தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகள் செயல்படாது: தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந்தேதி(திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக 5-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி அன்று பணிநாள் ஆகும். இந்த உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மகிழ்ச்சி நவம்பர் 4-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை), நவம்பர் 5-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறையுடன் கூடுதலாக அரசு விடுமுறை கிடைத்திருப்பதால், சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

Comments