தோட்டக்கலை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்தவர்கள் ஏமாற்றம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 757 தோட்டக்கலை அலுவலர்கள் பணிக்கான அறிவிப்பை கடந்த மே மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. இந்த பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். பின்னர் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தேர்வில் வெற்றி பெற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கு வந்திருந்தனர். அப்போது, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு, ஒரு வருட தோட்டக்கலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு தகுதி கிடையாது என்றும், 2 ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ படிப்பு படித்து இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்திருந்த ஓராண்டு படிப்பு படித்தவர்கள் நேற்று மாலை வரை அங்கு நின்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Comments