டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த குறைந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது வித்தியாசமான புதிய ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா என்பது தான் அது. MyJioAppல் இதற்கான பேனரை கிளிக் செய்து 'Participate now'என்பதை கிளிக் செய்யவும். பின்னர் டெய்ரி மில்க் சாக்லேட் ரேப்பரின்(Wrapper) பார்கோடை ஸ்கேன் செய்யவும். பின்னர் அது சரியானதாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 7 முதல் 8 நாட்களுக்குள் உங்கள் ஜியோ அக்கவுன்ட்டில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏற்கனவே நீங்கள் வேறு ஏதேனும் பிளான் ஆக்ட்டிவேட் செய்திருந்தால் அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. இந்த டேட்டா கூடுதலாக சேர்க்கப்படும். ரூ. 5, 10, 20,40,80,100 மதிப்புள்ள டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் இந்த ஆஃபர் வழங்கப்படும். மேலும், செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments