வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு 

தமிழகத்தில் மொத்தம் 20 சுங்கச் சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் 10 முதல் 12 சதவீதம் வரை யில் கட்டணம் உயர்வு செய்து வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் என தனித்தனியாக பிரித்து சுங்கச்சாவடி களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த கட்டண உயர்வு களால் போக்குவரத்து நெரிசலை கணக்கு காட்டி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே வழக்கம்போல், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மொத்தம் 20 சுங்கச்சாவடிகளில் 10 முதல் 12 சதவீதம் வரையில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைவில் வெளியிடவுள்ளது. இதில், சேலம்-உளுந்தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை, நல்லூர் - சென்னை, திருச்சி-திண்டுக்கல், நத்தக்கரை-வீரசோழ புரம், விக்கிரவாண்டி - தடா (ஆந்திர மாநிலம்), பொன்னம்பலபட்டி உள் ளிட்டவை இடம் பெறும். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒரு வரிடம் கேட்ட போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 20-க்குள் மேற் பட்ட சுங்கச்சாவடிகளில் கட்ட ணம் மாற்றியமைக்கப்பட்டு அமல் படுத்தப்படும். கட்டண உயர்வு வாகனங்களுக்கு ஏற்றவாறு 10 முதல் 12 சதவீதம் வரையில் இருக் கும். கட்டண விபரங்கள் குறித்து முழு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்’’ என்றார். பராமரிப்பு இல்லை இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் கூறியதாவது: ‘‘நெடுஞ்சாலைகள் பராமரிக்க ஆண்டுதோறும் 10 முதல் 15 சத வீதம் வரையில் கட்டணம் உயர்த்தப் படுகிறது. ஆனால், திட்டமிட்டப்படி சாலை விரிவாக்கம், பராமரிப்பு போன்ற பணிகள் நடத்துவதில்லை. குறிப்பாக, சென்னை - வாலாஜா, வாலாஜா - கிருஷ்ணகிரி, சென்னை - திண்டிவனம், மாதாவரம் - தடா ஆகிய வழித்தடங்கள் தற் போதுள்ள 4 வழி பாதையை 6 வழி பாதையாக மாற்றப்படும் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், இன்னும் பல்வேறு இடங்களில் பணிகளை முழுமையாக முடிக்காமல் இருக் கின்றன. ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பல மாதங்களாக இருப்பதால், சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. வாலாஜா - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மட் டும் ஆண்டுதோறும் ஏற்படும் சாலை விபத்துக்களில் 480-க் கும் இறக்கின்றனர். ஆனால், தற்போதும் 6 வழி பாதைக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் வசூலிக் கின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்து, ஆண்டு தோறும் பராமரிக்காமல் இருக் கும் சம்பந்தப்பட்ட தனியார் நிறு வனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நெடுஞ்சாலைகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். நீண்ட கால மாக கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகளை இழுத்து மூட வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments