பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவன கிளைகள் செயல்படுகிறது. தற்போது பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் டெக்னீசியன் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 320 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 32 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த ஓராண்டு கால பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் DGM/HR, BHARAT HEAVY ELECTRICALS LIMITED, ELECTRONICS DIVISION, MYSURU ROAD, BENGALURU 560026 என்ற முகவரிக்கு அக்டோபர் 31-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்யவும், முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.bheledn.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments