தாட்கோ திட்டம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் 

தாட்கோ திட்டம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்   தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல் படுத்தப்படும் 12 பொருளா தார மேம்பாட்டுத் திட்டங்களுக் காக விண்ணப்பங்கள் ஆன்-லைன்மூலம் வரவேற்கப்படு கின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம். நிலம் வாங் கும்திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக் கான சுய வேலை வாய்ப்புத் திட்டம், சட்டப்பட்டதாரி களுக்கு நிதி உதவி,சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி உட்பட 12 பொருளா தார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தாட்கோ இணைய தள முகவரியில் (http://application. tahdco.com) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்ய லாம்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments