தமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.

Comments