You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: October 2018

Tuesday, October 30, 2018

சிக்கலில் ‘சர்கார்’ படம்

விஜய் நடித்து வெளிவந்த கத்தி படம் திருட்டு கதை என்று சர்ச்சைகள் வந்தன. அதேபோல் சர்கார் படமும் பிரச்சினையில் சிக்கி உள்ளது. இந்த படத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையையும் தற்கால அரசியலையும் கருவாக வைத்து இந்த படத்தை எடுத்து இருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் தெளிவுபடுத்தி உள்ளார். கோபுரங்கள் சாய்வதில்லை படமும் பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படமும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது. எனவே சின்ன வீடு படம் திருட்டுக்கதையா? என்றும் கேள்வி விடுத்தார். இந்த பிரச்சினையில் எழுத்தாளரும் சர்கார் படத்தின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் கூறும்போது, “சிவாஜி கணேசன் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டதை கருவாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. 42 நாட்கள் ஓட்டலில் தங்கி ஒவ்வொரு காட்சியாக உருவாக்கினோம். கடந்த 2 வருடங்களில் நடந்த அரசியல் சம்பவங்கள் படத்தில் இருக்கும். இது திருட்டுக் கதை அல்ல” என்றார். சர்கார் படம் மீதான வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடக்க உள்ள நிலையில் தீர்ப்பு பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்

“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” என்ற தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வழியாக தற்போது வெளியாகியுள்ளது.

நிர்மலா தேவி கைது

கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

மாமனார் வீட்டில்...

அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

சென்னைக்கு பணிமாற்றம்

நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

மீண்டும் சந்திப்பு

அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

பலருடன் பழக்கம்

அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

முருகனை சந்தித்தது எப்போது?

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பறிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் என்னை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.

கல்லூரி மாணவிகள்

நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

புத்தாக்கப் பயிற்சி

இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

இயக்குனருடன் அறிமுகம்

அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ்.

அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். 


தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகள் செயல்படாது: தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந்தேதி(திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக 5-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி அன்று பணிநாள் ஆகும். இந்த உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மகிழ்ச்சி நவம்பர் 4-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை), நவம்பர் 5-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறையுடன் கூடுதலாக அரசு விடுமுறை கிடைத்திருப்பதால், சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

Sunday, October 28, 2018

‘விண்ணப்ப எண்ணை வைத்தே நடவடிக்கையை அறியலாம்’ இணையவழி பட்டா மாறுதல் படிவத்துக்கு ஒப்புகை சீட்டு முறை புதிய நடைமுறை நாளை முதல் அமல்

இணையவழி பட்டா மாறுதல் படிவத்துக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்ட விண்ணப்ப எண்ணை வைத்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று அறிய முடியும். இதுகுறித்து தமிழக அரசு பத்திர பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பட்டா மாறுதல் படிவம் தமிழக அரசின் பத்திர பதிவு துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ‘ஸ்டார் 2.0’ எனும் திட்டம் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா மாறுதல் படிவம் (படிவம் 6) அனுப்பும் வசதி கணினி மயமாக்கப்பட்டு, ஆவண பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் படிவத்தை இணையவழி வருவாய்த்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி, அதன் ஒப்புகைச்சீட்டு எண்ணுடன் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த வசதி செய்து தந்தபோதும், மீண்டும் இதே சொத்துக்கு பொது சேவை மையத்தில் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பங்கள் ஆவணதாரர்களால் அனுப்பப்படுகின்றன. இதனால் ஒரே சொத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறும் நிலை உருவாகிறது. ஒப்புகை சீட்டு வசதி இதனைத் தவிர்க்கும் விதமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஒப்புகைச் சீட்டானது, அசல் ஆவணம் திரும்பப் பெறும்போது சார்பதிவாளரால் கையொப்பமிட்டு வழங்கப்படும். ஒப்புகைச் சீட்டில் வருவாய்த்துறையால் அளிக்கப்பட்ட விண்ணப்ப எண் அச்சிடப்பட்டிருக்கும். http://www.ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘ Kn-ow your ap-p-l-i-c-at-i-on status ’ என்பதில் இந்த விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தோ, செல்போனில் AM-MA ese-rv-i-ce of la-nd re-c-o-rds என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, இதில் விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தோ மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ளலாம். அசல் ஆவணம் பதிவுப்பணிகள் முடிவடைந்து அசல் ஆவணம் திரும்ப வழங்கப்படும் தேதி எதுவென்று, பத்திரப்பதிவின் போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அன்றைய தேதியில் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் போது பட்டா மாறுதல் படிவம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டை தவறாமல் பொதுமக்கள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும். தற்போது நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு ஆவணப்பதிவின்போது ஆவணதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டா மாறுதல் படிவங்கள், சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வாரந்தோறும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிடையாக வழங்கப்பட்டுவரும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். உட்பிரிவு கட்டணம் தேவையில்லை ஆவணப்பதிவின் போது உட்பிரிவு தேவைப்படும் இனங்களுக்கு உட்பிரிவுக் கட்டணம் பதிவுத்துறையால் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்கள் இணையவழி பட்டா மாறுதல் படிவத்துடன் வருவாய்த்துறைக்கு அனுப்பப்படுகிறது. ஆகவே, தனியாக உட்பிரிவுக் கட்டணம் வருவாய்த்துறையில் செலுத்த தேவையில்லை. பொதுமக்கள் யாரும் ஆவணப்பதிவு முடிந்தவுடன் தனியாக பட்டா மாறுதல் படிவங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறைக்கு அனுப்ப தேவையில்லை. பட்டா மாறுதல் தொடர்பாக புகார் இருந்தால் 1800 425 1333 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்த புதிய நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, October 27, 2018

10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டி “சாதனை படைப்பேன் என்று நினைத்ததில்லை” விராட் கோலி பேட்டி

ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். கோலி பேட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சில தினங்களுக்கு முன்பு, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை விட 54 இன்னிங்சுக்கு முன்னதாகவே இந்த மைல்கல்லை கடந்த 29 வயதான விராட் கோலி இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எனது நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். 10 ஆண்டுகளாக தேசத்திற்காக விளையாடிய பிறகும் கூட இங்கு எதையும் நான் நிலைநாட்டிவிட்டதாக நினைக்கவில்லை. கிரிக்கெட்டில் எதுவும் சுலபமல்ல. கடும் போட்டி நிலவும் சர்வதேச போட்டியில் இன்னும் ஒவ்வொரு ரன்னுக்காகவும் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. எப்போதும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். ஒரு ஓவரில் 6 பந்திலும் ‘டைவ்’ அடிக்க வேண்டும் என்றால், அணிக்காக அதையும் செய்வேன். இது எனது கடமை. அதற்காகத் தான் நான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். இது எனது பணியின் ஒரு அங்கம். அணிக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தபடி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை தயார்படுத்திக் கொண்டு செயல்படுவதால், என்னால் மற்றவர்களை காட்டிலும் அதிக ரன்கள் குவிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட்டிங்கில் அணிக்கு பங்களிப்பு அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 10 ஆயிரம் ரன்கள் சாதனை எனக்கு பெரிதல்ல, நான் நேசிக்கும் ஒரு விளையாட்டில் 10 ஆண்டுகள் ஆடுவது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதே போல் தொடர்ந்து விளையாட வேண்டும். அது தான் எனக்கு முக்கியம். இவ்வளவு காலம் ஆடியது உற்சாகம் தருகிறது. மேலும் பல ஆண்டுகள் விளையாட முடியும் என்று நம்புகிறேன். ஒரு நாள் கிரிக்கெட்டில் இப்படியொரு சாதனையை நிகழ்த்துவேன் அல்லது கிரிக்கெட்டில் உயர்ந்த நிலையை எட்டுவேன் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது மட்டுமே கனவாக இருந்தது. இது போன்ற தருணங்கள் எனது வாழ்வில் வரும் என்று கற்பனை கூட செய்ததில்லை. 10 ஆயிரம் ரன்களை துரிதமாக எட்டியதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இதற்காக கடவுளுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். இவ்வாறு கோலி கூறினார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாளில் மேல்முறையீடு செய்யாவிட்டால் ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அறிவிப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், 30 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ப.தனபால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மற்றொரு நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தகுதி நீக்கம் செல்லும் என்று இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பு கூறி இருந்தனர். தீர்ப்பு மாறுபட்டதாக இருந்ததால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறிய அவர், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடையையும் நீக்கினார். தலைமை தேர்தல் கமிஷனர் பதில் இந்த தீர்ப்பை எதிர்த்து 18 பேர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யாவிட்டால் 6 மாதங்களுக்குள் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் எப்போது நடத்த வாய்ப்பு இருக்கிறது? என்பது பற்றி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத்திடம் ‘தந்தி டி.வி.’ சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ஓ.பி.ராவத் கூறியதாவது:- 30 நாள் அவகாசம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதை படித்துப் பார்த்தோம். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதுவரை நாங்கள் காத்து இருப்போம். 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்குவோம். 18 தொகுதிகளும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜனவரிக்குள் இடைத்தேர்தல் ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ஓ.பி.ராவத் கூறினார். மீண்டும் போட்டியிடலாம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் அந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிடலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓ.பி.ராவத் பதில் அளிக்கையில், “18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. போட்டியிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை” என்றார்.

ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடைநீக்கம் துணைவேந்தர் நடவடிக்கை

நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து துணைவேந்தர் பாஸ்கர் உத்தரவிட்டார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறை மூத்த பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜூ. இவர், ஏற்கனவே அந்த துறை தலைவராக பணியாற்றினார். கல்லூரி வளர்ச்சி குழு தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பில் ஒரு செல்போன் உரையாடல் அடங்கிய ஆடியோ சி.டி. மற்றும் புகார் மனு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தர் பாஸ்கர் உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அந்த குழுவினர், பேராசிரியர் கோவிந்தராஜூ மற்றும் அந்த ஆராய்ச்சி மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் அந்த குழுவினர், துணைவேந்தர் பாஸ்கரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறும்போது, ‘பல்கலைக்கழக தகவல் தொடர்பியல் துறையை சேர்ந்த பேராசிரியர் கோவிந்தராஜூ மீதான பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக உயர்மட்ட குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் கோவிந்தராஜூவை பணி இடைநீக்கம் செய்துள்ளேன். மேலும் இந்த புகார் மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்துகிறது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் கோவிந்தராஜூ இன்னும் 1½ ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்’ ‘என்னையும், உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்

என்னையும், உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றும், ஆண்டவன் நமக்கு துணை இருப்பான் என்றும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை அரசியல் கட்சியை தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையை விமர்சனம் செய்து தி.மு.க. நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டது. ரஜினிகாந்தின் கேள்விகளுக்கு ரசிகர் ஒருவர் பதில் சொல்வது போல அந்த கட்டுரை அமைந்திருந்தது. தி.மு.க.வின் இந்த மறைமுக சாடல் ரஜினிகாந்தை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் உலுக்கியது. இதற்கிடையே, ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தி.மு.க. அதிகாரபூர்வ நாளிதழில் வந்த கட்டுரை குறித்து நிர்வாகிகள் சிலர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மீண்டும் சேர்ப்பு ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து சமீபத்தில் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்களை மன்றத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். மேலும் விரைவில் தொடங்க உள்ள தனது கட்சிக்கு என்ன பெயர் வைப்பது, கட்சி கொடி உருவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ரஜினிகாந்த் தொடர்ந்து 4 நாட்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இந்த கூட்டத்திற்கு, பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:- பிரிக்க முடியாது என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைவதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் (ரசிகர்கள்) யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

தொழிலாளி காரில் கடத்திக்கொலை: மனைவி கள்ளக்காதலனுடன் கைது பரபரப்பு வாக்கு மூலம்

திருப்பூரில் தொழிலாளியை காரில் கடத்திக்கொலை செய்த மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அழுகிய நிலையில் பிணமாக... திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). இவர் புதுப்பையில் உள்ள இரும்பு பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா (42). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர்களுடைய மகன் நாமக்கல்லில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது இவர்கள் காங்கேயம் களிமேடு பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூலனூர் அருகே நல்லசெல்லிபாளையத்தில் உள்ள மக்காச்சோளக்காட்டில், அழுகிய நிலையில் நிர்வாணமாக ராமு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்தும் மூலனூர் போலீசார் விரைந்து சென்று ராமு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லால் தாக்கப்பட்டு ராமு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூலனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். ராமு கொலை தொடர்பாக அவருடைய மனைவி கவிதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரை மூலனூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், கவிதாவும், அவருடைய கள்ளக்காதலன் தாராபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஹரிதாசும் (41) சேர்ந்து ராமுவை காரில் கடத்தி சென்று மக்காச்சோளக்காட்டில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. கள்ளக்காதல் இது பற்றி கவிதா போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு:- எனது தங்கை தாராபுரத்தில் குடியிருந்து வருகிறாள். அவளை பார்க்க நான் அடிக்கடி தாராபுரம் செல்வேன். அப்போது எனது தங்கையின் வீட்டின் அருகில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ஹரிதாஸ் (41) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம், எங்களுக்கு வீடும், இடமும் வாங்க வேண்டும் என்றும், அதற்காக இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று தெரிவித்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தோம். ஹரிதாசை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே நான் அடிக்கடி தாராபுரம் செல்வேன். இந்த சந்திப்பு எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவ்வப்போது ஹரிதாசை காங்கேயத்தில் உள்ள எனது வீட்டிற்கு வரவழைத்து, இருவரும் தனிமையில் இருப்போம். ஒருநாள் நாங்கள் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை என் கணவர் ராமு பார்த்து விட்டார். அதன்பின்னர் ஹரிதாசுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு அவர் கூறினார். ஆனாலும் நான் கைவிடவில்லை. கணவர் உயிரோடு இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதால், அவரை கொலை செய்வது என திட்டம் தீட்டி, அது குறித்து ஹரிதாசிடம் கூறினேன். இதையடுத்து கடந்த வாரம் நானும், ஹரிதாசும் ஒரு காரில் ராமு வேலை செய்யும் புதுப்பைக்கு சென்றோம். அங்கு வேலை முடிந்து மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ராமுவை காரில் கடத்தினோம். கல்லால் அடித்து கொலை பின்னர் அவரை நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள மக்காச்சோள காட்டிற்குள் அழைத்து சென்றோம். அங்கு வைத்து அவரை இருவரும் கையாலும், கட்டையாலும் தாக்கினோம். இதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து ராமுவின் முகம், தலை ஆகிய பகுதியில் அடித்து கொலைசெய்தோம். பின்னர் இந்த கொலையில் இருந்து தப்பிக்கவும், ராமுவை வேறு யாராவது கொலை செய்து இருப்பார்கள் என்று போலீசாரை நம்ப செய்யவும், ராமு அணிந்து இருந்த ஆடையை களைந்து அவரை நிர்வாணமாக்கினோம். பின்னர் அந்த ஆடையை மக்காச்சோளக்காட்டின் மற்றொரு பகுதியில் வீசி விட்டு நாங்கள் சென்று விட்டோம். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டோம். இவ்வாறு கவிதா போலீசில் வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து கவிதாவையும், அவருடைய கள்ளக்காதலன் ஹரிதாசையும் போலீசார் கைது செய்து தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Wednesday, October 24, 2018

தோட்டக்கலை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்தவர்கள் ஏமாற்றம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 757 தோட்டக்கலை அலுவலர்கள் பணிக்கான அறிவிப்பை கடந்த மே மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. இந்த பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். பின்னர் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தேர்வில் வெற்றி பெற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கு வந்திருந்தனர். அப்போது, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு, ஒரு வருட தோட்டக்கலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு தகுதி கிடையாது என்றும், 2 ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ படிப்பு படித்து இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்திருந்த ஓராண்டு படிப்பு படித்தவர்கள் நேற்று மாலை வரை அங்கு நின்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தமிழக போக்குவரத்து, மின்சாரம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் 3½ லட்சம் பேர் பயன்பெறுவார்கள்

தமிழக போக்குவரத்து, மின்சாரம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தொழிலாளர்கள் இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர் களின் பங்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. அந்த தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். 20 சதவீதம் வரை திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என உள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2017-18-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். மின்சார வாரியம் நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங் கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். உபரி தொகை லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 சதவீதம் வரையிலும் ஒதுக்கக் கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும். வீட்டுவசதி வாரியம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப்போல 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும். சர்க்கரை ஆலைகள் அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் ஒதுக்கக் கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகையோ அல்லது 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகையோ வழங்கப்படும். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ஆயிரம் ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும். அதிகபட்சம் இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 ஆயிரம். அதிகபட்சம் ரூ.16 ஆயிரத்து 800 தொகை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனசாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 22, 2018

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதக்கிடங்ககில் பணி

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதக்கிடங்கு ஒன்று கட்கி என்ற இடத்தில் செயல்படுகிறது. தற்போது இங்கு வேதிப்பொறியாளர், கட்டுமான பொறியாளர், எலக்ட்டிரிக்கல் பொறியாளர், மெக்கானிக்கல் என்ஜினீயர் உள்ளிட்ட பயிற்சிப் பணியிடங் களுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். விரிவான விவரங்களை http://www.afk.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் நாள் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

எக்சிம் வங்கியில் டெபுடி மேனேஜர், மேனேஜர், அட்மின் ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணி

எக்சிம் பேங்க் பணி ஏற்றுமதி, இறக்குமதி வணிக வங்கி சுருக்கமாக எக்சிம் வங்கி எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் டெபுடி மேனேஜர், மேனேஜர், அட்மின் ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணி களுக்கு 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், சி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 10-11-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.eximbankindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஒளிபரப்பு பொறியியல் நிறுவனமான பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தில் தற்போது மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணி

பி.இ.சி.ஐ.எல்.பணி ஒளிபரப்பு பொறியியல் நிறுவனமான பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தில் தற்போது மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு படித்தவர்களும், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணத்திற்கு டி.டி. எடுத்து, தேவையான விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 12-11-2018-ந் தேதியாகும்.

டி.என்.பி.எஸ்.சி. உதவி ஜெயிலர் பணி

டி.என்.பி.எஸ்.சி.பணி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு 30 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-11-2018-ந் தேதியாகும்.

இர்கான் நிறுவனத்தில் என்ஜினீயர், மேனேஜர் உள்ளிட்ட பணி

மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் கட்டுமான அமைப்பு இர்கான் எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர், மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பி.இ., பி.டெக் மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் நவம்பர் 9-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். நவம்பர் 14 முதல் 28-ந் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.ircon.org என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

கோவா கப்பல் தளத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணி

கோவா கப்பல்தளம் கோவா கப்பல் தளத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 34 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஐ.டி.ஐ. படித்தவர்கள், பி.பி.ஏ., எம்.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. பட்டப்படிப்பு, முதுநிலை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு தளர்வு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் 8-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www://goashipyard.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

ரூபாய் நோட்டு அச்சகத்தில் சூப்பிரவைசா் வேலை

ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனம் சுருக்கமாக ஸ்பிம்சில் எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசா், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் , ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வுெசய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக சூப்பிரவைசர் பணிக்கு 27 இடங்களும், ஜூ‌னியர் டெக்னீசியன் பணிக்கு 39 இடங்களும், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 18 இடங்களும் உள்ளன.விண்ணப்பதாரர்கள் 9-11-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப் படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, சமூக அறிவியல் டிப்ளமோ மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. பட்டப்படிப்புடன், தட்டச்சு கணினி அறிவு பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஜூ‌னியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 17-11-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bnpdewas.spmcil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணி

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் மற்றும் சீனியர் ரெசிடென்ட் போன்ற பணியிடங்களுக்கு 478 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம், சுருக்கமாக எய்ம்ஸ் எனப்படுகிறது. தற்போது இந்த மருத்துவ மையத்தின் பல்வேறு கிளைகளில் உதவி பேராசிரியர், சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது. ராய்ப்பூர் எய்ம்ஸ் கிளையில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு 71 இடங்களும், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 183 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல் போபால் எய்ம்ஸ் கிளையில் 121 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மேலும் ஜோத்பூர் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்..ராய்ப்பூர் கிளையில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். நேர் காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வரும் 30,31-ந் தேதிகளில் இதற்கான நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு டி.டி. எடுத்து, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நடைபெறுகிறது.இதே மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 183 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு பணியிடங்கள் உள்ள மருத்துவ பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு, பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 3-11-2018-ந் தேதி கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.aiimsraipur.edu.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.ஜோத்பூர் எய்ம்ஸ் கிளையில் குரூப்- ஏ பிரிவின் கீழ் வரும் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அனஸ்திசியாலஜி, அனட்டாமி, பயோ கெமிஸ்ட்ரி, கார்டியாலஜி, ஜெனரல் சர்ஜரி, நியூரோசர்ஜரி, நியூராலஜி உள்ளிட்ட 36 மருத்துவ பிரிவுகளில் மொத்தம் 103 பணியிடங்கள் உள்ளன. இந்த பிரிவுகளில் முதுநிலை மருத்துவ படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 3 ஆயிரம் கட்டணமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1000 கட்டணமும் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 4-11-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.aiimsraipur.edu.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.போபால் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர் பணிக்கு 41 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 29 பேரும், இணை பேராசிரியர் பணிக்கு 51 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 121 இடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 69 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 33 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 18 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு இடமும் உள்ளது. எத்தனை மருத்துவ பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன? விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டண விவரம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் பற்றிய விவரங்கள் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் www.aiimsbhopal.edu.in என்ற இணைய பக்கத்தை பின் தொடர்ந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணிகள்

பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி காலி பணியிடங்களுக்கு 81 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. சுரங்கத்துறையில் சுரங்க பாதுகாப்பு துணை இயக்குனர் பணியில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 23 பேரும், மைனிங் பிரிவில் 44 பேரும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதுபோல உதவி பொறியாளர், ரெப்ரிஜிரேசன் என்ஜினீயர், கூடுதல் உதவி இயக்குனர், துணை இயக்குனர் சிவில், துணை கட்டிட கலை இயக்குனர் போன்ற பிரிவிலும் பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணிகள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. உதவி என்ஜினீயர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மைனிங், சிவில், ஆர்கிடெக்ட் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளும், குறிப்பிட்ட பணி அனுபவமும் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 1-11-2018 -ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

நிலக்கரி நிறுவனத்தில் 760 பயிற்சிப் பணியிடங்கள்

மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிட்டட். மத்திய மண்டலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 760 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியான காலியிட விவரம் : பிட்டர் - 145 இடங்கள், வெல்டர்- 75, எலக்ட்ரீசியன் - 180, மெக்கானிக் ஆட்டோ மொபைல் எலக்ட்ரானிக்ஸ் -75, மெக்கானிக் - 75, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட் - 100, பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக் - 60, மெஷினிஸ்ட் - 25, டர்னர் - 25 இடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள இந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 15-11-2018-ந் தேதியில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் படித்து அறிந்து கொண்டு ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு 29-10-2018 அன்று தொடங்குகிறது. 15-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள http://www.centralcoalfields.in/ind/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26-ந் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை மைய இயக்குனர் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டதாகவும், 26-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை பெய்ய வேண்டிய சராசரி மழை 89.2 மி.மீ. ஆனால் பெய்த மழை 123.8 மி.மீ. இது 39 சதவீதம் அதிகம். அரியலூர், கோவை, கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. 4 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது. 6 மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது. சென்னையில் பெய்ய வேண்டிய மழை 103.6 மி.மீ. ஆனால் பெய்த மழை 102 மி.மீ. ஆகும். எனவே இயல்பான மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் பெய்ய வேண்டிய மழையை விட 111 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இரு புயல்கள் காரணமாக இங்குள்ள ஈரப்பதத்தை புயல்கள் வடமாநிலங்களுக்கு ஈர்த்துச் சென்றுவிட்டன. அதன் காரணமாக வடகிழக்கு பருவ மழை தொடங்குவது தள்ளிப்போனது. வருகிற 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவாய்ப்பு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் கன மழை வரை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- விருதுநகர் 12 செ.மீ., பேரையூர், நாங்குநேரி தலா 9 செ.மீ., அரண்மனைப்புதூர், பெரிய குளம் தலா 7 செ.மீ., மணிமுத்தாறு, மைலாடி, ஸ்ரீவில்லிபுத்தூர், நாகர்கோவில், அம்பாசமுத்திரம், ராமேசுவரம் தலா 5 செ.மீ., வால்பாறை, பேச்சிப்பாறை, சாத்தான்குளம், சங்கரன்கோவில், பீளமேடு, சித்தம்பட்டி, திருமங்கலம், முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

Sunday, October 21, 2018

இறந்த கணவரின் உயிரணுவில் இரட்டை குழந்தைகள்

இறந்த கணவரின் பாதுகாக்கப்பட்ட உயிரணுவை பயன்படுத்தி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணியின் அபூர்வமான வாழ்வியல் சம்பவம் இது. அவர் பெயர் ஷில்னா. அவருடைய கணவர் சுதாகரன். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் காதலும், பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளை போல வித்தியாசமானதுதான். சுதாகரன் கவிஞர். 23 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதிய கவிதை பத்திரிகையில் பிரசுரமானது. அதை படித்த ஷில்னா இரண்டே வரிகளில், ‘உங்களுடைய கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது’ என்று எழுதி, அந்த கடிதத்தை சுதாகரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதற்கு சுதாகரனும் நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து 5 வருடமாக இருவருக்கு இடையேயும் கடித பரிமாற்றம் நடந்்திருக்கிறது. அதுவே நாளடைவில் நட்பாக மாறி காதலாக கனிந்திருக்கிறது. இரண்டு பேரும் நேரடியாக சந்திக்காமலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு 11 வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள். அந்த காலகட்டத்தில் சுதாகரனுக்கு கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது. ஷில்னாவும் வங்கியில் பணியில் சேர்ந்து அதிகாரியானார். மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் விதி விபத்து ரூபத்தில் விளையாடிவிட்டது. அதுபற்றி ஷில்னா சொல் கிறார்...! ‘‘என் கணவர் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன். அவர்கள் கஷ்டப்பட்டு என் கணவரை படிக்க வைத்தார்கள். அவர் திமிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அந்த ஊரில் ‘முதல் கெஜட்டட் ஆபீசர்’ என்ற அந்தஸ்தை பெற்றது என் கணவர்தான்’’ என்கிறார், ஷில்னா. சுதாகரன்-ஷில்னா தம்பதியருக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தையின்மை சிகிச்சை பெறுவதற்காக கண்ணூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து சிகிச்சையை தொடர்ந்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவமுறைப்படியும், டாக்டர்களின் ஆலோசனைப்படியும் சுதாகரனின் உயிரணுவை எடுத்து சிகிச்சைக்காக சேமித்து வைத்திருக்கிறார்கள். அதனை பயன் படுத்தி சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இரண்டு முறை முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் தோல்வியே மிஞ்சியிருக்கிறது. எனினும் தாய்மையடைந்துவிட வேண்டும் என்பதில் ஷில்னா உறுதியோடு இருந்திருக்கிறார். அதற்கு நேர்மாறாக சுதாகரன் உயிரை விபத்து அபகரித்து கொண்டுவிட்டது. அந்த விஷயம் தெரியாமல் கணவருடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராகி இருந்திருக்கிறார். ‘‘கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நாங்கள் இரண்டு பேரும் டாக்டரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தோம். அன்று காலையில் பல் கலைக்கழகத்திற்கு ஒரு வேலை விஷயமாக செல்லவேண்டியிருப்பதாக கூறினார். அங்கு சென்றுவிட்டு நேராக மருத்துவமனைக்கு வந்து விடுவதாக கூறிவிட்டு சென்றார். நானும் அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் நேரத்தை கணக்கிட்டு அங்கு செல்ல எங்கள் ஊரில் இருந்து ரெயில் ஏறினேன். ஏறியதுமே அவருக்கு செல்போன் மூலம் தகவல் சொல்ல முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது என் அப்பா என்னை தொடர்பு கொண்டு அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கிவிடுமாறு கூறினார். நான் காரணம் கேட்டதற்கு, ‘தனக்கு உடல்நிலை சரி இல்லை’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் பதற்றத்துடன் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கினேன். அங்கு என் சித்தப்பா காத்திருந்தார். அவர் என்னை வீட்டுக்கு திருப்பி அழைத்து சென்றுவிட்டார். வீட்டு வாசலில் என் அப்பா நின்று கொண்டிருந்தார்’’ என்கிறார். பல்கலைக்கழகத்துக்கு சென்ற சுதாகரன் விபத்தில் சிக்கி இறந்து போயிருக்கிறார். அந்த விஷயத்தை நேரடியாக சொன்னால் ஷில்னா கடும் மன வேதனைக்கு ஆளாகிவிடுவார் என்று உண்மையை சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள். ஷில்னாவுக்கு சந்தேகம் எழாதவாறு அவருடைய கவனத்தை திசை திருப்பியிருக்கிறார்கள். ‘‘என் அப்பா, ‘எனக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு என்னை அழைத்து செல்’ என்று கூறி காரில் ஏற்றினார். செல்லும் வழியில் எனக்கு வாட்ஸ் ஆப்பில் நிறைய மெசேஜ்கள் வந்தன. அதில் ஒரு மேசேஜில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி இருக்கிறார் என்ற தகவல் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். மறுநாள்தான் எனக்கு நினைவு வந்தது’’ என்கிறார். அப்போதும் சுதாகரனை பற்றி எந்த தகவலையும் குடும்பத்தினர் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். அவரது உடல் வேலை பார்த்த கல்லூரியில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. முழு விவரம் தெரியாமல் ஷில்னா கணவரை பற்றி விசாரித்திருக்கிறார். அப்போதும் ஐ.சி.யூ.வில் இருப்பதாக சொல்லி சமாளித்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்து சுதாகரன் இறந்த தகவலை சொல்லியிருக் கிறார்கள். அதுவரை உடலை பாதுகாத்திருக் கிறார்கள். கணவரின் இறப்பு செய்தி கேட்டு ஷில்னா நிலைகுலைந்து போயிருக்கிறார். உடலை வீட்டுக்கு எடுத்து இறுதி சடங்கை நடத்தி இருக்கிறார்கள். கணவரின் எதிர்பாராத இழப்பில் இருந்து மீண்டு வர, கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஒரே ஆறுதல் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ‘‘என் விருப்பத்தை பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெற்றேன். என் கணவரின் மாமியாரின் சம்மதமும் தேவைப்பட்டது. அவரிடம் சொன்னேன். அவர் என்னை கட்டி அணைத்து அழுதார். என் முடிவுக்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தார். நான்கு முறை பரிசோதனை முயற்சி செய்யும் அளவிற்கு கணவரின் உயிரணுவை சேமித்து வைத்திருந்தோம். இரண்டு முறை முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டதால் கணவரின் உயிரணுவை நானே என் கருப்பையில் சுமக்கும் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினேன். அதற்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்கள். இவ்வளவு நாள் வேலை பார்த்தும் என்னால் அவ்வளவு பணம் சேர்த்துவைக்க முடியவில்லை. அவ்வப்போது சிகிச்சைக்காக பெருமளவு பணத்தை செல வழித்துவிட்டேன். ஆனாலும் என் பெற்றோர் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். டாக்டர் களிடம் என் முடிவை சொன்னேன். அவர்களோ, ‘நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாடகைத்தாய் ஆரோக்கியமாக இருப்பாரா? என்று சொல்லமுடியாது. நீங்களே மீண்டும் ஒருமுறை தாய்மையடைய முயற்சி செய்யலாமே’ என்றார்கள். உடனே நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால் சில சட்டச்சிக்கல்கள் இருந்தது. பொதுவாக ஒருவருடைய உயிரணுவை பயன் படுத்துவதற்கு அவருடைய அனு மதியை பெற வேண்டும். கணவர் உயிரோடு இல்லாததால் அது தொடர்பான சட்ட ஆலோசனைகளை மேற்கொள்ள தொடங்கினேன். அப்போது என் உறவினர்களில் சிலர், ‘நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய். உனக்கு வயதாகி விடவில்லை. இறந்து போன கணவரின் உயிரணுவை கொண்டு குழந்தை பெற்றால் அதனை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்பாகிவிடும். அது உனக்கு பாதகமாகவும் மாறிவிடக்கூடும். நீ தேவையில்லாமல் விஷப்பரீட்சையில் இறங்காதே’ என்றார்கள். நானோ என் கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தேன். அது சார்ந்த சட்டச்சிக்கலுக்கும் சுமுக தீர்வு ஏற்பட்டது. ‘கணவரின் பெற்றோருடைய சம்மதம் பெற்றால் போதும். அதுவே சட்டப்படி போதுமானது’ என்ற முடிவுக்கு வந்தார்கள் டாக்டர்கள். எனக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். கர்ப்பப்பை வலுவாக இருக்கிறதா? என்பதை பரிசோதித்துவிட்டு சிகிச்சையில் இறங்கினார்கள். என் சினை முட்டையையும், கணவரது உயிரணுவையும் சோதனைக் குழாய் மூலம் கருவாக்கி வளர்த்து, என் கருப்பையில் செலுத்தினார்கள். அந்த தருணத்தில் என் கணவர் என்னுள் உயிராகி விட்டார் என்று நினைத்தேன். இரண்டு வாரங்கள் கழித்து கரு வளர்ச்சி அடைகிறதா? என்பது பற்றிய முடிவு தெரியும் என்று சொன்னார்கள். பின்பு பரிசோதனை செய்தபோது கருவில் இரட்டை குழந்தைகள் வளர்வதாகக் கூறினார்கள்’’ என்று மனம் பூரிக்கிறார். ஷில்னா கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு இருக்கிறார். 34 வாரங்களில் சிசு நல்ல வளர்ச்சி நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கணவர் இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக அவருடைய நண்பரின் மனைவி இதே முறையில் குழந்தை பாக்கியம் பெற்றிருந்திருக்கிறார். அந்த நண்பர், சுதாகரனிடம் இரண்டு முறை சோதனைக்குழாய் குழந்தை முயற்சி தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி, ‘உங்களுக்கு மட்டும் அப்பாவாகும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே' என்று வருத்தப்பட்டிருக்கிறார். அப்போது சுதாகரன், ‘நீங்கள் எங்களுக்கு குழந்தை பிறக்காததை நினைத்து கவலைப்பட வேண்டாம். நிச்சயம் எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கும். அந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட வேண்டிய பெயரையும் நான் டைரியில் எழுதியும் வைத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதை நினைவு கூரும் ஷில்னா கணவர் சொன்னபடியே இரட்டை பெண் குழந்தைகளை பெற் றெடுத்துவிட்டேன் என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். ஷில்னாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. தன்னுடைய கணவரே மறு ஜென்மம் எடுத்திருப்பதாக நினைத்து ஷில்னா சந்தோஷமாக குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: “தங்கம் விலை தொடர்ந்து உயரும்” வியாபாரிகள் தகவல்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 900-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தொட்டது. அதனைத்தொடர்ந்தும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.46 உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 37-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 296-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரையில் நேற்று கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 41 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. கடந்த 2 வாரத்தில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்துக்கு எதிராக 40 டாலர் அதிகரித்து உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை கடந்து செல்லும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கேரளாவில் அநேக இடங்களிலும், தமிழகத்தில் சில இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்துள்ளது. இந்தநிலையில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். ஸ்டெல்லா கூறியதாவது:- தென்மேற்கு பருவமழை வருகிற 24 மணி நேரத்தில் (இன்று) நாடு முழுவதும் முடிவடைகிறது. அதன்பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகும். கனமழை பெய்ய வாய்ப்பு வளிமண்டலத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இருக்கிறது. அது மேற்கு நோக்கி நகருவதால், அடுத்த 48 மணி நேரத்துக்கு(2 நாட்கள்) தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று(நேற்று முன்தினம்) தாய்லாந்து வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் நிலவி வந்த காற்றின் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. அது நகர்ந்து, வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில்(2 நாட்களில்) தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், பெரியகுளத்தில் 16 செ.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ., சென்னை விமானநிலையத்தில் 6 செ.மீ., சங்கரன்கோவிலில் 5 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுப்பாளையம், சிதம்பரம், தக்கலையில் தலா 4 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

தெரு விளக்குகளுக்குப் பதிலாக சீனாவில் செயற்கை நிலா

சீனாவில் தெருவிளக்குகள் ஏராள மாகப் பயன்பாட்டில் உள்ளதால் அதிக மின்சாரம் செலவாகிறது. அதற்கான கட்டணமும் அரசுக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண செயற்கையாக நிலாவை உருவாக்க சீன அரசு திட்டமிட்டது. இந்தப் பணியை ‘டியான் பூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி’ என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்நிறுவனம் செயற்கை நிலாவை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சிச்சுவான் பகுதியில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுத் தளத்தில் இருந்து வரும் 2020-ம் ஆண்டில் செயற்கை நிலா ஏவுப்பட உள்ளது. இது உண்மையான நிலாவைப் போலவே வானில் இருந்து ஒளிதரும். ஆனால், 8 மடங்கு அதிக ஒளி தரும். முதல் செயற்கை நிலா திட்டம் நல்லபடி நடந்தால், 2022-ம் ஆண்டுக்குள் மேலும் 2 செயற்கை நிலா ஏவப்படும் என்று இத்திட்டத்தின் தலைவர் வூ சுன்பெங் கூறி னார். இந்த செயற்கை நிலா, உண்மை யான நிலாவைப் போலவே சூரியனில் இருந்து சக்தியைப் பெற்று ஒளி தரும். இது சீன நகரங்களில் தெருவிளக்குகளுக்கு மாற்றாக இருக்கும். உதாரணத்துக்கு செங்குடு நகரில் 50 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இந்த செயற்கை நிலா ஒளிதரும் போது, ஆண்டுக்கு 1.2 பில்லியன் சீன யுவான் (170 மில்லியன் டாலர்) சேமிக்க முடியும். சூரியனின் ஒளியை பூமிக்கு திருப்பி விடும் முயற்சியில் ஈடுபடும் முதல் நாடு சீனா அல்ல. ஏற்கெனவே, 1990-ம் ஆண்டுகளில் ரஷ்ய விஞ்ஞானிகள் மிக பிரம்மாண்ட கண்ணாடிகள் மூலம் சூரிய ஒளியை பூமிக்குத் திருப்பிவிடும் முயற்சியில் ஈடு பட்டது குறிப்பிடத்தக்கது.- ஏஎப்பி

Saturday, October 20, 2018

நவ. 7-ம் தேதி வரை விடுமுறை நாட்களிலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்படும்

வாடிக்கையாளர்கள் பில் தொகையை கட்டுவதற்கு வசதி யாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் நவ. 7-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வாடிக்கை யாளர்களுக்கு ‘புராஜெக்ட் தன லஷ்மி’ என்ற திட்டத்தின்கீழ், பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள், இன்டர்நெட் உள்ளிட்ட சேவை களைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் அக். 18-ம் தேதி முதல் நவ.7-ம் தேதி வரைக்குள் பில் கட்டினால் பில் தொகையில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு பில் கட்டணத்தில் 2 சதவீத தள்ளுபடியும், பில் தொகையை முன்கூட்டியே செலுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு 3 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் இந்த பில் தொகையைக் கட்டுவதற்கு வசதியாக பிஎஸ்என்எல் நிறு வனத்தின் அனைத்து வாடிக்கை யாளர் சேவை மையங்களும் நவ. 7-ம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல் படும் என அந்நிறுவனம் வௌி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு பில் கட்டணத்தில் 2 சதவீத தள்ளுபடியும், பில் தொகையை முன்கூட்டியே செலுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு 3 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்வு சொத்து மதிப்பு ரூ. 440 லட்சம் கோடி 

கடந்த 12 மாதங்களில் இந்தியா விலுள்ள கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை 7300 அதிகரித்து 3.43 லட்சமாக உயர்ந்துள்ளதாக கிரெடிட் சூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வோராண்டும் கிரெடிட் சூயிஸ் சர்வதேச சொத்து அறிக் கையை வெளியிடுகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கை யில் 2018 இதுவரையி்லான கடந்த 12 மாத காலத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தக் காலத்தில் புதிதாக 7300 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்கள். இந்தியக் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 440 லட்சம் கோடி (6 ட்ரில்லியன் டாலர்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தி யாவில் தனிநபர் ஒருவரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5 லட்சமாக உள்ளது. பெண் பணக்காரர்கள் எண்ணிக் கையில் மற்ற நாடுகளைக் காட்டி லும் 18.6 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா முன்னிலையில் உள்ளது. புதிதாகச் சேர்ந்துள்ள இந்தியப் பணக்காரர்களில் 3400 பேர் ரூ. 350 கோடிக்கு மேலான சொத்து களையும், 1500 பேர் ரூ. 700 கோடிக்கு மேலான சொத்துகளை யும் வைத்துள்ளனர். இந்தியப் பணக்காரர்களின் மொத்த சொத்துகளில் 91 சதவீதம் ரியல் எஸ்டேட் போன்ற அசையாச் சொத்துகளாக உள்ளன. கடந்த 12 மாத காலத்தில் இந்த வகை சொத்துக்கள் 4.3 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. 2023-ல் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5.26 லட்சமாகவும், மொத்த சொத்து மதிப்பு ரூ. 645 லட்சம் கோடியாகவும் உயரும் என கிரெடிட் சூயிஸ் கணிப்பும் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் தொடர்ந்து 10-வது ஆண்டாக அமெரிக்கா 98 ட்ரில்லியன் டாலருடன் முத லிடத்தை வகிக்கிறது. சீனா 52 ட்ரில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. -பிடிஐ

‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது ரஜினிகாந்த் தகவல்

‘பேட்ட’ படப்பிடிப்பை திட்டமிட்டதைவிட, 15 நாட்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டோம் என்று ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ‘காலா’ படம் வெளியானதும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஜுதீன் சித்திக், பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்தது. டார்ஜிலிங், டேராடூன், லக்னோ பகுதிகளில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். இறுதிக்கட்ட படப்பிடிப்பை வாரணாசியில் நடத்தி வந்தனர். காசி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். போலீசார் மற்றும் தனியார் பாதுகாவலர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினர். அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ரஜினிகாந்த் நேற்று டுவிட்டரில் தெரிவித்தார். ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. திட்டமிட்டதைவிட 15 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லோருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். டிரெய்லரும் வெளியானது. அதில் அதிரடி தாதாவாகவும் முறுக்கு மீசையில் இளமையாகவும் இருந்தார். அந்த படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர். ’பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘பேட்ட’ தயாராகிறது என்றும் பேசப்பட்டது. படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் வெளியாகலாம் ரஜினிகாந்த் நடித்துள்ள இன்னொரு படமான ‘2.0’ அடுத்த மாதம் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. ‘பேட்ட’ படம் டப்பிங், இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை 21-ம் தேதி தொடங்கும்  வானிலை ஆர்வலர் கணிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 21-ம் தேதி தொடங் கும் என தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளை கணிக்கும் ஆசிரியர் ந.செல்வகுமார் கூறியுள் ளார். அரசுப் பள்ளி கணித ஆசிரிய ரான ந.செல்வகுமார். வானிலை நிகழ்வுகளை தன்னார்வமாக கணித்து ‘நம்ம உழவன்’ என்ற ஸ்மார்ட் கைபேசி செயலி வழி யாக தினமும் வானிலை அறிக்கை வெளியிட்டு வருகிறார். தமிழகத் தில் வடகிழக்கு பருவமழை அக் டோபர் 20 அல்லது 21-ம் தேதி தொடங்கும் என்று கணித்து, கடந்த 10 நாட்களாக கூறி வருகிறார். அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘21-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, நாடு முழுவதும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் தென் மேற்கு பருவமழை விலகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகள் மற்றும் இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் தென்மேற்கு பருவக் காற்று விலகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதன்பிறகு தமிழகம், அதை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பகுதிகள், தெற்கு கர்நாடகத்தின் உட்பகுதி மற்றும் கேரளத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. தற்போது கேரளப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தெற்கு அந்தமான் அருகே காற்று சுழற்சியும் நிலவி வருகிறது. அவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங் களில் கனமழை பெய்யவும் வாய்ப் புள்ளது. சென்னை, புறநகர் பகுதி களில் வானம் பொதுவாக மேகமூட் டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Thursday, October 18, 2018

அதிசுத்தமான காற்றை தரும் ஏர்-ப்யூரிபையர்

இன்றைய நாளில் எண்ணற்ற நபர்கள் மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் ஏராளமான நோய் தாக்குதலுக்கு உள்ளாயினர். வெளிப்புற பகுதிகளில் நிறைந்திருந்த காற்று மாசு இன்று வீடுகள் வரை பரவி வந்து விட்டது. இதன் மூலம் வீட்டிலேயே சுத்தமான, சுகாதாரமான காற்று சுவாசிப்பது என்பது கேள்விக்குறியாகி விட்டது. இதனை போக்கும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் ஏர்-ப்யூரிபையர் என்ற கருவியை வீடுகளில் பயன்படுத்தும் வகையில் தயாரித்து வழங்கி வருகின்றன. இந்த ஏர்-ப்யூரிபையர் என்பது அழகிய வடிவமைப்புடன், எண்ணற்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் வருகின்றன. ஏர்-ப்யூரிபையர் என்பதன் மூலம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நாம் அமரும் இடங்களில் உள்ள காற்று சுத்தப்படுத்தப்பட்டு துர்நாற்றம், கிருமிகள் அற்ற காற்றை சுவாசிக்க முடிகிறது. ஏர்-ப்யூரிபையரில் உள்ள தொழில்நுட்பங்கள் ஏர்-ப்யூரிபையர் என்பது மேம்பட்ட வடிகட்டி அமைப்பை உட்பொருத்தி உள்ள அமைப்பு. இந்த பில்டர் என்பது ஹெபா பில்டர் என கூறப்படுகிறது. ஹெபா பில்டர் மட்டுமின்றி பில்டர் அல்லாத எலக்ட்ரோஸ்பாடிக் மற்றும் ஓசோன் ஜெனரேட்டர் போன்ற தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஏர் பில்டர்களும் வருகின்றன. ஹெபா பில்டர் என்பது 1940-களில் கண்டறியப்பட்டது. 99.97% அளவிற்கு காற்றை தூய்மையாக்கி தரும். மருத்துவகை அறைகளை தூய்மையான காற்று நிறைந்தவாறு செய்ய அறிமுகமான ஹெபா பில்டர் தூசு, கிருமி, பூஞ்சை, நாற்றம் போன்ற நுண்ணிய அளவுள்ள மாசுக்களையும் வடிகட்டி தரும் சிறப்பு தன்மை கொண்டது. எலக்ட்ரோஸ்டாடிக் வசதி ஏர்-ப்யூரிபையரில் எலக்ட்ரோஸ்டாடிக் வசதி என்பது ஹெபா பில்டரை போன்றதுதான். ஆனால் இதற்கு பில்டர் பயன்படுத்தப்படுவதில்லை. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் உள்வரும் காற்றில் உள்ள மாசுக்களை உள் இழுத்து சேகரித்து வைத்து கொள்ளும். இதனை சுலபமாக, குறைவான நேரத்தில் பராமரித்து பயன்படுத்திடலாம். ஓசோன் ஜெனரேட்டர்ஸ் எர்-ப்யூரிபையர் பெரிய அமைப்பாக செயல்படுத்தப்படும்போது இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வீடுகளுக்கு ஏற்ற வகை அல்ல. வணிக நோக்கில் பெரிய அளவிலான காற்று சுத்திகரிப்புக்கு இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.மேற்கூறிய மூன்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தில் மேம்பட்டது என கூறப்படுகிறது. ஹெபா பில்டர் அமைப்பு மட்டுமே இன்றைய நாளில் வெளிவரும் எண்ணற்ற ஏர்-ப்யூரிபையரில் ஹெபா பில்டர்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹெபா பில்டர் தவிர்த்து மேலும் சில ஆய்வுகள் உயிரூட்டப்பட்ட கார்பன், ஹிக்ஷி லைட் போன்றவை பயன்படுத்தவும் முயற்சிகள் செய்கின்றன. மாறுபட்ட வடிவமைப்புடன் கூடிய ஏர்-ப்யூரிபையர் உருளை அமைப்பிலும், சிறிய தட்டை அமைப்பிலும், நீண்ட விளக்கு அமைப்பிலும் அழகுற ஏர்-ப்யூரிபையர் வருகின்றன. இதில் நீண்ட வெற்றிட அமைப்பான ஏர்-ப்யூரிபையர் கீழ்புறம் பில்டர் மற்றும் இயக்க ஸ்விட்ச்களும், மேற்புற நீள்செவ்வக அமைப்பு என்பது சுத்திகரிக்கப்பட்ட காற்று சுழற்சி முறையில் வெளிவரும் வகையில் உள்ளன. தானாகவே சென்னர் அமைப்புடன் உட்புகும் காற்றின் தன்மை மற்றும் மாசுக்களை கண்டறிந்து திறம்பட காற்றை சுத்திகரித்து தருகிறது. ஹெபா பில்டர் என்பதுடன் உயிரூட்டப்பட்ட கார்பன் அமைப்பும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் ஏர்-ப்யூரிபையர் செயல்படுகிறது. சாதாரண வகை ஏர்-ப்யூரிபையர் முதல் அதிக விலை கொண்ட மேம்பட்ட வகையிலான ஏர்-ப்யூரிபையர்கள் கிடைக்கின்றன. அத்துடன் காற்று மாசு குறைந்திருக்கும்போது அதனை கண்டறிந்து அதற்கேற்ப குறைவான வேகத்தில் தானாகவே இயங்கும் தன்மை கொண்டது. குழந்தைகள் அருகில் இருந்தாலும் அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படாத அமைப்பு மற்றும் அதிக நாட்கள் உழைக்கக்கூடிய பில்டர் வசதி என ஏர்-ப்யூரிபையரில் கிடைக்கின்றன. தொடுதிரை வசதியுடன் எங்கும் எடுத்து செல்லக்கூடிய அமைப்புடன் உள்ளதால் எந்த அறையிலும் எடுத்து சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்-ப்யூரிபையர் என்பது அதிகபட்ச செலவாக நினைத்தாலும் நமது ஆரோக்கியத்திற்கு உகந்த தூய்மையான ஆக்ஸிஜனை வழங்க கூடியது என்பதால் பலனளிக்க கூடியதே.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புரஜக்டர்கள்


இன்றைய நாளில் அலுவலக மற்றும் பள்ளி பயன்பாடுகள் என்பதுடன் பெரிய விஸ்தாரமான வீடுகளிலும் புரஜக்டர் பயன்படுத்தப்படுகிறது. புரஜக்டர் மூலம் சற்று பெரிய காட்சி திரை கொண்டு வீடியோ காட்சிகளை காண முடியும். அலுவலகம் மீட்டிங் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் திட்ட காட்சிகளை வெளிப்படுத்த புரஜக்டர் பயன்படுகிறது. இதில் காட்சி திரைகளை எங்கும் சுலபமாக மாட்டி புரஜக்டர் கொண்டு படங்களை ஓடவிட செய்யப்படுகிறது. இந்த புரஜக்டர் இன்றைய நாளில் பெரிய அளவில் இல்லாது, சிறிய காம்பாக்ட் அளவுகளில் வருகின்றன. அதுபோல் திறம்பட்ட தொழில்நுட்ப வசதிகளை கொண்டவாறு புரஜக்டர் வருகின்றன.

புரஜக்டர் ரெசுலுஷன் அளவுகள்

ரெசுலுஷன் என்பது புள்ளிகளின் எண்ணிக்கை (அ) பிக்சல் என்ற காட்சி திரை அளவீடுகளை குறிப்பதாகும். அதிகபட்ச ரெசுலுஷன் என்பதன் மூலம் தரமான காட்சி மற்றும் தெளிவான காட்சிகளை காண்பது முடியும். ஹை- ரெசுலுஷன் மூலமாக துல்லியமான சார்ட் மற்றும் கிராப், எழுத்துக்கள் மற்றும் எச்.டீ. வீடியோ காட்சிகளை வெளி கொணர முடியும். இந்த ரெசுலுஷன் என்பது 1920ஜ்1200 என்ற எண்ணிக்கை அளவு என்றவாறு குறிக்கப்படும். அதாவது நீளவாக்கில் 1920 புள்ளிகளும், குறுக்கு வாட்டில் 1200 புள்ளிகளும் கொண்டது இந்த புள்ளிகள் என்பது மொத்தமாக 2,304,000 புள்ளிகள் கொண்டு காட்சிகளை வெளிப்படுத்தும்.வியாபார புரஜக்டர் ரெசுலுஷன் SVGA, XGA, WXGA, WVXGA என்பது 800ஜ்600 குறைந்தது முதல் 1920ஜ்1200 என்ற அதிகபட்சமானது வரையில் கிடைக்கின்றன. ஹோம் தியேட்டர் புரஜக்டர் என்பது 1280ஜ்720 பிக்சல் மற்றும் 1920ஜ்1080 பிக்சல் என்ற அளவீடுகளுடன் HDTV தரத்துடனும், ப்ளூ-ரே பார்மேட் கொண்டவாறும் கிடைக்கின்றன.

சுலபமாக பயன்படுத்த ஏற்ற புரஜக்டர்

புரஜக்டர் என்பதை சுலபமாக இயக்கிட ஏற்ற வசதிகள் உள்ளன. அதாவது ஹெச்டிஎம்ஐ என்பது உடனடி டிஜிட்டல் இணைப்பு முதல் எச்.டீ. ரெசுலுஷன் உபகரணங்கள் வரை இணைக்க வசதியாக உள்ளது. இதே போர்ட் மூலம் டிஜிட்டல் ஆடியோ உபகரணத்தை இணைக்க முடியும்.வயர்லெஸ் இணைப்பு வசதியுடன் புரஜக்டர் வருவதால் கேபிள் இணைப் பின்றி பலவித உபகரணங் களுடன் இணைத்து வீடியோக்களை காட்சிபடுத்த முடியும்.அதுபோல் நீள வாக்கிலான காட்சி மற்றும் குறுக்கு வாட்டிலான காட்சியை சுலபமாக மாற்றி அமைத்திடும் வசதி உள்ளது. இதன் மூலம் சரியான படியான காட்சியமைப்பை வெளிப்படுத்த வசதி ஏற்படுகிறது.முந்தைய பழைய புரஜக்டர் போல் வெப்பம் குறைந்த பிறகு தான் ஆன்/ஆப் செய்திட வேண்டிய அவசியமில்லை. தற்போதைய புதிய புரஜக்டர்கள் உடனடியாக ஆன்/ஆப் செய்யும் வசதியுடன் கிடைக்கின்றது.

புதிய புரஜக்‌ஷன் தொழில்நுட்பங்கள்

புரஜக்டர்களில் உள்ள புரஜக்‌ஷன் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 3 சிப் மற்றும் 3 எல்.சி.டீ. தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இவை மின் சேமிப்பு வசதியுடன் கூடிய புரஜக்‌ஷன் வெளிப்பாடை தருவதுடன், பிரகாசமான காட்சி என்பதுடன் உயிரோட்டமான காட்சியையும் வெளிப்படுத்துகின்றன. அதிகபட்ச வண்ண பிரகாசம் என்பதுடன் அதிகபட்ச வெண்மை பிரகாரத்தையும் தரவல்லது. புதிய 3 எல்.சி.டீ. என்ஜின் என்பது கலர் வீல் அமைப்பின்றி உள்ளதால் வெண்மை மற்றும் வண்ணத்திற்கு மாறும்போது ஏற்படும் தடையின்றி செயல்படும்.

காட்சி அமைப்பிற்கு ஏற்ப மாற்றம் செய்திடும் வசதி

புரஜக்டர் இருக்கும் இடம் மற்றும் உருவத்தின் அளவு என்பதை கருத்தில் கொண்டு அறையின் அளவிற்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதி உள்ளது. அதாவது அறை அளவும், புரஜக்டர் உள்ள இடமும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற காட்சி வெளிப்பாடு நிகழ்கிறது. இதற்கென சுலபமான இயக்க வசதிகள் உள்ளன. அதுபோல் தனிப்பட்ட வெண்திரை அமைப்பு இன்றி சுவர் பகுதியிலேயே காட்சியை தெளிவுற வெளிப்படுத்தும் அமைப்பும், எழுதி காட்ட வேண்டிய நிகழ்வுகளை எழுதி காட்ட தனிப்பட்ட வசதியும் புரஜக்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய புரஜக்டர்கள் ஏராளமான நவீன வசதிகளுடன் சுலப இயக்க முறைகள் வருகின்றன.

உலகின் மிக சிறந்த மொபைல் ஆப்ஸ்

ஸ்மார்ட் போன்களின் செயல்பாடு என்பது அதிலுள்ள அதிகபட்ச ஆப்களை கொண்டே சிறப்புற அமைகிறது. இவை நமது அன்றாட அலுவலக மற்றும் நம் தேவைப்பணிகளை செய்திட உதவுகிறது. இந்த ஆப்ஸ்கள் என்பது ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளங்களில் இயங்கிடும் அமைப்பில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிக பயன்பாட்டு நிலையில் உள்ள சில ஆப்ஸ்களை பற்றி அறிவோம்.அதிக பயனுள்ள மொபைல் ஆப்ஸ்கள் எனும் போது கேம்ஸ்கேனர், ஷேர்ஆப், ரிமிண்டோ, மஸ்ட்பின், பெட்ச்ரோட்ஸ், ஸ்பிரிங்வேட், லுமோசிட்டி, வாலட் டிராகர் போன்றவை உள்ளன.

உலகின் மிகச்சிறந்த கேம் ஸ்கேனர்

உலகின் மிகச்சிறந்த, முதல் தர டாகுமெண்ட் ஸ்கேனிங் மற்றும் ஷேரிங் ஆப் என்றவாறு தேர்வு செய்யப்பட்டது கேம்ஸ்கேனர் ஆப். இன்றைய நாளில் இந்த ஆப் சுமார் 100 மில்லியன் மொபைல்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 நாடுகளில் உள்ள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த ஆப்ஸ் ஒவ்வொரு நாளும் 50,000க்கு மேற்ப்பட்ட புதிய பதிவாளர்களை பெற்று வருகிறது. அவ்வப்போது செய்யப்படும் புதிய மாற்றங்கள் உடனுக்குடன் அப்கிரேட் செய்யப்படுகிறது.நாம் ஸ்கேனிங் செய்யும் டாக்குமெண்ட் என்பதில் உள்ள எழுத்துகளை திறம்பட ஸ்கேனிங் செய்து அதனை அதே வடிவில், கிரேஸ்கேல், மேஜிக்கலர், கருப்பு வெள்ளை என்றவாறு பலதரப்பட்ட பிரிவுகளில் மாற்றம் செய்யும் வசதி உள்ளது. மேலும் டாக்குமெண்ட்டை ஸ்கேன் செய்தவுடன் உடனடியாக பி.டி.எப்-ஆக மாற்றும் வசதியும் உள்ளது.

முக்கியமான தகவல்களை சேரிக்க ஏற்ற மஸ்ட்பின்

மஸ்ட்பின் என்பது முக்கியமான தகவல்களை ‘பின்’ அமைப்பில் பாதுகாப்புடன் பகிரவும், சேமிக்கவும் விதியான ஆப், தகவல்களை உள்வாங்குவது, சேமிப்பது, பிரித்தளிப்பது மற்றும் பகிர்வது என்றவாறு சிறப்புமிகு பணிகளை மஸ்ட்பின் ஆப் வழங்குகிறது. மஸ்ட்பின் என்ற ஆப், ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கிட கூடியது. இதனை ஆப்பிள் ஸ்டோர் மூலம் பெற்றிட முடியும்.முக்கியமான தகவல்களையும், மறக்கமுடியாத நினைவுகளை எந்த நேரத்திலும் உள்வாங்கி கொள்ளும். பின் அதனை அதற்கென உள்ள பிரிவுகளில் சேமிக்கிறது. நாம் மட்டுமே காண கூடிய வகையிலான மேம்பட்ட பாதுகாப்பு வசதியுடன் உள்ளது. தேவையான தகவல்களை சுலபமாக மற்றவர்க்கு பகிரவும் வாய்ப்பளிக்கிறது.

நமது பணிகளை சிறப்புடன் ஒருங்கினைக்கும் ஸ்பிரிங்பேட்

நமது அன்றாட பணிகளை சிறப்புற ஒருங்கினைக்க செய்திட வகையில் ஸ்பிரிங் பேட் உதவு புரிகிறது. நமது திட்டங்கள், குறிப்புகள், உணவு குறிப்புகள் போன்றவைகளை நிர்வகிக்க ஏற்ற ஆப்ஸ். தனிப்பட்ட ஆர்கனைஸர் ஆப் என்றவாறு சிறந்த ஆப்ஸ்-ஆக அறியப்படுகிறது. நோட்புக் அமைப்பில் நமது குறிப்புகளை குறித்து வைக்க ஏற்றது. ஒவ்வொரு முறையும் பழைய குறிப்புகளை அழிக்கவும், புதியதாக ஒன்றை இணைக்கவும் வழிவகை உள்ளன. இந்த குறிப்புகளை தேவையின் போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்களுக்கு சுலபமாக பகிரவும் முடியும். குறிப்புகளை பழைய நோட்புக் வடிவிலேயே குறித்திட வழிவகுப்பதால் பலரின் விருப்பமான ஆப்-ஆக சிறந்து விளங்குகிறது.

மூளைக்கு பயற்சி அளிக்கும் லுமோசிட்டி

லுமோசிட்டி என்பது மூளை பயிற்சி அறிவியலின் தலைவராகவே கூறப்படுகிறது. இந்த ஆப் மூலம் நமது நினைவாற்றல் திறனை மேம்படுத்த பயிற்சி அளிப்பதுடன், மூளையோடு போட்டி போடக்கூடிய ஆப்-ஆகவும் செயல்படுகிறது. உலகளவில் சுமார் 50 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஆப்-ஆன லுமோசிட்டியில் புதிய வெர்ஷன்கள் அவ்வப்போது வருகின்றன. 40-க்கும் மேற்பட்ட அறிவியல் சார் விளையாட்டுகள், வெப்- அடிப்படையிலான தனிப்பட்ட பயிற்சி திட்டங்கள், நமது செயல்பாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப வாழ்த்துக்களை தெரிவிக்கும் அமைப்பாகவும் உள்ளது.

ஷேர் ஆப்

புதிய மேம்பட்ட ஐபோன் ஆப்தான் ஷேர் ஆப். ஷேர் ஆப் மூலமாக ஆடியோ, மியூசிக் பைல்ஸ் மற்றும் ஜோக்குகளை Whatsapp வாயிலான நேரடியாக நண்பர்களுக்கு பகிரமுடியும். வாட்ஸ்அப் மூலம் நேரடியாக, ஆடியோ பைல்களை பகிர முடியாது. ஆனால் ஷேர் ஆப் மூலம் சுலபமாக பகிரமுடியும்.
ஷேர் ஆப் மூலம் ஆடியோ ரெக்கார்டிங், மியூசிக் பிளேயர், பலதரப்பட்ட ஜோக்ஸ்-யை பகிரும் அமைப்பு என பலதரப்பட்ட வசதிகளுடன் கூடியவாறு ஷேர் ஆப் கிடைக்கின்றது. ஷேர் ஆப் மூலமாக நாம் கேட்கும் பாடல்களை நேரடியாக ரெக்கார்டு செய்ய முடிகிறது என்பதால் நமக்கு தேவையான போது அப்பாடல்களை கேட்க வசதியான ஆப் ஆக உள்ளது. மேற்சொன்ன பிரபலமான ஆப்ஸ்களில் பல ஆப்ஸ்கள் அன்றாட பயன்பாட்டிற்கு அதிகமாக உதவிபுரிகின்றன.