அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்

அணுசக்தி நிறுவனத்தில் அலுவலக பணியிடங்களுக்கு 181 பேரும், பயிற்சிப் பணிகளுக்கு 90 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஸ்டைபென்டியரி டிரெயினி பணிக்கு 122 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆபரேட்டர் பணிக்கு 56 பேரும், மெயின்டனர் பணிக்கு 66 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெயின்டனர் பணியில் பிரிவு வாரியாக பிட்டர் - 21, எலக்ட்ரீசியன்- 16, டர்னர் - 6, எலக்ட்ரானிக்ஸ்-21, வெல்டர் -2 இடங்கள் உள்ளன. இந்த பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி உதவி ஸ்டெனோகிராபர் (கிரேடு1), நர்ஸ், டெக்னீசியன் பணி போன்றவற்றுக்கு 59 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பணி தொடர்பான டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான முழுமையான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான விண்ணப்பம் 4-10-2018 அன்று இணையதளத்தில் திறக்கும். ஏற்கனவே 20-10-2018-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 25-10-2018-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பயிற்சிப் பணிகள் இதே நிறுவனத்தின் மும்பை கிளையில் பயிற்சிப் பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டர், ஏ.சி. மெக்கானிக், கார்பெண்டர், பிளம்பர், வயர்மேன், மெஷினிஸ்ட், பெயிண்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர் உள்ளிட்ட பிரிவில் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10-10-2018-ந்் தேதியில் 16 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் http://apprenticeship.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, மும்பை என்.பி.சி.ஐ.எல். கிளை முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் 10-10-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.npcil.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Comments