடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 69 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 33 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 18 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு இடமும் உள்ளது. எத்தனை மருத்துவ பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன? விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டண விவரம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் பற்றிய விவரங்கள் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் www.aiimsbhopal.edu.in என்ற இணைய பக்கத்தை பின் தொடர்ந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Comments