கருணாநிதி இல்லாத திமுகவில் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள்

ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள் | எம்.சரவணன் | அண்ணா, கருணாநிதி என்ற மாபெரும் வரலாற்று நாயகர் களுக்கு அடுத்து, திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க இருக் கிறார் மு.க.ஸ்டாலின். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் முதல்வரான கருணாநிதி யிடம் கட்சித் தலைவர் பதவியும் வந்து சேர்ந்தது. அதுமுதல் கடந்த 7-ம் தேதி மறையும் வரை 49 ஆண்டுகளுக்கு திமுக தலைவராக இருந்தார் கருணாநிதி. இந்த 49 ஆண்டுகளில் 19 ஆண்டு கள் அவர் முதல்வராக இருந்துள் ளார். 30 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. எம்ஜிஆர் இருக்கும் வரை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு திமுகவால் ஆட்சி அதிகாரத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், கட்சியை கட்டுக் கோப்பாக, வலிமையோடு வழிநடத் தினார். இருமுறை கட்சி பிளவு பட்டபோதும், 1991-ல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தபோதும் திமுக என்ற கட்சியின் கட்ட மைப்பை யாராலும் அசைக்க முடியவில்லை. மாநில அரசியலில் மட்டுமல் லாது, தேசிய அரசியலிலும் கோலோச்சினார் கருணாநிதி. 1989-ல் வி.பி.சிங், 1996-ல் தேவ கவுடா, 1997-ல் ஐ.கே.குஜ்ரால், 1999-ல் வாஜ்பாய், 2004, 2009-ல் மன்மோகன் சிங் ஆகியோர் தலை மையில் கூட்டணி ஆட்சி அமைந் ததில் கருணாநிதியின் பங்களிப்பு மிக அதிகம். இப்படிப்பட்ட மிகப் பெரிய ஆளுமையான கருணாநிதி யின் இடத்தை நிரப்ப வருகிறார் ஸ்டாலின். கட்சித் தலைவரின் மகன் என்றா லும், ஸ்டாலின் எடுத்த எடுப்பி லேயே பதவிக்கு வந்துவிட வில்லை. பள்ளியில் படிக்கும் போதே அரசியலில் இறங்கிய அவர் இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என கட்சியிலும், எம்எல்ஏ, சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என ஆட்சியிலும் படிப்படியாகவே முன்னேறினார். கட்சியிலும், ஆட்சியிலும் இதுவரை கிடைத்த பொறுப்புகளை திறம்படவே செய்திருக்கிறார் என் றாலும் விமர்சனங்களும் வராமல் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தையும் ஸ்டாலினே முடிவு செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் திமுக ஒரு இடம்கூட பெற முடியவில்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தொடர்ந்து பல்வேறு மாற்றங் களையும், இக்கட்டான சூழ்நிலை களையும் சந்திக்கத் தொடங்கியது. அதேநேரத்தில், கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது திமுக. ஆனாலும்கூட, அதிமுக ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியவில்லை என திமுக ஆதரவாளர்களே விமர்சித்தனர். கருணாநிதி இல்லாத திமுகவை அதே கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்வது என்பது சாமானிய வேலை அல்ல. இந்தப் பணியில் ஸ்டாலின் எண்ணற்ற சவால்களை சந்தித்தாக வேண்டும். குடும்பத்திலும், கட்சியிலும் பலமாக உள்ளவர்களை சமாளிக்க வேண்டும். கருணாநிதி இருக்கும் போதே மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கென்று இன்னமும் ஆதர வாளர்கள் திமுகவில் உள்ளனர். மாநிலங்களவை திமுக குழுத் தலைவராக உள்ள கனிமொழிக்கும் கட்சியில் ஆதரவாளர்கள் உள்ள னர். இவர்கள் இருவருக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும். மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனையும் விட்டுவிட முடியாது. குடும்பத்தில் மூவருக்கு முக்கி யப் பதவி கொடுத்தால் கட்சிக்குள் ளும், வெளியிலும் கடும் விமர்சனங் கள் எழும். அதையும் சமாளித்து பொறுப்புகளை பகிர்ந்தளிக்க வேண்டும். இதுவும் சவாலானதே. கருணாநிதியின் மறைவு, உறவுகளுக்கு மத்தியில் இருந்த மனஸ்தாபங்களை நீக்கி, அவர் களை நெருங்கிவரச் செய்திருப்ப தாகவே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்த ஒற்று மையைக் கட்டிக்காக்க வேண்டிய மிகப்பெரிய சவாலும் ஸ்டாலினுக்கு காத்திருக்கிறது. நவம்பர் - டிசம்பரில் ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ் கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அதோடு சேர்த்து கருணாநிதியின் மறைவால் காலி யான திருவாரூர், அதிமுக உறுப்பினர் மறைவால் காலியான திருப்பரங்குன்றம் என 2 தொகுதி களில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆளுங்கட்சியின் செல் வாக்கையும் மீறி இதில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அத னால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏற்பட்ட கரும்புள்ளி போல மீண்டும் விழுந்துவிடாமல் இருப்பதிலும் அவர் கவனமாக இருக்க வேண்டும். 2011, 2016 பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்த திமுகவுக்கு வரும் 2019 மக்களவைத் தேர்தலில் வென்றாக கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அனு பவம் உள்ளது. ஆனால், கருணாநிதி இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும். இது தொடர்பாக திமுக முக்கிய தலைவர் ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலினுக்கு நீண்ட அனுபவம் உள்ளது. வழக்கமான ‘அரசியல் வாரிசு’ என்ற அவரை யாரும் நிராகரித்துவிட முடியாது. ஆனா லும்கூட, ஒவ்வொரு சந்தர்ப்பத்தி லும் கருணாநிதியோடு அவரை ஒப்பிடுவார்கள். ‘கருணாநிதி இருந்திருந்தால் இப்படி செய்திருப்பார்.. இப்படி நடந்திருக் காது’ என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும். இதுதான் ஸ்டாலினுக்கு முன்புள்ள மிகப்பெரிய சவால். வெற்றிகளைவிட அதிக தோல்வி களை சந்தித்தவர் கருணாநிதி. தோல்விகளைக் கண்டு அவர் ஒருபோதும் துவண்டதில்லை. எனவே, அண்ணா, கருணாநிதி வரிசையில் இவரும் கட்சியைத் திறம்படவே நடத்திச் செல்வார்’’ என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments