அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பதிவாளராக ஜெ.குமார் பொறுப்பேற்பு

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேட்டில் பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசனுக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்குமாறு பல்கலைக் கழக வேந்தரான தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அந்த சங்கம் சார்பில் கடிதம் அனுப் பப்பட்டது. இந்நிலையில், பதி வாளர் எஸ்.கணேசன் நேற்று முன்தினம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பதிவாளராக அண்ணா பல்கலைக் கழக திட்டமிடுதல் மற்றும் மேம் பாட்டு இயக்குநராக பணியாற்றி வந்த ஜெ.குமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத் தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சுரப்பா பிறப் பித்தார். இதைத்தொடர்ந்து ஜெ.குமார் பதிவாளராக நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார். பதிவாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.கணேசன், மருத்துவ இயற்பியல் துறை பேராசிரியராக பணியை தொடர உள்ளார். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அருள் அறம் கூறும்போது, “பல்கலைக்கழக துணைவேந்தரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், விரைவில் முறைப்படி நிரந்தர பதிவாளரை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments