இனி E-TDSசெய்ய வேண்டிய அவசியம்இருக்காது கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர்மதிப்புமிகுதென்காசி ஜவகர்IAS அவர்கள் உறுதி

தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியின் சார்பில் கருவூலகணக்குத்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் கருவூலத்துறைஆணையாளர் திருதென்காசி ஜவகர் அவர்களைமாநிலத்தலைவர் செமுத்துசாமி அவர்கள்தலைமையில் பொதுச்செயலாளர் செல்வராஜ் மாநிலபொருளாளர் கே.பி.ரக்‌ஷித்ஆகியோர்கடந்த 8ம் தேதிசந்தித்துஎவ்வாறு சேமநலநிதி சந்தா (gpf)பிடித்தம் நேரடியாக அவரவர்கணக்கில் வரவுவைக்கப்படுகிறதுஅதேபோன்று ஊழியர்களின்மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம்செய்யப்படும் வருமானவரித்துறை அவ்வப்பொழுதுஅவரவர் PAN கணக்கில் வரவுவைக்கப்பட வேண்டும் என்றகோரிக்கைவிடுக்கப்பட்டது.அதனை கவனமுடன் கேட்டகருவூல கணக்குத் துறைமுதன்மைச் செயலாளர் திரு தென்காசி ஜவகர் அவர்கள் ஊதியம் ஆன்லைனில் பெரும் வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் E-TDS செய்யப்படாததால் form 16கிடைக்காதகாரணத்தினால் தானே வருமான வரித்துறை நோட்டீஸ்பெற்று அபராதம் செலுத்தும்நிலை வந்துள்ளது என்று நினைவுகூர்ந்து அதன் அடிப்படையில் மாநிலகணக்காயர் அலுவலகம்(AG)மற்றும் வருமானவரித்துறைஅலுவலகம( IT) கருவூலகணக்குத் துறை(Tresury)அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் நவம்பர் 1 தேதி முதல் மாதாந்திர ஊதியத்தில் பிடிக்கப்படும் வருமானவரி அவரவர் PAN கணக்கில் அவ்வப்போது மாதந்தோறும்வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்தார் அதற்குதேவையான மென்பொருள்தயாரிக்கப்பட்டு விட்டது என்றும்கூறினார். விரைவில்கருவூல கணக்குத்துறை நடைமுறைப்படுத்த உள்ள இந்தநடைமுறையால்இடிடிஎஸ்செய்வது இனிமேல்தேவைப்படாது .மார்ச் மாதம்ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள்நேரடியாகவருமான வரி படிவம் தாக்கல்செய்யலாம்என அறியவருகிறது இது சார்பான அறிவிப்பு விரைவில்வெளியிடப் படும் என்றும் நமதுகோரிக்கையின் மீதுஉடனடிபதில் எழுத்துப்பூர்வமாக ஓரிருநாளில் அனுப்பிவைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments