ஒளிபரப்பு பொறியியல் நிறுவனமான பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தில் தற்போது மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணி

பி.இ.சி.ஐ.எல்.பணி ஒளிபரப்பு பொறியியல் நிறுவனமான பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தில் தற்போது மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு படித்தவர்களும், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணத்திற்கு டி.டி. எடுத்து, தேவையான விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 12-11-2018-ந் தேதியாகும்.

Comments